இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 4 : தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை : இலக்குவனார்திருவள்ளுவன்
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3 – தொடர்ச்சி திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 4 தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை செல்வர்களுக்கான கல்வியகங்கள், ஏழை எளியோருக்கான கல்வியகங்கள் என்ற பாகுபாடுநீக்கப்பட சமச்சீர்க்கல்வியுடனான அருகமைப்பள்ளிகள் இருக்க வேண்டும். இதுதான் உண்மையான சமத்துவமாகத் திகழும். நாட்டின் வளர்ச்சியும் தளர்ச்சியும் வகுப்பறைகளில் உருவாக்கப்படுவதை உணர்ந்து சமஉடைமையைக் கல்வியகங்களில் தோற்றுவிக்க வேண்டும். இவ்வாறெல்லாம் கல்வியாளர்கள் கவலையுடன் எதிர்கால நல்வாழ்வு கருதி நிகழ்காலச் செயல்பாடுகளுக்கு வழி காட்டும் வேளையில்…
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3 கல்விக்கடமை : இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 – தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 3 : கல்விக்கடமை கல்விக்கடமை முழுவதும் அரசின் பொறுப்பு என்றானால் கல்வி நிலையம் யார் நடத்தினாலும் வணிகமாய் இல்லாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்தான் இருக்கும். இருப்பினும் இன்றைய சூழலில் மக்களின் நாட்டம் தனியார் கல்வி நிலையங்கள் மீதே உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மிகப்பெரிய கட்டடங்களுடனும் ஏந்துகளுடனும் இருப்பதைப் பார்த்து அரண்டு போகக்கூடாது. இவ்வசதிகள் கல்வி நிலையம்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09 ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, ஒன்றிய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம்போட்டு மீட்டு வரும் ஒன்றிய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன்…
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியம், சொல்லதிகாரம், இணையவழியிலான பட்டயத்தேர்வு இணைய வழி வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன் நாள் மாசி 17,2057 / 01.03.2056 மாலை 4.45(தமிழ்நாட்டு நேரம்) புகு எண் & சொல் 81766444296 : avvai ஆத்திரேலியா தொல்காப்பிய மன்றம் தமிழ் ஐயா கல்விக்கழகம் ஒளவை அறக்கட்டளை, திருவையாறு
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் – நிறைவுரை 2 சுருக்கத் தலைப்புகள் இதற்கிணங்க மேற்குறித்த இருபது தலைப்புகளையும் – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவற்றை – இணைத்துப் பின்வரும் தலைப்புகளி்ல் காணலாம். கல்வி தமிழ்வழிக்கல்வியும் இல்லை; தமிழ்மொழிக் கல்வியும் முதன்மை நிலையில் இல்லை என்பதே தமிழ்நாட்டின் துன்பமாகும். ஆங்கிலவழிக்கல்வியின் துன்பத்துடன் இந்தி, சமசுகிருதம் முதலான மொழிகளை முதன்மொழியாகப்படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தமிழ் கற்பிக்க…
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் – நிறைவுரை 1 அன்புள்ள அவையோருக்கு வணக்கம். “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன் தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07 தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல் ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 ) செந்தமிழ் நிலத்து…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10: தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே! : இலக்குவனார்திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10 தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே! “தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும் பட்டியலிலும், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக’ என்னும் பட்டியலிலும் பருமா/மியன்மா அல்லது இரங்கூன்/யாங்கூன் இடம் பெறவில்லை. ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘ காலனி’: சரிதானா? எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? ??? ஐயா, ‘காலனி’ என்றாலும் குடியிருப்புதானே அவ்வாறுதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். காலோனியா /colōnia என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே காலனி/colony என்னும் சொல். உண்மையில் ‘காலனி’ என்பது குடியேற்றப் பகுதியைக் குறிக்கும். அஃதாவது, குடியேற்ற ஊர், குடியேற்ற நகர், குடியேற்ற நாடு என எல்லாமே…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு இக்கோப்பில் ‘ஆபிசர் குவார்ட்டர்சு’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அலுவலர் குடியிருப்பு என்று தமிழில் குறி்த்திருக்க வேண்டும். ???? ‘குவார்ட்டர்’ என்றால் கால் என்று பொருளில்லையா? ஆம். அவ்வாறும் பொருள் உள்ளது. அவ்வாறு பார்த்தால் காலாண்டுகள் என வர வேண்டும். ஆனால், இடத்திற்குத்தகுந்த பொருளைக் குறிக்க வேண்டுமல்லவா Quarters என்றால், உறையுள், உறைவிடம், குடியிருப்பு, படைத்தங்கல் இடம்,குடியிருப்பில்லம்; குடியிருப்புகள்;தங்குமிடம் எனப் பல பொருள்கள். இருப்பினும்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03 “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்….
