இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் –   நிறைவுரை 1 அன்புள்ள அவையோருக்கு வணக்கம்.   “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன்  தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07 தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல்   ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )              செந்தமிழ் நிலத்து…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’:  சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘ காலனி’:  சரிதானா? எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’:  சரிதானா? ???  ஐயா, ‘காலனி’ என்றாலும் குடியிருப்புதானே அவ்வாறுதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். காலோனியா /colōnia  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே காலனி/colony என்னும் சொல். உண்மையில் ‘காலனி’ என்பது குடியேற்றப் பகுதியைக் குறிக்கும். அஃதாவது, குடியேற்ற ஊர், குடியேற்ற நகர், குடியேற்ற நாடு என எல்லாமே…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.   திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும்   உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு இக்கோப்பில் ‘ஆபிசர் குவார்ட்டர்சு’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அலுவலர் குடியிருப்பு என்று தமிழில் குறி்த்திருக்க வேண்டும். ???? ‘குவார்ட்டர்’ என்றால் கால் என்று பொருளில்லையா? ஆம். அவ்வாறும் பொருள் உள்ளது. அவ்வாறு பார்த்தால் காலாண்டுகள் என வர வேண்டும். ஆனால், இடத்திற்குத்தகுந்த பொருளைக் குறிக்க வேண்டுமல்லவா Quarters  என்றால், உறையுள், உறைவிடம், குடியிருப்பு, படைத்தங்கல் இடம்,குடியிருப்பில்லம்; குடியிருப்புகள்;தங்குமிடம் எனப் பல பொருள்கள். இருப்பினும்…

 தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03 “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம்.   “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்….

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத              வாழ்வு கண்ட தமிழகம்        மகிமை கெட்டே அடிமைப் பட்டு              மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)யே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே, தமிழ னென்ற பெருமை யோடு              தலைநி மிர்ந்து நில்லடா!        தரணி யெங்கும் இணையி லாஉன்              சரிதை கொண்டு செல்லடா!…

இணைய உரை 3,தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி

தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 3 நாள் மார்கழி 26, 2056 / 10.01.2026 சனி காலை 10.00 கூட்டத்தில் இணைய : https://meet.google.com/wko-iivr-bah தொடக்கவுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை : புலவர் தி.வே.விசயலட்சுமி பிற அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் வா. ஆனந்தி முனைவர் புத்தேரி தானப்பன் செயலர் தலைவர்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01  இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே! தலைமை…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 151 & 152 : நூலரங்கம்

செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411 தமிழே விழி!                                             தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 151 & 152 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 மார்க்ழி 13, 2056 ஞாயிறு  28.12.25 காலை 10.00 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை :…

தொல்காப்பியமும் பாணினியமும் – 15 : உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன

(தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 15 ஆரியர் வரவு  தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும்.  தமிழகத்தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே.  அவருள்ளும் மொழி நூற் புலமையும்ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர்களுடனும் தொடர்பு கொண்டனர்.  ஆரிய மொழிப் புலவரும் தமிழ் மொழிப்புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர், அன்றோ?” எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு…