திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 – பேரா. வெ.அரங்கராசன்

(திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 தொடர்ச்சி) திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 வருணாசிரம எதிர்ப்புக் குறள் விளக்கங்கள் இலக்குவனார் திருவள்ளுவன் தரும் குறள் விளக்கங்களிலேயே புரட்சியும் புதுமையும் கொண்ட திருவள்ளுவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவது,  கடவுள் வாழ்த்து குறள்களுக்கு அவர் தரும் விளக்கங்கள் ஆகும். வருணாசிரமக் கொள்கையை எதிர்த்தே திருவள்ளுவர் முதல் அதிகாரத்தை அளித்துள்ளார் என்கிறார். வருணாசிரமப்படித் தலையில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் உயர்வானவர்கள், காலில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் கீழானவர்கள். ஆனால் திருவள்ளுவர் 7 குறட்பாக்களில் தாளைத் தலைதான்…

காணாமல் போவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காணாமல் போவர்!     நேற்றுவரை வந்தவர்கள் நாளை காணாமல் போவர்   விரல் மை காயும் முன்னர் மாயமாய் மறைவர்   மறந்து போய் நன்றி சொல்ல வரலாம் சிலர்   தவறாமல் பலர் தொகுதிப் பக்கம் காணாமல் போவர்   நம் நாட்டுத் தேர்தலின் சிறப்பு இதுதான்   இருந்தாலும் நாம் தவறாமல் வாக்களிப்போம்!   இலக்குவனார் திருவள்ளுவன்

வியர்வையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

வியர்வையே! வியர்வையே வியர்வையே உனக்கிது முறையோ அயர்விலா துழைப்போன்உடலில்  பிறப்பாய் உள்ளத்தில் சிறிதும் நன்றியை எண்ணாய் கள்ளமாய் ஏய்ப்போன் பேழையைச் சேர்வாய் காலமும் மாறும் கோலமும் மாறும் ஞாலமும் நம்மை வளமாய்க் காணும் நாளும் உழைப்போம் மேலும் உயர்வோம் வாழும் உலகில் வளத்தைக் காண்போம் என்பன நினைக்கும் ஏழையை ஏய்ப்பாய் உண்பதைப் பறிப்பாய் உடுப்பதைக் களைவாய் வியர்வை என்னும விலையை வினவும் அயர்வை அறியா முதலையை வளர்ப்பாய் கொழுக்கக் கொழுக்கச் செழித்திடச் செய்வாய் கருவைத்  தந்தோன் கருகிச் சாகிட உருவைக்காணான் பெருகி உயர்ந்திட உதவும்…

வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! சித்திரை 05, 2050 வியாழன் 18.04.2019 வாக்குப்பதிவு நாளன்று நாம் அனைவரும் தவறாமல் ஆற்ற வேண்டிய கடமை மறவாமல் வாக்களிப்பதே! வேறு என்ன பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் வாக்களிக்க வேண்டும். நாம் வாக்களித்து நாட்டின் போக்கு மாறப்போகிறதா? என அலட்சியமாக இல்லாமல் ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.  வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை  அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை நாடார் வாக்கு போடார் பிறர்க்கு செட்டியார் வாக்கு கிட்டிடா பிறர்க்கு  தேவர்…

இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இராகுல் வெற்றி பெறட்டும்!  தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! கட்சி முறையில் இன்றித் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இராகுலிடம் தற்சார்புச் சிந்தனையும் மனத்தில் சரி என்று பட்டதை ஆற்றும் துணிவும் உள்ளமை புரிகிறது. கலைஞர் கருணாநிதியிடம் ஒத்துப்போகாத அவர், தாலினுடன் இணைந்து செயலாற்றுவதும் அவரது தற்சார்பின் விளைவே ஆகும். பேராயக்(காங்.)கட்சியும் அடிப்படையில்   பா.ச.க.போன்றதே. எனவேதான் இராகுல் தன்னை வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிட்டும் மதத்தைக் குறிப்பிட்டும் அடையாளம் காட்டிக் கொள்கிறார். பசுக்கள் காப்பகம் குறித்த அவர் கருத்தும் அத்தகையதே. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்கிறவர் உயர்…

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா! “தேர்தல் முடிவு வந்ததும் மத்தியில் ஆட்சி மாறும். அடுத்த நொடி இங்கே அதிமுக ஆட்சி கலைக்கப்படும்” எனத் தி.மு.க.தலைவர் தாலின் கூறி வருகிறார். மக்களாட்சிக்கு எதிரான கருத்தை அவர் வெளிப்படுத்தத் தேவையில்லையே! தி.மு.க. கூட்டணியினரும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்பதுபோல் இடைத் தேர்தல்களில் தேவையான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றால் இயல்பாகவே இந்த ஆட்சி போய்த்தான் ஆகும்.  அவ்வாறிருக்க ஆட்சியைக் கலைக்க வேண்டிய தேவை என்ன? பன்னீர் அணியினர் பதினொருவர் மீதான கட்சிமாறி வாக்களிப்பு வழக்கிலும் தீர்ப்பு வந்து அவர்கள் பதவி…

தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்

தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல்  தேர்தல் என்பது கூட்டணி உலகமாக மாறிவிட்டது. எனினும் துணிந்து கூட்டணி இன்றிப் போட்டியிடுவோர் இருக்கின்றனர். அவர்களுள் நாம்தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன், மக்கள்நீதி மையத்தின் கமல் பாராட்டிற்குரியவர்கள். தன்னம்பிக்கையுடன் கூட்டணி வைத்துள்ளனர் இவர்கள். நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. இதனைக்கண்டு ஆளுங்கட்சி அஞ்சுவதே இதன் வளர்ச்சிக்குச் சான்று. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் கடந்த தேர்தல் சின்னமான இரட்டை மெழுகினைக் கிடைக்கச் செய்யாமல் கரும்பு உழவர் சின்னம் அளித்துள்ளனர். அப்படியும் அச்சம் போகவில்லை. வாக்குப்…

தேர்தல் கணக்குகள் சரியே! விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் கணக்குகள் சரியே!  விடைகள் தவறாகும்.  கட்சிகள் எண்ணிக்கை குறைய வேண்டும். அவற்றின் முதற் கட்டமாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று பேரா.சி.இலக்குவனார் கூறியுள்ளார். அவர் சொன்னது, ஓரளவேனும் ஒத்துப்போகும் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது. ஆனால், செல்வ வளத்தைப் பெருக்க அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே கூட்டணி அமைவதால் நாட்டு நலனுக்கு எதிராக அமைகிறது. தனித்துப் போட்டியிடுவதை விடக் கூட்டணி அமைப்பதால் சில வெற்றிகளையாவது சந்திக்கலாம்; தோல்வி யடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்று கருதுவதாலேயே  கட்சிகள் கூட்டணி…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 71-80: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 61-70 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி)   71. மக்கள் அறிவுடைமை நம்மினும் மாநிலத்தவர்க்கு இனிது என உணர்! 72. மகனையும் மகளையும் பிறர் புகழுறுமாறு வளர்! 73. “பெற்றோர் செய்த தவம் யாதோ” எனச் சொல்லுமாறு வாழ்! 74. அன்பினை அடைக்கும் தாழ் இல்லை என அறி! 75. “எல்லாம் எனக்கே” என்று சொல்லாது பிறர்க்குத் தா! 76. பெற்றோர் அன்பால் பிறந்ததை எண்ணி அன்பு கொண்டு வாழ்! 77. அன்பினால் பழகும் விருப்பத்தையும் சிறந்த நட்பையும்…

நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும்  சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம்.  ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கில ஆண்டுமல்ல, கிறித்துவ ஆண்டுமல்ல. நடைமுறையில் இவ்வாண்டு பயன் பாட்டில் உள்ளமையால் இதனை நாம் நடைமுறை ஆண்டு என்று சொல்லலாம். கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது. கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்றுஅழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது. அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய மருத்துவர், வானியல் அறிஞர், மெய்யியலாளர், காலக்கணிப்பர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார். இவர் உலுயிகி  இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார். இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது….

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? – இலக்குவனார் திருவள்ளுவன்

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? 2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்காகவும் உடன் நடத்தப்படுகின்ற இடைத் தேர்தல்களுக்காகவும் வழக்கம்போல் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்துள்ளன. வழக்கம்போல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துச் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் பாசகவுடனும் பாசகவுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் வைத்துள்ள கூட்டணி மக்கள் யாவரும் அறிந்ததே.  ஆனால் இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றால் எதிர் விளைவுகளால் வெற்றி மாலை நழுவிப்போகும் என்பதே உண்மை. வாக்காளர்களை விலைக்கு வாங்கி வாக்கு…

சந்திப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

சந்திப்பு   எண்ணத்தின் சந்திப்பு நட்பாய் மலரும் உள்ளத்தின் சந்திப்பு காதலாய்க் கனியும் தாய் தந்தை சந்திப்பு மகவை ஈனும் ஆய்வு செயல் சந்திப்பு அறிவைப் பேணும் அறிஞரின் சந்திப்பு ஆக்கம் அளிக்கும் கலைஞரின் சந்திப்பு ஊக்கம் அளிக்கும் மறவரின் சந்திப்பு வீரம் ஊட்டும் அறத்தார் சந்திப்பு வறுமை ஓட்டும் எழுத்தின் சந்திப்பு சொல்லாய் மாறும் சொல்லின் சந்திப்பு வரியாய் மாறும் வரியின் சந்திப்பு கவியாய் மாறும் கவியின் சந்திப்பு காவியம் ஆகும் உழைப்போர் சந்திப்பு உயர்வைச் சேர்க்கும் விலைமகள் சந்திப்பு இழிவைச் சேர்க்கும்…