இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே! – இரா.திருமுருகன்

இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே!   பாட்டியல்கள் சிற்றிலக்கியங்களின் தொகை தொண்ணூற்றாறு என்று கூறினாலும் தமிழில் 360 வகைச் சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, தூது, பரணி, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, அந்தாதி, புராணம் ஆகியவை பெருவழக்கில் உள்ளன. … …. ….   இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சிற்றிலக்கியங்கள் தரும் இசைச் செய்திகள், சிற்றிலக்கியங்களில் காணப்படும் இசைப்பாடல்கள், இசைப்பாடல்களாகவே அமைந்த சிற்றிலக்கியங்கள் என்ற மூன்று வகையில் அடங்கும். -முனைவர் இரா.திருமுருகன்:…

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! – சி.இலக்குவனார்

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! வள்ளுவர் தமிழகத்தில் தோன்றித் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால்தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப்பகைவர்களும் மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதனுடைய நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மைஅடையத் துணைபுரியும். குறள்நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி   ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…

குறுந்தகவல் பாக்கள்

  முடி சூடிய தமிழினம் முள்வேளி கம்பிக்குள் ! – ஈழபாரதி, புதுக்கோட்டை ** சிங்களப் பெண்கள் உதட்டுச் சாயம் ஈழத் தமிழர் குருதியில்! – கணேசன், காங்கேயம் ** பனிக்குடம் உடைத்து தொப்புள் கொடி அறுத்தார்கள் துடிக்கிறது ஈழம்! – அமீர்சான், திருநின்றவூர் ** அம்மணமாய்-தமிழன் அகிலமே பதைக்கிறது உடன் பிறப்புக்கு, தமிழ் மாநாடு! – ஏழைதாசன், புதுக்கோட்டை – 2 ** புத்தத் தேசத்திற்கு ஆயுதம் கொடுத்தது காந்தி தேசம்! – எசு.விசயகுமார், புதுக்கோட்டை ** அனாதையாக அமைதி தத்தெடுக்கத் துடிக்கும்…