காட்சிப்பொருளல்ல நீ!- முனைவர்.கிருட்டிணதிலகா
காட்சிப்பொருளல்ல நீ! ஆவலாய்ச் சுற்றி வரும் வண்டுகள். பெண்ணே! காவலாய் உரோசாவைச் சுற்றியெழும் முட்களாய் பாவையே! பார்த்திடு! பதம் பார்த்திடு! ஆவியில் வீரம் விளையப் பூத்திரு! பாதகம் செய்பவரை மோதி மிதித்து விடு! காதகர் பேசிடும் சாதகப் பேச்சுகளைத் தீயிலிடு! மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்தி விடு! ஆதவனாய் ஆர்த்தெழு! வேதனையை ஒதுக்கிவிடு! பாரதம் கொண்டதொரு பாரம்பரியம் போற்றிவிடு! வேரதாய் விளங்கும் வேலியாம் அடக்கம் காத்திடு! போடுகின்ற உடைகண்டு போற்றவேண்டும் யாவரும்! பீடுநடை தான்கொண்டால் போற்றிடுவார் புலவரும்!…
தந்தை பெரியார் சிந்தனைகள் : நூலாசிரியரைப் பற்றி. . .
(தந்தை பெரியார் சிந்தனைகள் 42 இன் தொடர்ச்சி) இந்நூலாசிரியரைப் பற்றி. . . 85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எசு.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர். (குறிப்பு – இக்குறிப்பு நூல் வெளிவந்த பொழுது எழுதப்பெற்றது. முனைவர் ந.சுப்பு(ரெட்டியார்) 2006 மேத்திங்கள் முதல் நாள் மறைந்தார். ) ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி நிறுவனர், தலைமை யாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் – துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள்…
தந்தை பெரியார் சிந்தனைகள் பின்னிணைப்பு 1 & 2
(தந்தை பெரியார் சிந்தனைகள் 41 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 42 பின்னிணைப்பு-1 சவகர்லால் நேரு மறைந்த போது அவர் நினைவாக நேரு அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளைத் திரட்டி ‘இந்தியப் பேரொளி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது கழகம். அங்ஙனமே அறிஞர் அண்ணா மறைந்தபோது அம்முறையில் தொகுத்து ‘தமிழ்ப் பேரொளி’ என்ற தலைப்பில் வெளியிட்டது. தந்தை பெரியார் மறைவு நினைவாக இங்ஙனமே ஒருநூல் வெளிவரத் திட்டமிட்டது கழகம். ஆனால் எக்காரணத்தாலோ நூல் வெளிவரவில்லை. அதற்குக் கழகம் வேண்டியபடி 18.2.1974இல் தந்தை பெரியாரைப்பற்றி…
தந்தை பெரியார் சிந்தனைகள் முடிவுரை: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 40 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 41 முடிவுரை முடிவுரை: என் பேச்சுகளுக்கு மூல மனிதராக இருக்கும் நாயக்கர் வாழ்க்கைக் குறிப்புகளையும் அவரது தோற்றத்தைப் பற்றியும் இன்று விளக்கப்பெற்றது. மொழிபற்றிய தோற்றம் வரலாற்று அடிப்படையில் விளக்கப்பெற்றது. அடுத்து இதன் அடிப்படையில் எது தமிழ் என்பது தெளிவாக்கப் பெற்றது. பலகால உழைப்புதான் மொழியாக அமைந்தது என்று சுட்டப்பெற்றது. மொழி ஆராய்ச்சியில் தெய்வக்கூறு பெரியரால் வெறுக்கப்பெற்றது என்றும், மூளையின் வளர்ச்சி காரணமாகத்தான் மொழி வளர்ந்தது என்றும் கூறி கிளியின் பேச்சில் மூளையின் கூறு…
ஆளுநர் அதிகாரங்கள் – ஏட்டிலும் நாட்டிலும் – இணைய உரையரங்கம்
தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் ஆளுநர் அதிகாரங்கள் – ஏட்டிலும் நாட்டிலும் – இணைய உரையரங்கம் மாசி 08, 2053 / ஞாயிறு / 20.02.2022 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: செல்வி சி. வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரியிலிருந்து பணியாளுமையர் பொறி. த.ஞானசேகரன், மே.வங்கத்திலிருந்து எழுத்தாளர் புதிய மாதவி, மராட்டியத்திலிருந்து திருவள்ளுவர் விருதாளர் மு. மீனாட்சி சுந்தரம்,…
பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 39 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 40 பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி (18) “மனச்சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை ‘நாத்திகன்’ என்று கூறும் அன்பர்கள் நாத்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன். . . அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை, உபகதைகளை,…
பெரியார் பற்றி அறிஞர்கள் – 1 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
தந்தை பெரியார் சிந்தனைகள் 38 இன் தொடர்ச்சி தந்தை பெரியார் சிந்தனைகள் 39 8. பெரியார் பற்றி அறிஞர்கள் (1) “நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தியபின்னர் அவர் தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கனமழையாகும்; கல்மழையாகும்; மழை மூன்றுமணி நேரம், நான்கு மணிநேரம் பொழியும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் -கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர் ” -திரு.வி.க. (2) “எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமுதாயச் சீர்த்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ-அங்கங்கெல்லாம் ஈ.வே.இரா.வின் பெயர் ஒளி வீசித்…
சமற்கிருதம் செம்மொழியல்ல: கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை
தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல சமற்கிருத இணைய அரங்கம் 15 கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை மாசி 01, 2053 / ஞாயிறு 13.02.2022 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: திருவாட்டி புனிதா சிவக்குமார் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: கவிஞர் தமிழ்க்காதலன் முனைவர் மு.கருணாநிதி நிறைவுரை: தோழர் தியாகு நன்றியுரை : செல்வி வானிலா அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 37 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 38 8. இலக்கியம் ‘இலக்கியம்’ என்ற பெயருக்குத் தகுதியான நூல்களை அறிஞர்கள்தாம் இயற்ற முடியும். பண்டைக்காலம் முதல் இலக்கிய ஆசிரியர்கள் பலவகையான சிறப்புகளையும் அறிவாற்றலையும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். எவரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரேயாவர். ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம்புலவர்வார்த்தைபதி னாயிரத் தொருவர் (குறிப்பு 1 ) என்ற வெண்பாப் பகுதியால் அறியலாம். எந்த நூலைப் படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றதோ…
தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 36 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 37 7. தமிழ்ப்புலவர்கள் தமிழ் மொழியைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் ஆராய்ந்து பேசும், எழுதும் தமிழ்ப்புலவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கட்கு நல்ல மதிப்பு இல்லை; குறைகள் மிகுந்தவர்கள், ஒழுங்கற்றவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் என்றே கருதுகின்றார். புலவர்களைப் பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகள்: (1) நம்நாட்டில் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை. தமிழ்ப்புலவர்கள் ஆரியப்பண்பாடு, பழக்கவழக்கங்களில் மூழ்கிப் போனவர்களாவார்கள். மேனாட்டுப் புலவர்கள் இப்படியல்லர்; அவர்கள்…
தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 35 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 36 5. தமிழ்மொழியாராய்ச்சி மேலே காட்டியவாறு பெரியாரின் இந்தி எதிர்ப்புச் சிந்தனைகளைக் கண்டோம். தமிழ் மொழி ஆய்வுபற்றியும் சிந்தனைகளைச் செலுத்தியுள்ளார். அச்சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். (1) ‘தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை தமிழேயாகும்’. மலைநாட்டுப் பகுதியில் பேசும் தமிழ் மலையாளம் என்று சொல்லப்பெறுகின்றது, கருநாடகப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் கன்னடம் எனப்பெறுகின்றது. ஆந்திரப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் தெலுங்கு எனப்படுகின்றது. இந்த நால்வரும் பேசுவது தமிழ்தான். (2) திராவிடமொழிகள்…
தமிழனின் மொழிப்போர் எதற்காக? – இலக்குவனார் திருவள்ளுவன், இன்றைய(25/01) உரை
திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையவழிக் கருத்தரங்கம் 37 தை 12, 2053 / செவ்வாய் / 25.01.2022 / மாலை 6.30 குறி எண் : 894 6054 6548 கடவு எண் : 202020 வலையொளி நேரலை : Dhiravidam 1944 தலைமை: தகடூர் சம்பத்து சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழனின் மொழிப்போர் எதற்காக?” தொடர்பு : 8939 59 4500