நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கியப் போட்டி
(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா) ‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம். படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும். கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது. கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக…
தொடரி வேலைவழங்கு கழகம்(ஆர் ஆர் பி) – முற்றுகைப் போராட்டம்
அன்புடையீர்! நேற்று இலங்கையில்… இன்று இந்தியாவில்… தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பதைக் கண்டித்து தொடரி வேலைவழங்கு கழகம்(ஆர் ஆர் பி) – தேர்வு மையம் முற்றுகைப் போராட்டம் தொடர்பான துண்டறிக்கை இணைத்துள்ளேன். பார்க்க.. படிக்க.. பரப்புக… ப.வேலுமணி 9710854760
சிரீஇராமகிருட்டிண விசயம் – சிறுகதைப் போட்டி
சிரீஇராமகிருட்டிண மடத்தில் இருந்து வெளியாகும் சிரீஇராமகிருட்டிண விசயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ், சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பகவான் சிரீஇராமகிருட்டிணர், அன்னை சிரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் வரலாறுகள், அவர்களது அறிவுரைகள் மற்றும் நமது சாத்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் சிரீஇராமகிருட்டிண விசயத்தில்…
300 ஆயிரம் பரிசு: திருக்குறள் வினாடி-வினா போட்டி, கரூர்
செந்தமிழைப் போற்றுவோம்! அயல் மையலை விரட்டுவோம்!
தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றம் பெ. சிவசுப்பிரமணியன் ஆட்சி அலுவலர் (ஓய்வு) தலைவர் 25/47, இரண்டாவது தெரு, செரியன் நகர், புதுவண்ணையம்பதி, சென்னை – 81. 044 – 2591 0102 செந்தமிழைப் போற்றுவோம்! அயல் மையலை விரட்டுவோம்! பேரன்புடையீர், வணக்கம். உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் தாய்மொழியைப் போற்றுகின்றன. ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, ஆசுதிரேலியா என ஆறு கண்டங்களிலும் அவரவர் தாய்மொழியே கோலோச்சுகின்றன. எந்த நாட்டிலும் அயல் மொழி மோகம் காணப்படவில்லை!…
இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:
அ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு பெருமதிப்பிற்குரியீர் வணக்கம் . தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது . அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள், ஆய்வாளர்களுக்கான 25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது . ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும் தேர்வு பெறும் …
அசோகமித்திரனை வாசித்தல் – கருத்தரங்கம்
சனி – வைகாசி 24, 2045 /07 சூன் 2014 சீனிவாச சாத்திரி அரங்கம் (காமதேனு திரையரங்கம் எதிரில்) மயிலாப்பூர் சென்னை – 600 004 அமர்வு ஒன்று – 10.00 – 12.30 அசோகமித்திரன் புனைவுலகின் சில பரிமாணங்கள் அசோகமித்திரன் கதைகளில் திரை உலகம் – அம்சன் குமார் அசோகமித்திரன் கதையுலகில் பெற்றோர்களும் பிள்ளைகளும் – கல்யாண இராமன் இலக்கிய நயம் பாராட்டும் மரபில் அசோகமித்திரன் கதைகள் – பெருமாள் முருகன் உணவு இடைவேளை 12.30 – 1.45 அமர்வு இரண்டு 1.45…
புதின இலக்கிய முகாம்
கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற சூன் 14 (14/06/2014) சனிக்கிழமை, புதினம் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன். இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாசு, ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது. இந்த ஒரு நாள் முகாமில் உலகின் தலைசிறந்த புதினங்கள், தமிழ்ப்புதினத்தின் சமகாலப் போக்குகள், தசுதாயெவ்சுகியின் புதினங்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன் புதினம் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடலும்…
வல்லமை வழங்கும் கண்ணதாசன் கட்டுரைப் போட்டி
அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும்கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப்…
இலக்கியப் போட்டி 2014
13 ஆவது தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் பற்றியஅறிவிப்பு
13 ஆவது தமிழ் இணைய மாநாடு கட்டுரைகள், ஆய்வுச்சுருக்கங்கள் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நடத்தும் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 நாள்களில் நடைபெற உள்ளன. புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து உத்தமம் இம்மாநாட்டை நடத்த உள்ளது. 2014 மாநாட்டிற்குத்…