திருக்குறளில் உருவகம் 4 – பேராசிரியர் வீ.ஒப்பிலி
(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)
சங்க இலக்கியக் காட்சிகள் : தாய்மனம் – மு.வ.
சங்க இலக்கியக் காட்சிகள் தாய்மனம் – பேராசிரியர் முனைவர் மு.வரதராசனார் காக்கை உட்கார்ந்தது! அந்தப் பனை மரத்தில் ஒரு பனம்பழம் விழுந்தது, இந்தக்காட்சியைக் கண்டவன் ‘‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’’ என்றான்; அவன் சொன்னதைக் கேட்டவன், ‘‘அந்தக் காக்கை உட்கார்ந்ததே பனம்பழம் விழுந்ததற்குக் காரணம்’’ என்று தவறாக எண்ணவும் கூடும். இவ்வாறு எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் காரணகாரியமாக்கிக் தொடர்புபடுத்திக் கூறக்கூடாது என்பதே பெரியோர் கருத்து தருக்க நூலார் ]காகதாலிய நியாயம்’ என்ற பெயரால் இதனைத் தெரிவிப்பர். காக்கை அந்த மரத்தில் எத்தனையோ முறை…
தொல்காப்பிய விளக்கம் – 10 : முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய விளக்கம் – 10 (எழுத்ததிகாரம்) தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தை 6 , 2045/19 சனவரி 2014 இதழ்த் தொடர்ச்சி) ட,ர, எனும் இவை மொழிமுதல் எழுத்துக்களாக வருதல் இல்லை. ‘ன்’க்குப் பிறகு ‘ட’வும் ‘ள்’க்குப் பின்னர் ‘ர’வும் வருதல் இல்லை. ஆனால் ‘வல்லெழுத்து இயையின் டகாரம் ஆகும்’ எனும் இடத்திலும் ‘அவற்றுள், ரகார ழகாரம் குற்றொற்று ஆகும்’ எனும் இடத்திலும் விதிக்கு மாறாக வந்துள்ளன. இந்நூற்பாக்களில், ட, ர, என்பனவற்றின் இயல்பு விளக்கப்படுகின்றது. ஆதலின்…
வள்ளுவரும் அரசியலும் 4 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) முதலிலே அவனுக்கு, அரசுக்கு வேண்டிய அங்கங்களான படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை ஆறும். நன்றாக அமைதல் வேண்டும். ஈகை வேண்டும்; அறிவு வேண்டும்; ஊக்கம் வேண்டும்; செயல்களில் விரைவுடைமை வேண்டும்; தூங்காமை ஆகாது; துணிவு வேண்டும்; கல்வி வேண்டும்; அறன் வழி நிற்றல் வேண்டும். அறனல்லவற்றைக் கடியும் வீரம் வேண்டும். காட்சிக்கெளியனாதல் வேண்டும். கடுஞ்சொல் அல்லாதவனாதல் வேண்டும்; இன்சொல் வழங்கி ஈத்தளிக்கும் இயல்பினனாதல் வேண்டும், செங்கோல்…
திருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி
(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா? கயவரை எண்ணிய…
வள்ளுவரும் அரசியலும் 3 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) அரசு அமைப்பும் இயல்பும்: வள்ளுவர் அரசின் உருவத்தைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அதன் உட்பொருளைப் பற்றியே எண்ணலானார். அரச அமைப்பைவிட ஆட்சி நலத்தையே ஆய்கின்றார். ஏனெனில் எந்த உருவத்தில் அரசிருந்தாலும் மக்கள் பொருளாதார வாழ்வு சிறப்பதற்கு, அந்த அரசின்பால் சிற்சில தகுதிகள் இருக்க வேண்டும். அத்தகுதிகள் இருக்குமானால் மக்களுக்கு இறுதியாக வேண்டும் இன்பவாழ்வு வந்தெய்தும் என்பதே அவர் கோட்பாடாக இருந்தது எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த அரசியல் அமைப்பாயினும் என்ன, ஆட்சி ஆதிக்கம் ஒரு தலைவன்…
குறள் நெறி வாழ்க – கவிஞர் கதி.சுந்தரம்
1. தமிழினமே! எழுந்தார்த்துக் குறளென்னும் கேடயத்தைத் தாங்கி நின்றே இமிழ்கடல்சூழ் உலகுய்ய வழிகாட்டு! கலையூட்டு! எழிலை ஈட்டு! குமிழியெனும் இளமைதனைக் கொழிதமிழின் குறள் நெறிக்கே கொடுத்து வாழ்வாய்! அமிழ்தனைய வளம்பலவும் நாடெய்தும்; ஆல்போலப் பெருகி வாழ்வாய்! 2. தூளாக்கு வஞ்சகத்தைத் தோள்தூக்கு முயற்சிக்கே என்று பாடி. ஆளாக்கும் குறள்நெறியை அவனியெலாம் பரப்பிடுவீர்! முழக்கம் செய்வீர்! தாளாற்றிப் பொருள் சேர்ப்பீர்! தருபுகழைப் பெற்றுவாழ்வீர்! வேற்று நாட்டார் கேளாத பழங்காலம் கிளைவிரித்தே அறமுரைத்த குறளே! வாழ்க!! – குறள்நெறி தை 2, 1995 /15.01.1964
வெல்க குறள் நெறி – புலவர் வேலவன்
1. கூடல் நகரில் குறள்நெறித் தென்பெருகி ஓடல் இனிதே உவந்தது. 2. குறள் நெறிப் பூங்குயிலே கொள்கைப் புரட்டர் குரல்நெறிக்க வந்தாயோ கூறு. 3. எழுதத் தெரிந்தோர் எழுத்தாள ராகுந் தொழுநோய் துடைப்பாய் துணிந்து. 4. பிறழ்நெறியே பேசுகின்ற பித்தருளும் மாற குறள்நெறியே கூவு குழைந்து. 5. அருள்நெறி பேச அவம் செய்து வாழும் இருள்நெறி யாளரை எற்று. 6. பாலில் நீர் பெய்துவிற்கும் பாவியரைப் போலெழுது நூலில்தீச் சொற்கலப்பின் நூறு. 7. குறுக்குவழி யோடுங் குறுமதியைக் கொட்டிப் பொறுப்பு வழிகாட்டிப் போற்று,…
வள்ளுவரும் அரசியலும் 2 -முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
(16 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) ஏனெனில் குடியாட்சி அமையலாம்; ஆனால் அந்தக் குடியாட்சியில் முறைமை செய்யப்படாத முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகள் நிலை நாட்டப் படாது இருந்தால், நாட்டிலே பொருள் வளம் மிகுதலில்லாது போய்விடும்; அப்போது குறிக்கோளாகிய இன்பம் எய்துவது எவ்வாறு? நேர்மாறாக முடியாட்சி இருக்கலாம்; ஆனால் அவ்வாட்சியில் நாட்டில் நல்லமைதி நிலவி மக்கள் பொருள் வளம் சிறக்குமானால் அதனால் இழிவென்ன? என்று கேட்பது போலிருக்கிறது வள்ளுவர் அரசியல் கோட்பாடு. குடியரசுக் கொள்கை தலைசிறந்து நிற்கும் இது காலையில்…
வேண்டும்! வேண்டும்! – ஓ.மு.குருசாமி
தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க வேண்டும்! தளராமல் எந்நாளும் உழைக்க வேண்டும்! வாய்மொழியைச் செயலுருவா ஆக்க வேண்டும்! வள்ளுவர்தொல் காப்பியமும் பரவ வேண்டும்! ஆய்வுரைகள் தமிழ்மொழியில் பெருக வேண்டும்! தண்டமிழே தலை சிறந்து விளங்க வேண்டும்! ஓய்ந்துவிடும் மனமுடையார் குறைய வேண்டும்! உலகமெலாம் தமிழ்நூல்கள் செல்ல வேண்டும்! திருவுடைய ‘குறள் நெறியே’ பரவ வேண்டும்! தினந்தினமும் திருக்குறளை ஓத வேண்டும்! அருளுடையார் அன்புடையார் பெருக வேண்டும்! அறிவுடையார் மொழிகாக்கக் கிளம்ப வேண்டும்!. உருவடைய நற்செயலை ஊக்க வேண்டும்! உண்மைக்கு வணக்கமதைச் செய்ய வேண்டும்! இருளுடைய…
திருக்குறளில் உருவகம் 2 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி
(16.03.14 இதழின் தொடர்ச்சி) ஓரறிவின்: ஓரறிவுள்ள உயிரினத்தை – சிறப்பாக மரத்தை, பயனுள்ளது, பயனற்றது என இரு வகையாகக் காண்கிறார் கவிஞர். உலகில் வாழும் மக்களும் அதற்கேற்ப இருவகையாகத் தோற்றமளிக்கின்றனர். இதுவன்றிப் பொதுவாக ஆரறிவு படைத்த மனிதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மரம் தாழ்ந்ததே. ஆதலால் மனித குண நலன்களில் குன்றிய யாவரும் பெரும்பாலும் மரமாகக் காட்சியளிக்கின்றனர். அன்பு இல்லாதோர் பாலை நிலத்துப் பட்ட மரமாகின்றனர். இங்கு குளிர்ந்த நீரும் நிழலும் அன்பிற்கும், இவை இரண்டும் அறவே தோன்றாத பாலை நிலம்…
திருக்குறளில் உருவகம் – 1
-ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி தலைப்புக் குறிப்பு. உருவகம் என்ற சொல்லைப் பொதுவாக ஆங்கிலத்தில் Metaphor என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் பயன்படுத்துதல் வழக்கம். ஆயினும் இக்கட்டுரை முழுவதிலும் இச்சொல் Image என்ற சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் ‘‘காட்சி’’யென்று சொல்லலாம். ஆனால் ‘காட்சி’ யென்றசொல் அகத்தே தோன்றும் உணர்ச்சிக்கு உருக்கொடுக்கும் ஆற்றலை மட்டுமின்றிக் காணப்படும் பொருள் யாவிற்கும் பொதுவான சொல்லாக இருப்பதால், அதை நீக்கி ‘உருவகம்’ என்ற சொல்லையே Image என்பதன் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்தியுள்ளேன். முன்னுரை திருவள்ளுவர் இயற்றிய குறள்…