எங்கே நீ இருக்கின்றாய் அம்மா? – கவிஞர் சீனி நைனா முகம்மது

அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய ஆண்டவனுக் கியலாத காரணத்தால் தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள் தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால் எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா? தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத் தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?

இவனா தமிழன் ? இருக்காது – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

இவனா தமிழன் ? இருக்காது யானைக்குப் பூனை பிறக்காது! இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால் எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு! தமிழால் வேலையில் சேருகிறான் தமிழால் பதவியில் ஏறுகிறான் தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத் தடுத்தால் உடனே சீறுகிறான்! வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்! வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான் கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக் கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக் கடிந்தால் உடனே தூற்றுகிறான்! தானும் முறையாய்ப் படிப்பதில்லை தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை தானெனும் வீம்பில்…

அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ? அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ! பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்! குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக் குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்! வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர் வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது! விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன் வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!  

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…

செஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி

(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) 8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை   நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கைஇது!    பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டேசாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விளைவில் உழைப்பை…

செஞ்சீனா சென்றுவந்தேன் 7 – பொறி.க.அருணபாரதி

  (ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) 7. அழிவின் விளம்பில் சீனச் சிற்றூர்களும், கலைகளும்    சீன நகரங்களின் ‘வளர்ச்சி’ என்பது, சீனச் சிற்றூர்களின்அழிவிலிருந்தே தொடங்குகிறது. சீனாவின் புகழ்பெற்ற சீயான்சின்(Tianjin) பல்கலைக் கழகத்தின் கணக்கெடுப்பு ஒன்றின்படி, 2000ஆவது ஆண்டில் சீனாவில் சற்றொப்ப 3.7 பேராயிரம்(மில்லியன்) ஊர்கள்ள் இருந்தன. 2010ஆம் ஆண்டு, அது 2.6 பேராயிரமாகக் குறைந்துள்ளது. அஃதாவது, ஒரு நாளைக்கு 300 சீனச் சிற்றூர்கள் அழிந்து கொண்டுள்ளன. (காண்க: தி நியூயார்க் டைம்சு, 02.02.2014). இது சீன…

செஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி

(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி) 10.    மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்.. சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 618லிருந்து 904 வரை (இ)டாங்கு அரச குடும்பத்தினர், சங்கன் பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி புரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களை விட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதென பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச்…

நெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்

நெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள்,   பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன. இறுதியில் 3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும் 1 ஆம் இடத்தினை எல்லாளன் தமிழர் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன….

இத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்!

  இத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது….