நிலைபெறநீ வாழியவே! – கவிஞர் சீனி நைனா முகம்மது

  காப்பியனை ஈன்றவளே!      காப்பியங்கள் கண்டவளே!    கலைவளர்த்த தமிழகத்தின்      தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில்      தனிப்பெருமை கொண்டவளே!   தமிழரொடு புலம்பெயர்ந்து      தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில்         சிங்கைதனில் ஈழமண்ணில்    இலக்கியமாய் வழக்கியலாய்         இனக்காவல் தருபவளே! பொங்கிவளர் அறிவியலின்         புத்தாக்கம் அத்தனைக்கும்    பொருந்தியின்று மின்னுலகில்         புரட்சிவலம்…

தமிழ்க்கட்டாயக்கல்வி குறித்த வாகை(வின்) தொலைக்காட்சி காணுரை இணைப்பு

தமிழே கல்வி மொழியாக, வாகை (வின்) தொலைக்காட்சியின் கருத்தாக்கப் பணி! தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் பயில வேண்டும் என்பதற்காகப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2006 ஆம் ஆண்டு முதல்வகுப்பிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அடுத்தடுத்த வகுப்பு என்ற முறையில் தமிழ்மொழிப்பாடம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பெற்ற சட்டப்படியான செயல்பாடு இது. இதற்கிணங்க இவ்வாண்டு 9 ஆம் வகுப்பு பயில்பவர்கள் தமிழைப் பயில்வார்கள். அடுத்து 10 ஆம் வகுப்பு பயிலும் பொழுது, இவற்றின் தொடர்ச்சியாகத் தமிழைப் பயில்வார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல்…

தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை

சிவா அய்யாதுரை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையத்தள நேரலை உரை – தமிழாக்கம்   இந்திய நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு  அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான  தேவையையும்…