thamizh

கொஞ்சு தமிழே…
என் நாவில் தித்தித்தாய்
தமிழாலே நமது புதிய வாழ்வை
நாம் இன்று படைப்போம்

உயிரொன்று பிறந்தது ஆதி காலத்தில்
மனிதனாய்த் திரிந்தது பரிணாமத்தில்
அவர் நாகரிகமடைந்தது
தமிழ்ச் சங்கக் காலத்தில்

மனிதனை வடித்தது மொழியே
அந்த மொழிகளில் மூத்தது தமிழே
தமிழே  முதலே

அரைகுறை மொழிகளுக்கிடையே
முழு இலக்கணம் கண்டது முதலே
தமிழே உயர்வே

காதல் வந்தால்
நம் கன்னித் தமிழால்
கவிதை பாடு
கைகூடும் ஒரு நாள்

உலகினுக்கே தமிழ் பழமை
அந்தப் பழமையினும் தமிழ் இளமை
மாற்றார் உணர்வார் இதன் அருமை – இன்கொஞ்சு தமிழே
என் நாவில் தித்தித்தாய்
தமிழாலே நமது புதிய வாழ்வை
நாம் இன்று படைப்போம்

உயிரொன்று பிறந்தது ஆதி காலத்தில்
மனிதனாய் திரிந்தது பரிணாமத்தில்
அவர் நாகரிகமடைந்தது
தமிழ்ச் சங்கக் காலத்தில்

மனிதனை வடித்தது மொழியே
அந்த மொழிகளில் மூத்தது தமிழே
தமிழே முதலே

அரைகுறை மொழிகளுக்கிடையே
முழு இலக்கணம் கண்டது முதலே
தமிழே உயர்வே

காதல் வந்தால்
நம் கன்னித் தமிழால்
கவிதை பாடு
கை கூடும் ஒரு நாள்

உலகினுக்கே தமிழ் பழமை
அந்தப் பழமையினும் தமிழ் இளமை
மாற்றார் உணர்வார் இதன் மகிமை நம்மில்
இன்னும் சிலரில் ஏன் மடமை

தமிழோடு வந்தோம்
தமிழோடு வாழ்வோம்
தமிழோடு போவோம்
தமிழாவோம்

செந்தமிழின்றிப் போனால்
நாம் சொல்வளமின்றிப் போவோம்
தமிழே  உயிரே

எந்தன் தாய்மொழி தமிழே
அதில் சிந்தனை செய்வது வளமே
எங்கும் தமிழே

நுட்பம் நுட்பம் – அது
என்றும் இருக்கும்
சொற்கள் செய்தால்
நம் தமிழ் தளைக்கும்

அறிவியலில் கண்டுபிடிப்பு
இன்னும் வளரட்டுமே என்ன மலைப்பு
இருப்பதெல்லாம் தமிழ்ப்படுத்து
இங்கு அது மட்டுமே நம் பொறுப்பு

தமிழோடு வந்தேன்
தமிழோடு வாழ்ந்தேன்
தமிழோடு போவேன்
தமிழாவேன்

வசந்த குமார்

வசந்தகுமார் : vasanthakumar

காணுரை : https://www.youtube.com/watch?v=gMUcQbjDRl8