அபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி
சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி,கீழக்கரை
சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி மொத்தப் பரிசுத் தொகை :உரூ. 48,000/ + 84 வெற்றிக்கிண்ணங்கள் இராமநாதபுரம் மாவட்டச் சதுரங்கக் கழகமும் கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான குழந்தைகளுக்கான முதல் சதுரங்க விளையாட்டுப் போட்டி கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியில் கார்த்திகை 04 & 05, 2047 19.11.16 &20.11.16 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் 9, 11, 13, 15, ஆகிய அகவைக்குட்பட்ட பள்ளி…
மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி
மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி! ‘அடையாளம்’ எனும் தொண்டு நிறுவனமும் ‘தாமரைக்குளம்’ பதிவர் சங்கமும் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தைக் கொட்டக்கலை உ.தொ.ம.(g.t.c.) மகளிர் அணி வெற்றி கொண்டது. நானுஓயா தாச்மகால் அணி இரண்டாம் இடத்தையும் நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி மூன்றாம் இடத்தையும் அடைந்தன. முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வெற்றிக்…
கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது – காவல் ஆய்வாளர் அறிவுரை
கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது காவல் ஆய்வாளர் இரமேசு அறிவுரை தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது எனப் பேசினார். விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளார் இரமேசு சிறப்புரையில், “சிறு…
ஊர்ச்சந்தை, சென்னை
தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 09.00 சென்னை மல்லர் கம்பம் எனும் மரபு வீர விளையாட்டு காண வாரீர்! சென்னையில் ஊர்ச் சந்தை – 2! செம்மையின் ஊர்ச் சந்தை மீண்டும் சென்னையில் நிகழவுள்ளது. முதல் சந்தை கடந்த சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சந்தை பிப்பிரவரி 7 ஆம் நாள் கூடுகிறது. இந்த நிகழ்வு ‘செம்மைச் சமூகம்’ எனும் அமைப்பினால் நடத்தப்படுகிறது. மரபுக்குத் திரும்பும் விருப்பம் கொண்டோரின் கூடல்தான் செம்மைச் சமூகம் ஆகும். ஊர்ச் சந்தை…
கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு
கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் ஆவணி 13 / ஆகத்து மாதம் 30 ஆம் நாள் மாநாயகர்(மேசர்) அப்பாசு அலி பூங்காவில் காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது. அழிந்து போகும் தமிழர் தாயாக மண்ணின் நினைவுகளை மீட்கும் தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு கனடிய மண்ணில் இளையவர்களால் அணிகளாக அணி வகுத்து மாபெரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வாக…
நெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்
நெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள், பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன. இறுதியில் 3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும் 1 ஆம் இடத்தினை எல்லாளன் தமிழர் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன….
இத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்!
இத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது….
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடை விழா 2014
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 2014 ஆம் ஆண்டுக்கான கோடைவிழா மிகச் சிறப்பாக கடந்த 07-07-2014 அன்று நடைபெற்று முடிந்தது. அந்நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்புகள் இங்கே! ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காண்க!
தமிழீழ விளையாட்டு விழா-2014, முன்சன்
முன்சன்-தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்திய தமிழீழ விளையாட்டு விழா-2014 ஆனி 21, 2045 சூலை 05, 2014 சனிக்கிழமை 11:00 மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கியது. சிறுவர் சிறுமிகளின் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல், சாக்கோட்டம், பந்தெறிதல் கயிறடித்தல் பெற்றோர்களுக்கு ஓட்டப்போட்டிகள், இசைநாற்காலி(சங்கீதக்கதிரை) இடம்பெற்றன தமிழீழ விளையாட்டான நாயும் முயலும் விளையாட்டை இளையோர்கள் விரும்பி மகிழ்வுறும் முறையில் விளையாடினார்கள். வெற்றி வீரர்களுக்கு தமிழாலய ஆசிரியைகள், சிறப்புப்பணியாளர்கள் பதக்கங்கள்,கிண்ணங்களை வழங்கிப் பாராடடினர். தமிழீழ விளையாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் திடலில் பணியாற்றியவர்களுக்கும், சிற்றுண்டி உணவைச்…
தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014
பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது; தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர்…
பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள்
தமிழர் பண்பாட்டுக் கழகம், முன்சன்-யேர்மனி தியாகி பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள் யேர்மன் தேசியக்கொடி, தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன்தொடங்கியது.உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டப் போட்டிகளில் நியூரென்பர்கு, ஆலென், மூன்சென்(Nürenburg, Alen, München) நகரங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு கடும் போட்டிகளுக்கு மத்தியில்தங்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினார்கள். பார்வையாளர்களின் ஆரவாரமான ஊக்கமும், உற்சாகமும் விளையாட்டு வீரர்களை மேலும்சிறப்பாக ஆடவைத்ததால், அவர்கள் வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இறுதியில்பரிசளிப்பில் முன்சன்-தமிழாலய நிருவாகி, ஆசிரியைகள், தமிழர் பண்பாட்டுக்கழகத்தவர்கள் வெற்றி வீரர்களுக்கு, பதக்கங்கள், கிண்ணங்களை வழங்கிமதிப்பளிப்பு செய்தார்கள் இவ்வண்ணம் நிகழ்வுகள் இனிதே…