கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் பத்தாண்டிற்கு அறிவிப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர். மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள்  2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தன. தற்போது முதல்வரின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நிறுவனத்தின் 8- ஆவது ஆட்சிக்குழுக் கூட்டம் முதல்வரின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது. தமிழக முதல்வரால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: 1. 2010 – முனைவர் வீ.எசு. இராசம், (Former Senior…

ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! – பெ. மணியரசன்

ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!   காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்றும் ஒரு போலி நிறுவனம் என்பதைப் பதினான்காவது தடவையாக 27.09.2021 அன்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எசு.கே. அலுதார் தலைமையில் 27.09.2021 அன்று புதுதில்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டம் வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள்…

சேலம் நிறைகோல் தமிழ்ப் பேரவை சார்பில் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

  சேலம் நிறைகோல் தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவிற்குக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. கவிதைகளை அனுப்ப விரும்புவோர் கீழ்வரும் இணையத்தின் வழித் தங்களின் கவிதைகளை அனுப்பலாம். https://forms.gle/stabPG2ZXvJ6rphb8  அல்லது niraikol2020@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.  * நூலாக்கத்திற்கு 50 சிறந்த கவிதைகள் ஆசிரியர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும்.  * கவிதைகள் ஏ 4 தாளில் 20 வரிகளுக்கு மிகாமல் ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode) அமையபெற வேண்டும்.  * கவிதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் புரட்டாசி 29, 2052…

உத்தமத்தின் 20ஆவது இணைய மாநாடு

20 ஆவது தமிழ் இணைய மெய்நிகர் மாநாடு உத்தமம்(INFITT) கார்த்திகை 17+19 / 3-5.12.2021 படைப்புகள் வந்து சேருவதற்கான இறுதி நாள் 30.09.2021 அனுப்ப வேண்டிய மின்வரி cpc2021@infitt.org   முழுத் தகவல்களுக்கு www.tamilinternetconference.org  

அகரமுதலி விருதுகள், கடைசி நாள் 31.08.2021

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் பின்வரும் விருதுகள் வழங்கப்பெறுகின்றன. விருதிற்கு விண்ணப்பம் பெறக் கடைசி நாள்: ஆவணி 15, 2052 / 31.08.2021 தூய தமிழ்ப் பற்றாளர் விருது நற்றமிழ்ப் பாவலர் விருது தூய தமிழ் ஊடக விருது தேவநேயப் பாவாணர் விருது வீரமாமுனிவர் விருது விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி அந்தந்த விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. நேரில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல் தளம், எண்:…

கவிதைக்கான இளம்பிறை விருது, கடைசி நாள் 30.11.2021

சிறந்த தமிழ்க்கவிதைக்குக் கலைஞன் பதிப்பகம் வழங்கும் கவிதைக்கான இளம்பிறை விருது பரிசுத் தொகை உரூ.20,000/ கடைசி நாள் : கார்த்திகை 14, 2052  30.11.2021 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி Kavithai2021padaipakkam@gmail.com பிற விவரங்களைப் பின்வரும் படஉருவில் காண்க:

திருநகர் நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் பெயர் சூட்டுக!

திருநகர் நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் பெயர் சூட்டுக! அரசிற்கு வேண்டுகோள்! முதுபெரும் தமிழறிஞர் புலவர்மணி இரா.இளங்குமரனார் உடல் அரச வணக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, புலவர்மணி மாணாக்கர் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாணாக்கர் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி முதலானோர் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து பங்கேற்றனர். அறிஞரை மதிக்கும் முதல்வர் மு.க.தாலினுக்கும் அரசிற்கும் பாராட்டுகள். மறைந்த அறிஞர் நினைவாக அவர்வாழ்ந்த மதுரைையைச் சேர்ந்த திருநகரில் உள்ள கிளை நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் நூலகம் என அவர் பெயரைச் சூட்டுமாறு தமிழ்க்காப்புக்கழகத்தின் தலைவரும்…