உதவிடலாம் ! – எம் .செயராம(சர்மா)
உதவிடலாம் ! பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து அரவணைத்து உதவிடலாம் ! ஓலைக் குடிசைதனில் ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு ஒழுங்கான வாழ்வுவர உள்ளத்தால் உதவிடலாம் ! நீர்கூடக் கிடைக்காமல் நிம்மதியைத் தொலைத்துநிற்கும் ஊரெல்லாம் தனையெண்ணி உணர்வோடு உதவிடலாம் ! மருத்துவ வசதியின்றி மனம்நொந்து நிற்பார்க்கு மருத்துவத்தைத் தெரிந்தவர்கள் மனதார உதவிடலாம் ! ஏமாற்றிப் பிழைப்பவரின் இடருக்குள் புகுந்தவர்கள்…
அமீரகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு
– முதுவை இதாயத்து
தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை! – வித்யாசாகர்
தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை – வித்யாசாகர் துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களைக் குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை – பிஞ்சுகளைக் கொன்று கடும் நஞ்சாய்ப் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு இரத்தம், அது சிந்திச் சிந்தி நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழெனில் சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ? “ச்சீ”.. கேட்கவே வெட்கம் செங்கல் வேகலாம், சாதியில்…
இமாசான் எழுதிய 100 தமிழ்நூல்கள் வெளியீட்டு விழா, சிங்கப்பூர்
ஆடி 16, 2046 / ஆக. 15, 2015
‘கனடா – தாய்வீடு’ இதழ் அறிமுகம் : மு.பி.பா.
ஆடி 21, 2046 / ஆக. 06, 2015 மாலை 6.30 பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை 600 007 பேரா.மு.பி.பாலசுப்பிரமணியன் திரு பொன்னையா விவேகானந்தன்
சங்க இலக்கியப் பயிலரங்கு,
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான சங்க இலக்கியப் பயிலரங்கு நெறியாள்கை: திருமதி வைதேகி எர்பெர்ட்டு (சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்) இடம் : ஐயப்பன் ஆலய மணிமண்டபம் நிகழ் நிரல்: சனிக்கிழமை ஆடி 23, 2046 / ஆக.08, 2015 10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் 10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்) 10:10 மு.ப பயிலரங்கு 12:00 பி.ப நண்பகலுணவு 1:00 பி.ப பயிலரங்கு 3:00 பி.ப…
கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு
கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு கனடாவின் கியூபெக்கு மாநிலத்தில் மொன்றியல் கிழக்குப் பகுதியில் கடந்த ஆடி 02, 2046 / 18-07-2015 அன்று பலநாடுகள் பங்குகொண்ட பல்கலை நிகழ்வு 2015 (Quebec City Festivals and Events) நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 5 வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் தங்களின் கலை, பண்பாட்டினை பல்லின மக்களோடு பரிமாறும் பொருட்டு, கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் வருடா வருடம் பங்குகொண்டு பல கலை நிகழ்வுகளை மேற்கொண்டுவருகின்றது. ‘Festival d’été de Québec’ என்னும்…
எசன் நுண்கலைக்கல்லூரியின் 30 ஆவது ஆண்டு கலைத்திருவிழா
ஆவணி 19& 20, 2046 – செப். 5 & 6, 2015
எமது போராட்டம் ஒவ்வொன்றும் தன்நிறைவும் கொண்டவையே – இராம் சிவலிங்கம்
எமது போராட்டம் ஒவ்வொன்றும் தனித்துவமானதும் தன்நிகரற்றதும் மட்டுமல்ல! தன்நிறைவும் கொண்டவையே — கலாநிதி இராம் சிவலிங்கம் விடுதலை இந்தியாவுக்கான அறவழிப் போராட்டத்தின்போது, அதன்மகிமையை உணர்ந்த பிரித்தானிய அரசு, மாண்புடன் செயற்பட்டதால், இந்தியாவின் விடுதலை உறுதியானது. எமது அறவழிப் போராட்டம், அதன் தன்மையை மதியா சிங்கள அரசின்அடிதடிக்கு உள்ளாகி, இரத்தம் தோய்ந்த போராட்டமாக மாற்றம் பெற்றது. அன்பை ஆயுதமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தில், நாம் பொறுப்போடுநடந்ததால், இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றோம். உள்நாட்டு மோதல்,இலங்கை-இந்தியச்சிக்கலாக மாற்றம் பெற்றது. அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக ஆயுதம் ஏந்துவதும்ஓர்அறவழிப் போராட்டமே…
‘தமிழ்க்கோ’ அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!
ஆசுதிரேலியா / அவுத்திரேலியா, ‘தமிழ்க்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்துச் சிறப்பிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்குப் பணப்பரிசில்கள் அளிக்கப்படும். 1ஆம், 2ஆம் பிரிவுகளுக்கு: 1 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய் 2 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய் 3 ஆம் இடம் ஐயாயிரம்…
இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே! – துடிசைக்கிழார்
இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டிலிருந்து சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகஸ்தனீசு என்பவர், தாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வாகக் கேள்விப்பட்டதாகப் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றபோது, “ஈராக்ளிசுக்குப் பாண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தாள். அவன் அப்பெண்ணிற்குத், தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தான். அங்கு அவனது ஆட்சிக்குட்டப்பட்டவர்களை முந்நூற்று அறுபத்தைந்து ஊர்களில் பகுத்து வைத்து, ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குக் கப்பம் கட்ட வேண்டுமென்ற கட்டளையிட்டான்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில்…
கருப்பு ஆடி, 32 ஆம் ஆண்டுத் துயர நினைவு, இலண்டன்
83ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் 10, தவுனிங்கு தெரு(Downing Street) முன்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. 1983 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் நாள் இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஆடி 07, 2046 / சூலை மாதம் 23 ஆம் நாள்…