சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி
சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார். ’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்: கார்த்திகை 08, 2049 /சனிக்கிழமை / 24.11.2018 பிற்பகல் 5 மணிக்கு (635 MIDDLE FIELD SCARBOROUGH இல் அமைந்துள்ள) ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மாவீரர் நினைவுகளோடு பைரவி இசையருவியின் எழுச்சி கானங்களும், கலை நிகழ்வுகளும் நடைபெறும். கார்த்திகை 09, 2049 / 25 .11.2018 முதல் கார்த்திகை 11 / 27.11.2018 வரை, பிற்பகல் 1 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை (24-5210 FINCH AVE (FINCH & MIDDLE FIELD ) இல் அமைந்துள்ள) நாடு…
மாவீரர் நாள், அமெரிக்கா
கார்த்திகை 11, 2049 / செவ்வாய்/ 27.11.2018 மாலை 6.05 80-51, 261ஆம் தெரு, கிளென் ஓக்கு, புதிய யார்க்கு – என்.ஒய்.11004 மாவீரர் நாள் எழுச்சி உரை: பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நினைவுரை: வி.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பிற்கு: 917 8800 320
‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்
‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில் ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார். திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…
மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம், சென்னை
ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 10.00 முதல் நண்பகல் 1.00 வரை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், தரமணி (M.S.Swaminathan Research Centre) மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம் மலேசியாவில் 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி 22,23,24 இல் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. தொடர்பான ஆதரவிற்காகவும் கருத்துரை தெரிவிக்கவும் நடைபெறும் கூட்டம். தலைமை: தமிழ்ச்செம்மல் ப.முத்துக்குமாரசுவாமி(வ.உ.சி.பெயரனார்) ஆர்வலர்கள் வருக. இங்ஙனம் மநாநாட்டுக்குழுவினர் கவிஞர் உடையார்கோயில் குணா தமிழ்த்தாய் அறக்கட்டளை,மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் 613501 பேசி 75300…
புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது
புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது தமிழ் இனத்தின் புதிய நம்பிக்கை இராகினி. அவரது ஆசிரியர்களுக்குப் புலமைப்பரிசில் புதிய வெளிச்ச நிதி நூறாயிரம் உரூபாய்! அண்மையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்விற்கான பெறுபேறுகள் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாணவி இராகினி தேசிய நிலையில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் தேர்வில் 169 புள்ளிகளைப் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இவர் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தன் தாய், படையினரின் குண்டுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்த் தன் ஒரு கையையும் இனஅழிப்புப்போரில் பறிகொடுத்த குழந்தையாவார் . விழ…
இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்
இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம் மகிந்த இராசபக்சவைத் தலைமை யமைச்சராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைக் கேலி செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையாளரர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா, இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது எனத் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து…
பிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019
பிரித்தானியா தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019. பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடிப்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான…
ஒன்றியக் கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு -நூல் வெளியீட்டு விழா, இலண்டன்
ஐப்பசி 10, 2049 27.10.2018 மாலை 6.30 சிவன்கோயில் அரங்கம், இலண்டன் முன்னாள் அதிபர் திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களின் ஒன்றியக்(யூனியன்) கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு -தங்கத் தாரகை- நூல் வெளியீட்டு விழா ! தொடர்புகளுக்கு: திருமதி சொருணாதேவி தம்பிபிள்ளை (காஞ்சி) தலைவர் kaanji@yahoo.com https://www.facebook.com/photo.php?fbid=10156732149031950&set=a.10153556195046950&type=3
துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்
துபாய் ஈமான் அமைப்பு இரத்தத்தான முகாம் புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை அட்டோபர் 12, 2018 காலை 10.00 முதல் 2.00 வரை திறன் மண்டல(talent zone)நிறுவனம், என்.எம்.சி. மருத்துவமனை பின்புறம் துபாய் அல் நக்தா பகுதி இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும். தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95
துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்
துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள் ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர். மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம் ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர். தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல் அல்லல்பட்டு வருகின்றனர். இதனால்…
ஓமானில் பாரதி விழா
ஓமானில் பாரதி விழா கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்! என்ற பாரதியின் கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா? ஆம்! கடந்த புரட்டாசி 4, 2049 (20-9-2018) வியாழன் மாலை ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம், மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது! எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,…
