சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 6: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?-5 தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 6 செம்மொழி நிதிநிலை அறிக்கைபற்றி வேறு சில தகவல்களும் சொல்ல வேண்டி இருக்கிறது. எந்த அளவிற்கு நிதிநிலை அறிக்கையில் இப்பொழுது மனிதவள மேம்பாட்டு துறை நிதி ஒதுக்கீட்டில் உள்ளவற்றைத்தான் பேச வேண்டும் என்று சொல்வார்கள். கல்வித் துறையில் வெவ்வேறு துறையில் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. சமற்கிருதத்தை வெவ்வேறு விதங்களில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சில அமைப்புகளின் முழக்கமே தமிழில் இல்லை. இந்தச் சாரண இயக்கம் கூடப்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 11 முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர் “தொல்காப்பிய மொத்த நூற்பாக்கள் 1571 ஆகின்றன. இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல் அதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும்.” என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார்(தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15). இதனையே வரலாற்று நூலாகவும் கருத வேண்டும் என அவர்…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 4: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 5 நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அரசு நிறுவனத்தில் செம்மொழி ஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தரங்கில் பங்கேற்றேன். அப்போதே நிதி நிலை அறிக்கையில் இருந்து மொழிகளுக்கான பல்வேறு நிதி குறித்துக் குறிப்பிட்டு இருந்தேன். இன்னின்னவாறு ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு இல்லையே என்பதாக குறிப்பிட்டு இருந்தேன். பல்வேறு ஒதுக்கீடுகள். ஆனால் இப்பொழுது இன்னும் கூடுதலாக இருக்கிறது. இந்தக் கூடுதலான நிதி ஒதுக்கீட்டிற்கு நாம்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். திருவள்ளுவரும், திருக்குறளும் உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற அளவுக்கு தொல்காப்பியமும், தொல்காப்பியரும் உலக அளவில் சிறப்படையவில்லை. தொல்காப்பியரும், அதங்கோட்டாசானும், பனம்பாரனாரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என வரலாற்று நிலையில் வரையறுக்கப்படுகிறது. தொல்காப்பியர் காலம் வடமொழி இலக்கண நூலான பாணினியின் காலமான கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும், புத்தர் காலமான கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. தொல்காப்பியர்…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 4: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 3: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 4 ஆக எந்த ஒரு திட்டத்திற்கும் நாம் ஒன்றிய அரசைச் சார்ந்தே உள்ளோம். ஆனால், பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசைப் பின்பற்றித்தான் தென் மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அஃது உலகத் தமிழ் மாநாடு ஆகட்டும் வேறு பல திட்டங்கள் ஆகட்டும். ஆனால் இந்த மொழி வளர்ச்சியில் நாம் மத்திய அரசைப் பின்பற்றலாம். பின்பற்றி நாம் என்ன கேட்கலாம்? அவர்கள் சமற்கிருத வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள் இல்லையா?…

தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் 8  : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 9 வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு “இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் தொல்காப்பியம் – பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920 ஆண்டுகளாம்.” என்பது அடுத்த புரட்டாகும். ஆனால் இதை மெய்யென்று நம்பி, க.வெள்ளைவாரணார், தொல்காப்பியம்(வரலாறு) என்னும் தம் நூலில்…

தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 148 & 96 + நூலரங்கம்

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௧ – 411) தமிழே விழி!                                தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 148 & 96 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 ஐப்பசி 16, 2056 ஞாயிறு 02.11.2025 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 3 மனுநூல் ,அருத்த சாத்திரம், சுக்கிர நீதி போன்ற நூல்கள் எல்லாம் மக்களைப் பாகுபாடுப்படுத்தக் கூடியவை. வருண வேறுபாடுகளைப் புகுத்துபவை ஆக உள்ள இந்த இலக்கியங்களுக்குப் பணம் கொடுக்கிறவன்தான் வருண வேறுபாட்டுக்கு உயிர் ஊட்டுகிறவன்.” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவத்தைப் போற்றுகிற நாம் இந்த இரண்டு இலக்கியங்களுக்கு – இலக்கியங்கள் என்று சொல்லக்கூடாது இழிகாம நூல்களுக்கு – அஃதாவது ஆபாச நூல்களுக்கு –  நாம்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 8 பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல் பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent,  juvenile, minor, post-mortem – தமிழில்:  இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 insolvent, adolescent,  juvenile, minor, post-mortem – தமிழில் திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல. insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பது. நொடிப்பு என்று சொல்லலாம். இந்த நிலைக்கு ஆளானவர்   insolvent – நொடித்தவர்  எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம்  நொடித்துப் போனவர் >…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2 நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.) ஒவ்வோர் ஆண்டும்  சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன்

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்புமிகு சான்றோர் பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியினை நேரடியாக கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இப்பதிவொலி வழியாக கேட்க இருப்பவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிமுக உரையாற்றி இந்நிகழ்ச்சியினை எனக்கு அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும். தலைப்பைக் கேட்டுச் சிலருக்கு ஆனா உரூனா ஐயாவுடைய தமிழ்ச் சான்றோர் பேரவை இந்த தலைப்பிலா நிகழ்ச்சி நடத்துகிறது என்று எண்ணலாம். “சமற்கிருதத்திற்கு மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பிற மொழிகளுக்கு மிகக் குறைந்த  நிதி ஒதுக்கீடும்” என்றுதான் பேசச் சொன்னார்கள். இரண்டு்ம் ஒன்றுதான். என்று…