சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா                                      முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகள்! பொதுவாக விருதுகளை முந்தைய நாள் அல்லது கடைசி நேரம் அறிவிப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. காலங்கடந்தும் அறிவித்துள்ளனர். சான்றாக ஒவ்வொரு தை 2 ஆம் நாளும் திருவள்ளுவர் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடும். அப்பொழுது திருவள்ளுவர் விருதையும் பிற ஆன்றோர்கள் பெயர்களிலான…

தமிழ் உரிமை முழக்கப் போராட்டம்

மாசி 09, 2050 வியாழக்கிழமை 21.02.2019 பிற்பகல் 3.00 முதல் இரவு 7.00 மணி வரை உலகத்தாய்மொழி நாளில் உலகத்தமிழ்க்கழகம் நடத்தும் தமிழ் உரிமை முழக்கப் போராட்டம் தொடக்கவுரை: பழ.நெடுமாறன்

உடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

உடல் கொடை – விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு! எந்த நலத்திட்டமாக இருந்தாலும் அது முழுமையாக நிறைவேற மக்களிடையே விழிப்புணர்வு தேவை. ஆனால், அத்தகைய விழிப்புணர்வு முதலில் அது தொடர்பான அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவை. எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வு அரசிற்கு இல்லாத வரையில் எந்தத் திட்டத்தாலும் முழுப்பயன் கிட்டாது என்பதே உண்மை. உடல்கொடை குறித்து ஓரளவு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் கருதுவது போல் இவ்விழிப்புணர்வு அரசால் ஏற்பட்டதல்ல. செய்தியிதழ்கள் உடற்கொடை பற்றிய  செய்திகளைப் பதிவிடுவதால்…

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 :: இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4  தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி (பிள்ளை) தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்த பேரா.சே.சி. கண்ணப்பனார் கட்டுரை  8 ஆவதாக இடம் பெற்றுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் 20 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியிருந்தாலும் வாணாள் முழுவதும் தமிழ் ஆர்வலராகத் திகழ்ந்தார்; தமிழறிஞரான இவர் அறிஞர் போப்பு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்; சமய இலக்கியங்களையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மாக்சு முல்லர் முதலான பன்னாட்டு அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் என இவரின் சிறப்புகளைக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார். இவரின் திருக்குறள் பணிகளை…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 (குறள்நெறி) எழுத்துக்கு அகரமும் புவிக்குப் பகலவனும் முதல் என அறி! கற்றதன் பயனாக அறிவர்வழி நட! நெடுங்காலம் வாழ மாண்புடையோர் வழி நட! துன்பம் இல்லாதுபோக விருப்பு வெறுப்பிலார் வழிநில்! இருவினை சேராதிருக்கப் புகழுடையார் வழி நில்! நீடு வாழ மெய்யொழுக்கர் வழி நில்! மனக்கவலையை மாற்ற உவமையில்லார் வழிநில்! துன்பக்கடல் நீந்த அறவர்வழி நில்! தலையால் நற்குணத்தானை வணங்கு! அறியாமைக் கடலை நீந்த, ஆளுமையுடையவர் வழி நில்! (தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன் வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்…

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்!

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்  திராவிட இயக்க வைர விழுது, தன்மானப் போராளி சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன் சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் (எ) சின்னத்தம்பி தம்முடைய 93ஆம் அகவையில் இன்று (தை 23, 2050 / 06.02.2019) வைகறை 2.15 மணிக்கு இயற்கை எய்தினார். ஏழை எளியவர்களுக்கு உதவி மகிழும் அவர் வாழும்பொழுதே தன் கண்களில் ஒன்றைத் தானமாகக் கொடுக்க மருத்துவர்களை நாடினார். வாழ்பவர் கண்ணைத் தானமாகப் பெறச் சட்டத்தில் இடமில்லை என மருத்துவர்கள் மறுத்து விட்டனர். பின் மறைவிற்குப் பின்னான கண் தான விருப்பத்தையும்…

திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926 சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2

நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00 திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926 சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2 நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை   தலைமை: அருள்திரு முனைவர் கு.மோகனராசு திருக்குறள் சான்றோர்களும் ஆய்வுரை வழங்கிய ஆய்வறிஞர்களும் 01. பேராசிரியர் வெ.அரங்கராசன் — முனைவர் அ.பூரணலதா 02. முனைவர் நயம்பு அறிவுடை நம்பி — முனைவர் ஏ.சிவபாக்கியம் 03. திருக்குறள் அறிஞர் ஆ.இரத்தினம் —…

திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு – முற்பகல் நிகழ்வுப் படங்கள்

நிகழ்ந்த நாள் :தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 உலகத்திருக்குறள் மையம் தலைமை: முனைவர் ஒப்பிலா மதிவாணன் முன்னிலை: முனைவர் கு.மோகனராசு திருவள்ளுவர் வாழ்த்துப் பாடல்: முனைவர் வாசுகி கண்ணப்பன் வரவேற்புரை: முனைவர் குமரிச்செழியன் நூல்கள் வெளியீடு: முனைவர் அரங்க.இராமலிங்கம் நூல்கள் அறிமுக உரைகள் முனைவர் கு.மோகனராசுவின் திருவள்ளுவரங வரையறுத்த கோட்பாடுகள் – முனைவர் பா.வளனரசு முனைவர் கு.மோகனராசுவின்1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் பகுதி 1 -முனைவர் பா.தாமோதரன் முனைவர் கு.மோகனராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் பகுதி…

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார். பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார்…

தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக! -இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக! புதுச்சேரி அல்லது பாண்டிச்சேரி எனப்படும் ஒன்றியப்பகுதிக்கு மாநிலத் தகுதி வழங்கப்பெட வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. குடியரசுத்தலைவர் என்ற பெயரில் பாசக முகவராகக் கிரண்(பேடி) வந்ததிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் தன்னுரிமையுடன் வாழப் புதுவைக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. இந்தியாவில் மாநிலங்களுடன்  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றியப்பகுதிகளும் உள்ளன. இப்போது இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள். சண்டீகர், ததுரா – நாகர் அவேலி(Dadra and Nagar Haveli), தையூ-தாமன்(Daman…

திருக்குறள் உயராய்வு அரங்கு 927 – திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் உயராய்வு அரங்கு 927 திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு) தலைமை: திருக்குறள் தூயர் பேரா.முனைவர் கு.மோகனராசு திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார் உரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 2/4

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் நூலறிமுகம் 2/4 சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு  திருக்குறள் தூதர் வெ.இர.கனகசபை, சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு குறித்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. தம்பிக்கு மடல்கள் எழுதிய அறிஞர் அண்ணா வழியில் ‘அன்ப’ எனத் தொடங்கி ஏராளமான பன்முக வாழ்வியல் மடல்களைத் தீட்டிய சிறப்பிற்குரியவர் பெருமகனார் எனக் கட்டுரையாளர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். 31.12.1917 ஆம் ஆண்டு தோன்றி 08.10.1998 இல் மறைந்த பெருமகனார் ஆயிரம் பிறை கண்டு அழியாப்புகழ் பெற்றுள்ளார் எனக் கட்டுரை முழுவதும் கட்டுரையாளர் நன்கு…