இந்தியை எதிர்ப்போர் தென்னாட்டில் இலரா?

– தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள் வடநாடு சென்று திரும்பிவந்ததும் செய்தியாளர்களிடையே, ‘‘தென்னாட்டில் இந்தியை எதிர்ப்பார் இலர்’’ என்று கூறிவிட்டு ‘‘இந்தியை எதிர்ப்பவர்களும் அரசியல் நோக்கம் கொண்டுதான் எதிர்க்கின்றார்கள்’’ என உரைத்துள்ளதாகச் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது. இந்திமட்டும் இந்தியக் கூட்டரசின் மொழியாக ஆவதையும், அது மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதையும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் புலவர்களும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் நாளும் எதிர்த்துவருகின்றார்கள் என்பது நாடறிந்த செய்தியாகும். அங்ஙனமிருந்தும் நம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் இட்லரின் முறையைப் பின்பற்றி ‘‘இந்தியை எதிர்ப்பார் இலர்’’…

இந்திக்கு முதன்மை பிரிவினைக்கு வித்து

 – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் இந்தியக் கூட்டரசின் பொதுப்பணிக்குழுவின் தேர்வு மொழியாக இந்தியை ஆக்குவதற்கு, இந்திமொழி பேசப்படாத மாநில முதல் அமைச்சர்களுடன் இந்தியக் கூட்டரசுத்துறையினர் ஆய்வு நிகழ்த்தப்போவதாகச் செய்தியொன்று வெளிவந்துள்ளது. கூட்டரசு மொழிகளில் இந்தியை மட்டும் பொதுப் பணிக்குழுவின் தேர்வு மொழியாக ஆக்குதல் இந்திக்கு மட்டும் ஏற்றம் அளித்து, கூட்டரசின் ஏனைய மொழிகளை இழிவுபடுத்துவதாகும்; ஏனைய மாநிலங்களுக்கு இழைக்கும் பெருந்தீங்காகும். ஆதலின் கூட்டரசு மொழிகள் அனைத்திலும் தேர்வு எழுதுவதற்கு உரிமையளித்தல்தான் கூட்டரசுக் கொள்கைக்கு ஏற்றதாகும். இன்றேல் ஏனைய மொழியாளர் கூடி வாழ்வதால் பயனில்லை என்று…

இந்தியாவின் மொழிச்சிக்கல்

–       கூடலரசன்   இந்தியத் துணைக்கண்டத்தில் நிலையான விவாதத்துக்குரிய சிறந்த பொருளாக மொழிச்சிக்கல் அமைந்துள்ளது அரசியல் வடிவம் பெற்றுள்ள மொழிஆதிக்கம் பெருநிலப் பரப்பின் கருப்பொருளாக அனைவரின் சிந்தனையையும் கவர்ந்துள்ளது. ஆட்சிப்பீடத்து ஆதிக்க மொழியாக நான்கு நூற்றாண்டுகள் இடம் பெற்றிருந்த ஆங்கிலம் அகற்றப்படுவதும், அந்தச் சிறப்பான உரிமையை இந்தி மொழிக்கு வழங்குவதும் இமயம் முதல் குமரிமுனை இறுதியாக கடுமையான கண்டனத்துக்குரியதாக அமைந்துள்ளது. இந்திக்கு மகுடம் சூட்டினாலும் ஆங்கிலத்தின் தேவையைப் புறக்கணிப்பது இயலாத செயலாக இருக்கிறது. ‘அறிவுப் பெருக்கத்திற்கு ஆங்கிலம் தேவையாகும். அனைத்திந்தியத் தொடர்பு மொழியாக ஆங்கிலமே…