மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் – வைகோ

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் “தமிழ்நாட்டில் 47 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழி திட்டத்தை மாற்றி மும்மொழி திட்டத்தை செயற்படுத்த செயலலிதா அரசு முயல்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்” என வைகோ கூறியுள்ளார்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-   தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி…

ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராகத் தொடர் மறியல் போராட்டம்!

தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராக ஆகத்து 3 முதல் 7 வரை தொடர் மறியல் போராட்டம்! சென்னை தலைமைச் செயலகம் – திருச்சி மாவட்ட ஆட்சியரகம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு     தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், (ஆனி 17, 2046 / சூலை 02, 2015 அன்று) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் தலைமையேற்றார்.   காந்தியப் பேரவைத் தலைவர் திரு. குமரி அனந்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர்…

காமராசர் பிறந்தநாள் கவிதைப்போட்டி

   மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெறவுள்ள காமராசர் பிறந்த நாள் விழா கவிதைப் போட்டிக்கு, போட்டியாளர்கள் தங்களது கவிதைப் படைப்புகளை சூன் 30 ஆம் நாளுக்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து, மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமவீரர் காமராசர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பேரவை சார்பில் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். “எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?” என்ற தலைப்பில், மரபு மற்றும் புதுக்கவிதைகள்…

நிறுவ இருக்கும் தொல்காப்பியர் சிலை குறித்த கருத்தைத் தெரிவிக்கவும்

குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு தொல்காப்பியர் பிறந்த ஊராகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, தொகாப்பியருக்குச் சிலை அமைத்திடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிலை வடிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகின்றது. சிலையின் மாதிரி வடிவம் அணியமாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தொல்காப்பியர் படத்தை ஒட்டி இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படம்  தரப்பட்டுள்ளது. அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் முத்து.செல்வன் உறுப்பினர் தொல்காப்பியர் சிலை அமைப்புக் குழு. செயல் தலைவர் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை

சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கான பரிசுப் போட்டி

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் சிறுகதை/கவிதை/கட்டுரை நூல்களுக்கான 10ஆம் ஆண்டு பரிசளிப்புப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு 2013 முதல் 2015 ஆம் ஆண்டு சூலை வரை வெளியான நூல்கள் அனுப்பலாம். நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும், முற்போக்கு சிந்தனைகளை எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும். கவிதை நூல்கள் புதுக்கவிதையாகவோ, மரபுக் கவிதையாகவோ இருக்கலாம். கட்டுரை நூல்கள் தமிழ், வரலாறு, அறிவியல், இலக்கியம், சமூகம் சார்ந்தவையாக இருக்க வேண்டும். போட்டியில், முதல் பரிசாக உரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக உரூ.1000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும்…

சீரான கலைச்சொற்களுக்கு வேண்டுகோள் – செயபாண்டியன் கோட்டாளம்

   அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துருவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்கள் ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், சில கலப்புமொழிச் சொற்களாகவும், வேறு சில ஆங்கிலச் சொற்களாவும் அமைகின்றன. எல்லா எழுத்தாளர்களும் ஒரே சீராக எழுத வேண்டுமானாலும், ஒன்றுடனொன்று இயைபுடைய அறிவியல் நூல்கள் தமிழில்…

உதவிக்காக ஏங்கும் திருவள்ளுவர்! – தமிழ் இராசேந்திரன்

  தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில் ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர் ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுடன் 482/500 என்ற அளவு மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி வந்தது.   இந்நிலையில் அருகில் புதிதாகத் தோன்றிய ஆங்கில வழிப் பள்ளி நிருவாகத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நயவஞ்சகமாக…

பிரபாகரன் சிலையிடிப்பு : கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – வைகோ

பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து, 9 ஆம் நாள் நாகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்த ஆற்றலாலும் தடுக்க முடியாது! வைகோ அறிக்கை! தமிழ்க்குலத்தின் தவமைந்தன், தரணியில் தமிழ் இனத்திற்கு அடையாளத்தை- முகவரியை நிலைநாட்டிய  வரலாற்று நாயகன், நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்குப் பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் வழிபடும் ஐயனார் கோவில் வளாகத்தில் வெள்ளைப் புரவியின்…

வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு

வரும் வைகாசி 6, 2046 சூன் மாதம் 21 – ஆம் நாள் வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடைபெற உள்ளது. திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்வரி: tamilkavinjarsangam@gmail.com     திருக்குறள் தேசிய நூலாகுவதற்கு ஒத்துழைப்பு தரும் வண்ணம் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமெனத் தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறேன். – க.ச.கலையரசன், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம். 9551547027

கல்வியாற்றுரைக் கருத்தரங்கு – இந்து

‘தி இந்து’ – மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி வைகாசி 10 / மே 24  நடைபெறுகிறது   + 2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காகவே இந்து இதழ் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும்…