வெருளி நோய்கள் 1229 -1232 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1225 -1228 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1229 -1232 1229.தாய்மாமா வெருளி- Avunculusphobia/Gufuphobia தாய்மாமா குறித்த அளவுகடந்த பேரச்சம் தாய்மாமா வெருளி.தந்தை மைத்துனர் வெருளி/அம்மான் வெருளி – Gufuphobia; தாய்மாமா வெருளி – Avunculusphobia என்று இருவகையாகக் குறிக்கப் பெறுகிறது. தந்தை மைத்துனர் என்றால் தாயின் உடன் பிறந்தவர். அப்படியானால், தாய்மாமா. எனவே, இரண்டையும் தாய்மாமா வெருளி என்றே சொல்லலாம்.தங்கை அல்லது தமக்கை மக்களுக்குத் தாய்மாமன்மார் சீர் செய்வதைத் தங்கள் கடமையாகவும் பெருமையாகவும் கருதுவர்.00 தாய்வழி அத்தை தொடர்பான அளவு…
குறட் கடலிற் சில துளிகள் 42 : இனத்தூய்மை கொள்வோம்- இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு!- தொடர்ச்சி) மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௫ – 455) மனம் தூய்மை யாதலும், செயல் தூய்மை யாதலும் தான் சேரும் இனத்தின் தூய்மையால் உருவாகும். பதவுரை: மனந்தூய்மை-மனநலன், உள்ளத் தூய்மை; செய்வினை தூய்மை-செயல் நயம்; இரண்டும்-இரண்டும்; இனம் – சேர்க்கை; தூய்மை-நன்றாதல்; தூ-பற்றுக்கோடு; ஆ-ஆகும்படி; வரும்-உண்டாம். மனத்தூய்மை என்பது மனத்தில் மாசு இன்றி இருத்தல். அஃதாவது தனக்குத் தீமை தரும் என்று கருதும்…
வெருளி நோய்கள் 1225-1228 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1221-1224 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1225-1228 தாத்தா, பாட்டி தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தாத்தா, பாட்டி வெருளி.தாத்தா பாட்டிகளின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 தாமி திபில்(Tommytibble) என்னும் அசைவூட்டப் படப்பாத்திரத்தின் மீதான அளவுகடந்த பேரச்சம் தாமி திபில் வெருளி.தாமி திபில்(Tommy Tibble) திம்மி திபில்(Timmy Tibble) ஆகிய இரட்டையர்களுள் தாமி திபில் ஒருவர். இவர்கள் திபில்கள் இரட்டையர்கள் அல்லது திபில்கள என அழைக்கப்படுகின்றனர்.00 தாம் பூனை, செறி சுண்டெலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாம் செறி வெருளி.தாம்,…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 நாள்: மாசி 24, 2057 ஞாயிறு 08.03.2026 காலை 10.00 மணி அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர்…
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3 கல்விக்கடமை : இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 – தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 3 : கல்விக்கடமை கல்விக்கடமை முழுவதும் அரசின் பொறுப்பு என்றானால் கல்வி நிலையம் யார் நடத்தினாலும் வணிகமாய் இல்லாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்தான் இருக்கும். இருப்பினும் இன்றைய சூழலில் மக்களின் நாட்டம் தனியார் கல்வி நிலையங்கள் மீதே உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மிகப்பெரிய கட்டடங்களுடனும் ஏந்துகளுடனும் இருப்பதைப் பார்த்து அரண்டு போகக்கூடாது. இவ்வசதிகள் கல்வி நிலையம்…
வெருளி நோய்கள் 1221-1224 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1216-1220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1221-1224 சில சூழல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமை குறித்த பேரச்சம் தாங்காமை வெருளி.உயர்வளிமண்டல ஈரப்பதத்தைச் சில தாவரங்களால் தாங்கிக் கொள்ள இயலாது. அதுபோல் சில சூழல்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.இதற்குச் சரியான சொல் பொறாமை(Intolerance) என்பதுதான். ஆனால், பொறாமை என்பதை அழுக்காறு என்னும் பொருளில்தான் பார்ப்போம். (அழுக்காறும் பொறாமையின் வெளிப்பாடுதான்.) பொறுக்காமை என்பதும் சரியான சொல்லே. ஆனால் பொறுக்குதல் என்பதன் எதிர்ச்சொல்லாகக் கருதக் கூடாது. எனவே, பொருள் குழப்பம வரக்கூடாது என்பதற்காகத் தாங்க இயலாமையைக்…
2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்
வணக்கம்தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டு நாள் புரட்டாசி 02,03, தி.பி.2057 /செட்டம்பர் 19, 20, 2026 மாநாட்டிற்குஆய்வுச்சுருக்கம்அனுப்ப பங்குனி 01, தி.பி.2057 / மார்ச்சு 15, 2026 வரைகாலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பில் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தை 2 பக்கங்களுக்குள் சொற்கோப்பில் (word file ) அளிக்கவும். . https://forms.gle/QN63VR5v2KJAH5VA9நன்றி ஒருங்கிணைப்பாளர்2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026, தொரண்டோ, கனடா
வெருளி நோய்கள் 1216 -1220 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1211-1215 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1216 -1220 பிறரால் தனித்து விடப்பட்டதாகக் கருதும் அளவுகடந்த பேரச்சம் தனியை வெருளி(Ermitophobia).பிறரிடமிருந்து ஒதுக்கப்பட்டு வாழ்வதால் உதவுவார் இல்லை என அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர்..இவ்வாறு பலவகையாகத் தனிமை தொடர்பான வெருளிகள் சொல்லப்பட்டாலும் அடிப்படையில் யாவும் ஒன்றே. திருமண வாழ்க்கையின்றித் தனித்து இருப்பதும் குடும்ப வாழ்க்கைக்குப் பின்னரும் பிறருடன் ஒன்றாமல் ஒன்றியாய் இருப்பதும் சிலர் இயல்பு. தனிமையில் இருக்கும் பொழுது துன்புறுத்தும் சிந்தனைகள் குவிந்து வாட்டும். தனித்த சூழல் கவலைகளைப் பெருக்கும். செயல்பாட்டுத் தடைகளும் ஏற்படும்….
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09 ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, ஒன்றிய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம்போட்டு மீட்டு வரும் ஒன்றிய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன்…
வெருளி நோய்கள் 1211-1215 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1206-1210 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1211-1215 1211. தற்பால் உறவர் வெருளி-Lesbophobia / Homophobia தற்பாலுறவு குறித்த பேரச்சம் தற்பாலுறவு வெகுளி.(தன்+பால்+ உறவு+வெருளி) தற்பால் உறவு கொள்பவர் தற்பால் உறவர்.இதனை, ஓரினச் சேர்க்கை என்றே அனைவரும் குறிக்கின்றனர். மனித இனம் மனித இனத்துடன்தான் உறவு கொள்ள வேண்டும். ஆணினம், பெண்ணினம் என்பது தவறு. பகுத்தலைக் குறிக்கும் பால் என்பதன் அடிப்படையில்தான், ஆண்பால் முதலான ஐந்து பால்பாகுபாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, பால் என்பது பாலினத்தைக் குறிக்கும். எனவே பால் அடிப்படையில் குறிப்பதே…
வெருளி நோய்கள் 1206-1210 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1201-1205 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1206-1210 தள்ளுவண்டி/பிள்ளைகளை உலாத்துவதற்கு அழைத்துச்செல்லும் உலாவண்டி(stroller) குறித்த வரம்பற்ற பேரச்சம் தள்ளுவண்டி வெருளி.உலா வண்டி என்றால் சுற்றுலாவிற்குச்ச செல்வதற்குரிய மகிழுந்து எனத் தவறாகக் கருதலாம் என்பதால் அதனைக் குறிக்கவில்லை. அதுபோல் தள்ளுவண்டி என்றால் சுமைகளைத் தள்ளிச் செல்ல உதவும் வண்டி என்று கருதக்கூடாது.00 தற்காப்புக்கலை(karate)பற்றிய தேவையற்ற அளவுக்டந்த பேரச்சம் தற்காப்புக்கலை வெருளி.தற்காப்புக் கலையில் ஈடுபடுவோர் தங்களின் கவனக் குறைவாலோ போதிய தேர்ச்சியின்மையாலோ தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனப் பேரச்சம் கொள்கின்றனர். தற்காப்புக்கலையில் ஈடுபடுபவர்களைப் பார்ப்பவர்களும் தேவையின்றிப்…
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியம், சொல்லதிகாரம், இணையவழியிலான பட்டயத்தேர்வு இணைய வழி வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன் நாள் மாசி 17,2057 / 01.03.2056 மாலை 4.45(தமிழ்நாட்டு நேரம்) புகு எண் & சொல் 81766444296 : avvai ஆத்திரேலியா தொல்காப்பிய மன்றம் தமிழ் ஐயா கல்விக்கழகம் ஒளவை அறக்கட்டளை, திருவையாறு
