உலகின் மிக மோசமான சட்டம் தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டமே| இலக்குவனார்திருவள்ளுவன்

உலகின் மிக மோசமான சட்டம் தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டமே! இலக்குவனார் திருவள்ளுவன் நேர்காணல் விசவனூர் வே.தளபதி முற்றம் இணையத் தொலைக்காட்சி < https://youtu.be/G70IRnDTWTI >

சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 461. accrue   –  உறு, சிறுகச் சிறுகத் தொகு  சேர்வுறு அடைவுறு  சேர்ந்தடை  வந்துறு உரிமையாகு உறு என்னும் சொல்லுக்கே மேற்குறித்த பொருள்கள் உள்ளன. இருப்பினும் உறுதல் என்பதை இணைப்புச்சொல்லாகவே பயன்படுத்துகிறாேம். திரட்டல் மூலம்  அல்லது  காலப்போக்கில் அல்லது நிதிப் பரிமாற்றம் காரணமாகப் பொருள் நிலை உயர்வது. திரட்டலுக்கு இரண்டு பொதுவான வரையறைகள் உள்ளன. சேமிப்பிற்கான வட்டி, வருமானம் அல்லது செலவுகளின் குவிப்பு. சட்டமுறைக் காரணம் அல்லது…

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்

அறிவுக் கதைகள் நூறு பதிப்புரை கதைகள் மலிந்த காலம் இது. கதை சொல்வோரும் பெருகியுள்ளனர். ஆனால் வெளிவரும் கதைகள் பெரும்பாலும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், அழிவுக் கதைகளாகவுமே விளங்குகின்றன. இது நாட்டிற்கு நன்மை தராத போக்கு என்று கருதுபவர் பலர். கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும்.தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு…

நினைவில் நிற்கும் ஆம்சுட்டிராங்கு!- இலக்குவனார் திருவள்ளுவன்

நினைவில் நிற்கும் ஆ ம்சுட்டிராங்கு! பகுசன் சமாசு கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் வழக்கறிஞராகவும் பலரது முன்னேற்றத்திற்கு ஏணியாகவும் திகழ்ந்த  ஆமிசுட்டிராங்கு(K.Armstrong)(18.01.2008/31.01.1977-21.06.2055/05.07.2024) படுகொலை செய்யப்பட்ட செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. வளர்ந்து வரும் தலைவரான அவர் கொலையுண்டு மறைந்த செய்தி பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல் தலைவர்களுக்குரிய நிறைகுறைகளைப் போல் செயற்பட்டுத் தொண்டர்களின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கியவர். இவரைப்பற்றி அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. இப்பொழுது இவரின் துயர மறைவு அந்நினைவலைகளை எழுப்பியுள்ளது. அவருடைய அறிமுகம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. அவர் அப்பொழுது மயிலாப்பூரில்…

சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 471. Accumulative judgement   திரள் தீர்ப்பு   கூடுதல் தீர்ப்பு   மற்றொரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு. முதல் தீர்ப்பின்படியான தண்டனை முடியும் வரை இரண்டாம் தீர்ப்பு செயலாக்கம் ஒத்திவைக்கப்படும். ஒரு வழக்கில் இரண்டு அல்லது மேற்பட்ட வெவ்வேறு குற்றச்செயல்களைப் புரிந்ததற்காக விதிக்கப்பெறும் தனித்தனி இரண்டு தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் செயற்படும் என்று தீர்ப்பு வழங்கல். தொடரியல் தீர்ப்பு  என்கின்றனர். தொடர் என்பதை அறிவியல் போன்று…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 95 : அத்தியாயம்-60 : அம்பரில் தீர்ந்த பசி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-60 அம்பரில் தீர்ந்த பசி செங்கணத்திலிருந்து காரைக்குப் புறப்படுகையில் விருத்தாசலரெட்டியாரிடம் பாகவதம், கம்பராமாயணம், திருக்கோவையார். திருக்குறள்ஆகிய புத்தகங்களை இரவலாக வாங்கிப் போயிருந்தேன். பாகவதம் மாத்திரம்ஏட்டுப் பிரதியாக இருந்தது. காரையில் பகல் வேளைகளில் அவற்றையும்என்னிடமிருந்த வேறு நூல்களையும் படித்து இன்புற்றேன். பாகவதம்படித்தபோது முதல் கந்தமும் தசம கந்தமும் என் மனத்தைக் கவர்ந்தன. .கிருட்டிணசாமி ரெட்டியார் தெலுங்கு பாகவதத்தைப் படித்து அதிலுள்ளவிசயங்களைச் சொல்வார். தமிழ்ப் பாகவதத்திலுள்ள சில சந்தேகங்களைஅவர் கூறிய செய்திகளால் நீக்கிக்…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை – தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர் திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான். திருவள்ளுவர் கவிஞரா ? திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன் திருவள்ளுவன்’, ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை. கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி,…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 8. திருமுருகாற்றுப்படை அறிமுகம் திருமுருகாற்றுப் படை, வீடுபேறு அடைதற்கு உரிய நல்லூழ் உடையான் ஒருவனை, அவ்வீடு பேற்றினை பெற்றான் ஒருவன், முருகக் கடவுளிடத்தே செல்க: சென்றால் வீடுபேறு பெறுகுவை” என வழி கூறியதாகப் பாடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் வரும் பொருநராற்றுப்படை முதலியன எல்லாம், பொருளைப் பெறுவோர் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை பொருள் தரும் தலைவன் பெயரால் வழங்கும் சிறப்புடையது. இதற்குப் புலவராற்றுப்படை என்றோர் பெயரும் இருந்தது என்பது,…

சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 451. accreditation மதிப்புச் சான்றளிப்பு   குறிப்பிட்ட நிரல் அல்லது நிறுவனம், உரிய தரப்பாடுகளுக்குப் பொருந்தி வருகிறதா என மதிப்பிட்டுத் தரச் சான்றளிப்பது.   தூதரைச் சான்றளித்து அனுப்புதல், அதிகாரப்பூர்வச் சான்றளிப்பு. ஒன்றின் தகுதியைக் குறிப்பதால் தகுதிக் குறியீடு என்றும் சொல்வர். 452. accredited ஏற்கப்பட்ட மதிப்பு ஏற்கப்பட்ட   முறைப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற எனவும் சொல்கின்றனர். எனினும் சுருக்கமாக ஏற்கப்பட்ட அல்லது மதிப்பேற்கப்பட்ட என்றே சொல்லலாம்….

ஆளுமையர்உரை 101 & 102 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

தமிழே விழி!                                                                               தமிழா விழி!க்குண செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்   (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰உ – 412) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 23, 2055  ****ஞாயிற்றுக் கிழமை ****07.07.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 101 & 102 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கலைமாமணி ஏர்வாடி…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 12 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை பூங்கொடி மலையுறையடிகளை அடைதல் தாயும் தோழியும் தன்னுடன் தொடர ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர் சாயா நாவினர் தங்கிடன் குறுகிக் காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க                   மலையுறை யடிகள் மலரடி வணங்கிக்  5 பூங்கொடி நிகழ்ந்தன கூறல்           காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம், ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம், தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம், அழுக்கிலா வாழ்க்கை…

தமிழ் வளர்ச்சித் துறையினருக்குத் தண்டிப்பு அதிகாரம் வழங்கிடுக! | இலக்குவனார் திருவள்ளுவன்

முற்றம் இணையத்தொலைக்காட்சி காணுரை இலக்குவனார் திருவள்ளுவன் விசவனூர் வே.தளபதி தமிழ்வளர்ச்சித்துறையினருக்குத் தண்டிப்பு அதிகாரம் வழங்கிடுக! < https://youtu.be/2PLH2TTllQM >