பூங்கோதை 6- வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,
ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி செங்கமலத் தம்மையார் என்றாவது இடை குறுக்கே அவ்வறைக்குள் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த ஒரு நிலைப்பேழையில் உள்ளதையைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த அணிகள் முதலாய விலைபெறு பண்டங்களைச் சரிபார்த்து விட்டுப் போவார். செங்கமலத்தம்மையாரின் கணவர் சிவக்கொழுந்து அம்மையாரிடமிருந்து விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் ஒன்பது கடந்து விட்டன. இதே அறையில்தான் அவர் உயிர் நீத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு வெள்ளாடை போர்த்து தூக்கிச் சென்றபோது கண்ட அவருடைய வெளிறிய முகம் மீண்டும் பூங்கோதையின் நினைவிற்கு வந்தது. அச்சம்…
பூங்கோதை – 3 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,
(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) ‘இப்படித் தவறாமல் அசை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அது தானே அம்மாள் உன்னை கடிந்து கொள்கிறார்கள் என்று காளியம்மை சலித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறாக உணவை முடித்துக் கொண்டு பூங்கோதை தாழ்வாரத்தை அடுத்துள்ள தன் அறையை நோக்கிப் புறப்பட்டாள். கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊசலில் செங்கமலம் காலைத் தொங்க விட்டு அமர்ந்திருந்தாள். காளையப்பன் எதிரே கிடந்த இருக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டிருந்தான். வண்ணக்கிளி தன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டிருந்தாள். இந்த இனிய…
பூங்கோதை – 2 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,
தொடர்கதை (சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) சிவக்கொழுந்து தம் தங்கை மகளுக்குத் தம் தாயாரின் பெயரையே இட்டு அவளைப் பூங்கோதை என அன்புடன் அழைத்து வந்தார். செங்மலத்தின் கொடுமை ஒருபுறம் இருந்தாலும், சிவக்கொழுந்தினுடைய மாறா அன்பும், காளியம்மையின் பாதுகாப்பும் பூங்கோதைக்குத் துணையாக அமைந்தன. காளியம்மைக்குக் குழந்தையிடம் உண்மையிலேயே நல்லபற்று இருந்தாலும் ‘செங்கமலத் தம்மையாரின் கண்சிவக்கும்’ என்று, அவளுக்கு எதிரில் பூங்கோதையைச் சினந்தும் மருட்டியும் வந்தாள். பூங்கோதைக்கு யாண்டு ஐந்து முற்றுப் பெற்றது. சிவக்கொழுந்து…
பூங்கோதை – வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,
தொடர்கதை சிவக்கொழுந்து, மருத்துவமனைத் தாழ்வாரத்தில் வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வினாடியும் அவருக்கு ஓர் ஊழியாகத் தோன்றிற்று. மகப்பேற்றறையிலிருந்து குழந்தை வீறிட்டழும் குரல் கேட்டது. அப்பொழுது சிவக்கொழுந்தினது முகத்தில் வருத்தத்திற்கிடையே ஒரு மகிழ்ச்சிக் குறி தோன்றியது. அவர் மருத்துவப் பணிப்பெண்ணின் வருகையை எதிர்நோக்கிய வண்ணமிருந்தார். சில மணித்துளிகள் கடந்தன. மருத்துவப் பணிப்பெண் வெளிவந்து, சிவக்கொழுந்தைப் பார்த்துத் தான் சொல்ல வந்ததைச் சொல்வதற்குத் தயங்கினாள். பிறகு சிவக்கொழுந்தை நோக்கி, அப்பணிப்பெண், ‘‘பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உங்களுடைய அம்மாவின் சாயலாக இருக்கிறது’’ என்றாள். குழந்தையைப் பெற்ற தாயின்…