சிறுநண்டு – உருத்திரமூர்த்தியின் தமிழிசைப்பாடல்
சிறுநண்டு – தமிழிசைப்பாடல் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும். கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும். வெறுவான வெளி மீது மழை வந்து சீறும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். நெறி மாறுபட நூறு சுழி வந்து சூழும் நிலையான தரை நீரில் இலை போல் ஈடாடும். இருளோடு வெளியேறி வலை வீசினாலும் இயலாது தர வென்று கடல் கூறல் ஆகும்….
மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி – குள.சண்முகசுந்தரம்
அரியலூர் மாவட்டம் மருதூர் மக்களைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகத் தனி மனிதனாகப் போராடி வருகிறார் மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற பெரியசாமி. செயங்கொண்டம் அருகே இருக்கிறது மருதூர். எந்த முன்னேற்றமும் எட்டிப் பார்க்காத சிற்றூர் இது. கூப்பிடு தொலைவில் முந்திரிக் காடுகள் இருப்பதால் பள்ளிக் சிறுவர்கள் கூட இங்கே மது, சூது என வழிதவறிக் கிடப்பது வெகுஇயல்பான ஒன்று. தான் பிறந்த இந்த ஊரைத் திருத்துவதற்காக ஒன்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறார் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி. “சட்டம்(எம்.ஏ., பி.எல்.,) படித்த எனக்கு…
இந்த வார வல்லமையாளர் – திரு. பாலமுருகன்
வல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழ் சித்திரை 2043 / ஏப்பிரல் 2012 இலிருந்து கிழமைதோறும்-அக்கிழமையில் சிறந்த ஆற்றலாளரைத் தேர்ந்தெடுத்து – வல்லமையாளர் விருது வழங்கி வருகின்றது. ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் யாராயினும் அடையாளங் காணப்பட்டு வல்லமையாளர் விருதால் சிறப்பிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்த வார (ஆவணி 23, 2045 / செப்.8,2014) வல்லமையாளர் விருது அகரமுதல படைப்பாளர்களில் ஒருவரும் திருவண்ணாமலைத் துணை வட்டாட்சியருமான திரு ச.பாலமுருகனுக்கு வழங்கப்பெற்றுள்ளது. விருதாளர் பாலமுருகனுக்கு வாழ்த்துகளையும் விருது வழங்கும்…
பிரான்சு கம்பன் மகளிரணியின் முத்தான கவிதை மூன்று
பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்? மரபுக் கவிதையைச் சுவைப்போர் குறைந்து வருவதும், அதைப் புரிந்து கொள்வோர் அருகி வருவதும் கண்கூடு. தொன்று தொட்டு வரும் கவி அரங்கம் அல்லது கவி மலர் என்கிற பாணியில் மக்களைச் சலிப்புற வைப்பதற்கு மாற்றாக அவர்கள் ஊன்றிக் கவனிக்கும் வகையில் அவற்றை அளித்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடே கடந்த இரு வருட மகளிர் விழாவில் முன் வைத்தக் கவிதைகள். சென்ற வருடம் “வினா-விடை” முறையில் ஒரு கவிஞர் கேட்கவும், மற்றொருவர் விடையளிக்கவும் வைத்த உத்தி…
அயல் எழுத்து அகற்று! – இலக்குவனார் திருவள்ளுவன்,
ஓர் இனம் என்றும் வாழ அதன் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அம் மொழி நிலைத்து நிற்க அதன் எழுத்து சிதைக்கப்படாமல் அயல் உரு கலக்கப்படாமல் தூய்மை போற்றப்பட வேண்டும். எனவே, எழுத்தைக் காத்து, மொழியைக் காத்து, இனத்தைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இனத்தைக் காக்கும் கடமைகளில் இன்றியமையாத முதன்மைக் கடமையாக நம் மொழிப் பயன்பாட்டில் அயல் எழுத்தை அகற்ற வேண்டும் என்பதை நாம் உள்ளத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு மொழி பேச்சிலும் எழுத்திலும் பயன்பாடின்றிப் போகும்போது அழிகின்றது….
தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! – இலக்குவனார் திருவள்ளுவன்
தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார். சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு…
சமற்கிருதமா? மீண்டும் ஒரு சண்டமாருதம்! – நக்கீரனில் தமிழ்க்கனல்
மீண்டும் தமிழுக்கு அவமதிப்பா எனக் கொதிக்கிறார்கள், தமிழ் அறிஞர்களும் கல்வியாளர்களும்! சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டு.. தமிழகமே எதிர்க்க.. அது நீக்கப்பட்டது. அந்தச் சூடு ஆறாதநிலையில், சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டு உசுப்பிவிட்டிருக்கிறது, தில்லி. நாடு முழுவதும் உள்ள மத்திய பள்ளிக்கல்வி வாரியப் (சி.பி.எசு.இ) பள்ளிகளில், வரும் ஆகசுட்டு 7-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள்வரை, ’சமற்கிருத வாரம் கொண்டாடுமாறு வாரியத்தின் இயக்குநர் சாதனா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சூன் 30-ஆம் நாளிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், அப்படி…
பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்: தினமணி வைத்தியநாதன் வலியுறுத்தல்
மத்திய அரசின் பள்ளிகளிலும் பதின்நிலைப் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் எனத் “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஆடி 2, 2045 / 18.07.14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பின்வருமாறு பேசினார்: இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் தொடக்கப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டா என்று சொல்லவில்லை. அதோடு,…
பாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு
– தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013 கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா: “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது. “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை: இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…
கரை சேருமா கச்சத்தீவு? – க. இராமையா
தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய சிக்கல், கச்சத்தீவு பற்றியது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களைக் காவு வாங்கியும், பசியடங்காக் காலனின் கொடுமைக்குக் காரணமான கச்சத்தீவின் சிக்கலுக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவைத் தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று? தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், இராமேசுவரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தொலைவு, 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20 ஆம் நூற்றாண்டில்,இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த…
(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!
முதன் முதலாக உலகத் திருக்குறள் மாநாடு! இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்! உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு! கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்! இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…
ரோசா தமிழ்ப்பெயரா? – தமிழக அரசியல்
சூன் 5-ஆம் நாள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த நான்கு சிறுமிகளுக்கு, கலைஞர் தமிழ்ப்பெயர் சூட்டினார் என்று முரசொலி செய்தி வெளியிட்டிருக்கிறது. நான்கு சிறுமிகளுக்கும் ரோசா(ரோஜா), மல்லி, அல்லி, முல்லை, என்று பெயர் சூட்டினாராம் கலைஞர். இந்நிலையில் ரோசா என்பது தமிழ்ப்பெயரா என்று சருச்சையை க் கிளப்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவரான திருவள்ளுவன் இலக்குவனார். “தமிழில் ‘ரோ’ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லே கிடையாது. ரோசா(ஜா) என்பது தமிழ்ப்பெயர் அல்ல. ரோசாப்பூவும் தமிழ்நிலத்தைச் சேர்ந்தது அல்ல. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 பூக்களின்…
