திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 10 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 334) “நாள் என்பது காலங்காட்டிபோல் தோன்றினாலும் உயிரைப் பறிக்கும்(ஈரும்) வாளே அது. வாழ்நாள்இயலை உணர்ந்தவர்கள் இதனை அறிவர்” என்கிறார் திருவள்ளுவர். இத்திருக்குறள் மூலமாகத்தான் நாட்காட்டி என்ற சொல் உருவானது என்பர். நாள் என்பதைத் திருவள்ளுவர் 20…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 9 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 306) தீப்பிழம்பில் முக்கி எடுததாற்போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு குறித்து முன்னரே குறிப்பிட்டிருந்தோம். நெருப்பு அல்லது ‘தீ’ என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயல், ‘தீ’ என்பது, பொருட்களில்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 8 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் ) நிலத்தைக் கையால் அடித்தால் அடித்தவன் கைதான் வேதனைக்கு உள்ளாகும். அதுபோல், சினத்தைக் கொண்டால் கொண்டவனுக்குத்தான் துன்பம் என்கிறார் திருவள்ளுவர். நிலைநிற்றல் என்னும் பொருளில் ‘நில்’ என்னும் சொல்லிலிருந்து நிலம் என்னும் சொல் உருவானது….
இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது. எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம். ‘ஆதி’…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 7 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 7 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 306) சினம் என்னும் நெருப்பு, அதனைக் கொண்டவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக இருப்பவரையும் அழிக்கும் என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பின் உணவைச் சமைத்தல் போன்ற நிலைகளில் பயன் தரும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 6 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 6 புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் 298) “புறத்தில் உள்ள தூய்மை நீரால் அமைகின்றது. உள்ளத்திலுள்ள குற்றமில்லா தூய்மை என்பது வாய்மையால் காணப்படும்” என்கிறார் திருவள்ளுவர். உலகில் 70 விழுக்காட்டிற்கு மேலாக நீர்தான் நிறைந்துள்ளது. உயிரினங்களின் உடலிலும் நீர்மம் உள்ளது. இத்தகைய இன்றியமையாத…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் – 3, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 3 அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி (திருவள்ளுவர், திருக்குறள் 245) “அருள் உள்ளம் கொண்டவர்க்குத் துன்பம் இல்லை. அதற்குச் சான்று காற்று இயங்கும் வளம் உடைய பெரிய உலகம்” என்கிறார் திருவள்ளுவர். காற்று எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்க்கும் உதவி நிலைத்து…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 2, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 2 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17) ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர் மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால் கடல் தன்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (திருக்குறள் 1) திருவள்ளுவர் கூறும் இம்முதல் குறட்பாவிலேயே மிகப்பெரும் அறிவியல் உண்மையை உணர்த்தியுள்ளார். இக்குறளுக்கு உரை எழுதியுள்ள பெரும்பான்மையர் ஆதி பகவன் என்பதற்குக் கடவுள் என்றே கூறியுள்ளனர். பகவன் என்பதற்குச் சூரியன் என்றும் பொருளுண்டு. பிங்கல நிகண்டு (சூத்திரம் 210)…
தமிழைப் போற்ற வாருங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழைப் போற்ற வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி…
புறநானூறு சொல்லும் வரி நெறி! -இலக்குவனார் திருவள்ளுவன்
புறநானூறு சொல்லும் வரி நெறி! மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன், சூலை 5 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைத்த 2019-20 நிதிநிலை அறிக்கையில் புறநானூற்றுப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்பையும் பண்டைத் தமிழரின் வரி விதிப்புக் கொள்கையையும் உலகம் அறியச் செய்துள்ளார். எனவே, அவருக்கு நம் பாராட்டுகள். அவரால் மேற்கோளாகக் கூறப்பட்ட பாடலை நாமும் அறிவோமா? புலவர் பிசிராந்தையார் காணாமலேயே கோப்பெருஞ்சோழனுடன் நட்பு கொண்டவர்; அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பொழுது தாமும் உண்ணாமல் உயிர்…
தமிழால் இணைவோம்…! – மறைமலை இலக்குவனார்
தமிழால் இணைவோம்…! தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம். உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில்…
