ஆளுமையர்உரை 103 & 104 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி!                                                                               தமிழா விழி!  தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆடி 05, 2055 ஞாயிறு 21.07.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 103 & 104 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் உழைப்புச் செம்மல் இராம.குரூமூர்த்தி, பொது மேலாளர்,…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை தொண்டர்க்கு வேண்டுவன தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,                   தந்நல மறுப்பும், தகவும் வேண்டும்        105           இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;       இருளும் தொண்டும்           விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்;            கழியிருள் அதனுள் கடந்தனன்…

சண்டாளன் என்பது சனாதனத்தின் வித்தே! | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி

முற்றம் இணையத் தொலைக்காட்சி இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே.தளபதி சண்டாளன் என்பது சனாதனத்தின் வித்தே! >

சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 491-500 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 501. acknowledge, doctrine of – ஒப்புகைக் கோட்பாடு இசுலாமியர் சட்டத்தில் இது தந்தைமை ஒப்புகையைக் குறிக்கிறது. மகவேற்புச்சட்டத்தில், ஏற்கப்பெற்ற குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கை இரு்நததாகக் கருதுவதன்அடிப்படையில் ஒப்புகைக் கோட்பாடு உள்ளது. இருப்பினும் உரிய குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கையின்றித் தகாப் புணர்ச்சியிலோ பரத்தமையிலோ பிறந்ததாயின் இது பொருந்தாது. 502. acknowledgement – ஏற்கை ஒப்புகை பெறுகை ஒப்பம்ஒப்புகைசீட்டுஏற்றுக்கோடல் ஒன்றின் முதன்மையை அல்லது சிறப்பை அல்லது ஒருவரின்…

புதிய சட்டம் கொண்டு வந்தாலன்றி ஆட்சித் தமிழ் நிறைவேறாது – இலக்குவனார் திருவள்ளுவன்

முற்றம் இணையத் தொலைக்காட்சி இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே.தளபதி புதிய சட்டம் கொண்டு வந்தாலன்றி ஆட்சித் தமிழ்ச்சட்டம் நிறைவேறாது < https://youtu.be/g7oIcYWAHD4 >

அறிவுக் கதைகள் 1. கல்வியும் கல்லாமையும் & 2. கருமியும் தருமியும் – கி.ஆ.பெ.

(அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் கவிராசர் செகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர். ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றுாரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் செகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டு,‘வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?’ – என்று கேட்டார். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!’ என்றார். ‘பார்த்தாயிற்றே; பின்…

சட்டச் சொற்கள் விளக்கம் 491- 500 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 491- 500 491. Achromatic (achromatically) எழுதப்பெறா   வாய்மொழியான எழுத்தில் வராததான நிறமற்ற சாயல் மற்றும் செறிவு இல்லா   இச்சொல் சட்டத்தில் எழுத்தாவணமற்ற வாய்மொழிக் கூற்றைக் குறிக்கிறது. எனவே, எழுதப்பெறா ஆவணம் எனலாம். 492. Acid எரி நீர்மம்எரிமம்   புளிமம் காடிப் பொருள்   அமிலம்     இந்தியத் தண்டனைச் சட்டம், 1860 குற்றவியல் சட்டம் (திருத்தச்) சட்டம், 2013 இன் பிரிவு 326(ஆ)…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 95 : அத்தியாயம்-60 : அம்பரில் தீர்ந்த பசி-தொடர்ச்சி) என் சரித்திரம் அங்கே இல்லை என்றைக்குப் புறப்பட்டேன், எப்படி நடந்தேன் முதலியவற்றில் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆவேசம் வந்தவனைப் போலக் காரையில் புறப்பட்டவன் திருவாவடுதுறைக்குச் சென்று நின்றேன். திருவாவடுதுறை எல்லையை மிதித்தபோது தான் என் இயல்பான உணர்வு எனக்கு வந்தது. நேரே மடத்துக்குச் சென்றேன். முதலில் ஓர் அன்பர் என்னைக் கண்டதும் என் சேம சமாசாரத்தை விசாரித்தார். நான் அவருக்குப் பதில் சொல்லவில்லை. “பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று அவரை…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்- தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் திருவள்ளுவர் அறிவியற் கவிஞரா? ‘அறிவியல் கவிஞரே’(?) என்னும் வினாவிற்கு விடை காணப் புகுமுன் ஒரு குறிப்பை எழுத வேண்டும். அக் குறிப்பு ஒரு நூலாசிரியன் தவறாது கொள்ள வேண்டிய நெறி பற்றியதாகும். அந்நெறி மொழி நெறி. இந்நூலின் தொடக்கம் முதல் இதுவரையும் சான்றுகளின் அழுத்தமாகச் சொல் அமைப்புகள் காட்டப் பட்டுள்ளன. இனியும் அவ்வாறு மேற்கொள்ளப்படும். தமிழ்ச் சொல் கட்டுக்கோப்பான அமைப்புடையது. சொல்லின் மூலம் ஆணிவேர் போன்றது. அந்த ஆணி வேரில்…

சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 481.  accusation குற்றச்சாற்று குற்றச்சாட்டு   குற்றம் சுமத்தல்   சட்ட நடவடிக்கைக்குரிய தீங்கையோ குற்றத்தையோ ஒருவர் செய்திருக்கிறார் அல்லது சட்டப்படி செய்யவேண்டியதைச் செய்யாதிருக்கிறார் என அவர்மீது சாட்டுவதே குற்றச்சாட்டுரை அல்லது குற்றச்சாட்டுரை ஆகும். பொதுவாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் குற்றவாளி என்றே எழுதியும் பேசியும் வருகின்றனர். குற்றஞ்சாட்டப்படுநரையும் குற்றம் மெய்ப்பிக்கப்பெற்றுத் தண்டனைபெற்ற தண்டனையரையும் இணையாகக் கருதக்கூடாது. 482. Accused appears to be in sound mind உசாவலின்(விசாரணையின்)…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்!

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம்  9. அனைய கொல்! அறம் பொருள் இன்பம் என்ற மூன்றன் இயைபினை உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்குரிய மதிப்பளிக்கும் உள்ளம் உடைய ஓர் உயர்குலப் பெண், கார் காலத்து மாலைப் பொழுதில் தலைவாயிற்கண் யாருடைய வருகையையோ ஆவலோடு எதிர் நோக்கிக் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள். அவள் கணவன் பெருவணிகர் குடியில் வந்தவன்; அதனால் விழுநிதி ஈட்டும் விருப்பம், அவன் உள்ளத்தில் இயல்பாக ஊறிக் கிடந்தது என்றாலும், அவன், அப்பொருளொன்றே…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை-தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைதமிழினமும் குரங்கினமும் தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்;தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத்தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்;மரக்கிளை வாழும் மந்தியின் மானம்நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்!மானம் பரவுதற் கானவை இயற்றுக; தாய்மையும் பொதுப் பணியும் பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய,அறியாக் குழவி அலறுதல் போல,அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப்பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப்பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித்தாய்மைப் பண்பே…