ஆறுதல் இல்லாத் தேர்தல்! – கெர்சோம் செல்லையா
ஆறுதல் இல்லாத் தேர்தல்! அள்ளி வீசும் காசுகளால், ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கின்றார். கொள்ளையடிக்கும் நோக்கில்தான், கூட்டணி என்று சேர்க்கின்றார். தள்ள வேண்டும் இவர்களை நாம், தன்மானத்தில் ஏற்பவர் யார்? வெள்ளையடித்தக் கல்லறையை, வீடெனக் கொள்வோர் தோற்கின்றார்! -கெர்சோம் செல்லையா.
மூவமைப்புகளின் முப்பெருவிழா, வனக்குடில் கண்ணாடி மாளிகை (கள்ளக்குறிச்சி)
கல்வராயன் மலைத்தொடர் வெள்ளிமலை சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 21,2016 காலை 10-00 முதல் சித்திரை முழுநிலவு 7-00 மணி வரை. முதல் நிகழ்ச்சி : பாவேந்தர்- பட்டிமன்றம். நடுவர்: முனைவர் நா.இளங்கோ. தியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சங்கைத்தமிழ்ச்சங்கம்(சங்கராபுரம்) குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்(புதுச்சேரி) நண்பர்கள் தோட்டம்
அறம் காப்பார் அடுத்த முதல்வர்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
அறம் காப்பார் அடுத்த முதல்வர்! அரசு அலுவலகம் அனைத்திலும் இங்கே, முரசு கொட்டியே கையூட்டு கூத்தாடும், அசுரகுல மாந்தர் அங்கு பணியாற்ற, அனைத்து குலமாந்தர் நலமும் பாழாகும்! ஆட்சி அதிகாரம் மாற்றம் கண்டாலும், காட்சி மாறாத கோலம் அங்கென்றும்! ஆற்று மணலென்று மக்களை எண்ணி, அங்கு நாள்தோறும் சுரண்டல் அரங்கேறும்! ஆண்டு ஐம்பதைக் கடந்த பின்னாலும், அவலம் மாறாத கொடுமை நாள்தோறும்! அதனை எண்ணி மனம் வெம்பும் அனைவர்க்கும், அரிய வாய்ப்பாக அமையும் இத்தேர்தல், அறத்தின் வழிநின்று ஆளும் ஒருவரை, அடுத்த முதல்வராய் ஆக்கலாம்…
மொழியே விழி! – கவினப்பன் தமிழன்
மொழியே விழி! மொழியென்ப மாந்தர்கட் கெல்லாங் கரவா விழியென்று கொள்ளப் படும். மறைக்காத பார்வையைப் போன்றதாயின், அது மாந்த இனத்தவருக்கு மொழியாம் என்க. உடம்பை யியக்கு முயிர்போல மாந்த ருணர்வை யியக்கு மொழி. உயிரானது உடம்பை இயக்குவது போன்று, மொழியானது மாந்தரின் உணர்வை இயக்குவதாகும். உணர்வேத்தி யுள்ளந் துலக்கி யொழுங்கிற் கணைகாத்தே யாற்று மொழி. உணர்வை ஏற்றி, உள்ளத்தைத் துலக்கி, ஒழுங்கிற்குக் காவலாய் அமையும் ஒழுக்கமே மொழி. குழியொக்குங் கொள்ளுநீர் குன்று விளக்கம் மொழியொக்குங்…
நான் சற்றுத் தூங்கிக் கொள்கிறேன்.. – முகமதுபாட்சா
நான் சற்றுத் தூங்கிக் கொள்கிறேன்… எனக்கான தூக்கத்தை யாரும் கெடுத்து விடாதீர்கள் ! ஆசையைத் துறந்த யெனக்குத் தூக்கத்தைத் துறக்கத் தெரியவில்லை ! தூங்கும் போது – நான் தியானிப்பதாகவே பொய்ச் சொல்லிக் கொள்கிறேன்! குடும்ப வாழ்வை நேசித்த வரை தூக்கத்தைத் தொலைத்திருந்தேன்! ஆசையைத் துறந்த பிறகுதான் தூக்கம் நிம்மதியாக வருகிறது! ஆசையில் தூக்கம் அடங்குமா? தெரியவில்லை ! – ஆனாலும் தூங்கித்தான் ஆக வேண்டும் ஒரேயடியாகத் தூங்கும் வரை! முகமதுபாட்சா
சித்திரைக் கலைவிழா- போட்டிகள், காட்டுப்பாக்கம், சென்னை
” உலகத் தமிழார்வலர்கள் “ தமிழ் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியம் வரைதல், கதை சொல்லும் போட்டி, இந்தியப்பரம்பரை உடைகள். தமிழ் மீது ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளுங்கள்
பாலனின் சிறப்புமுகாம், மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு சிறுமியின் பார்வை : திவ்வியா பிரபாகரன்
ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து “இந்தியா எங்களைக் காப்பாற்றும்”, “தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”, “தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்” என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப்…
மாற்றம் – கவிக்கோ ஞானச்செல்வன்
மாற்றம் ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள் காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள் பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் செய்ததுண்டோ? நெறிகள் மாறா நீணிலத்தில் நிற்பன நடப்பன மாறுவதால்! வறியோர் செல்வர் மாற்றமெல்லாம் வாழ்வின் உண்மை உரைப்பனவே! ஆடைகள் அணிகள் மாறிடினும் அரசியல் கட்சிகள் மாறிடினும் ஓடைகள் யாறுகள் மாறிடினும் உயர்மலை மடுவாய்…
சின்னஞ் சிறிய குருவி பார்! – தழல் தேன்மொழி
சின்னஞ் சிறிய குருவி பார்! சிலிர்த்துப் பறக்கும் அழகைப் பார்! கன்னங் கரிய குஞ்சுடன் களித்து மகிழும் அன்பைப் பார்! தென்னங் கீற்று ஊஞ்சலைத் தேடி யமரும் அறிவைப்பார்! புன்னை மரத்தில் கூட்டினைப் பொருந்தக் கட்டும் திறனைப்பார்! முன்றிலில் காய் நெல்லினை முனைந்து கொறிக்கும் முயற்சிபார்! சின்ன சின்ன கால்களால் சிலிர்க்க நடக்கும் விரைவைப் பார்! தன்னைத் தானே இயக்கியே தன்னின் குடும்பம் பேணுமே! உன்னை வளர்த்துக் கொள்ளவே உயர்ந்த கல்வி அளிக்குமே! விடுதலை யாய் வாழுமே, வீண் செயல்கள் இல்லையே! அடிமை வாழ்வில்…
“பயிலரங்கம்” – 6, சூலூர்
“பயிலரங்கம்” – 6 நாள் : மாசி 30, 2047 / 13-03-2016 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஆனைமுத்து அவைக் கூடம், கலங்கல் பாதை, சூலூர், கோவை. உரை: தோழர் தியாகு அமர்வு 1 : காலை 10 முதல் மாலை 4 வரை பொருள் : ” மார்க்சியப் பொருளியல் அடிப்படைகள்” அமர்வு : 2 மாலை 4 முதல் 6 வரை பொருள் : “சின்னாபின்னமாக்கப்படும் சிரியா “ ஏற்பாடு : மார்க்சிய ஆய்வு மையம் ,கோவை தொடர்புக்கு:…
அறிமுகம் : “நமது மண்வாசம்” – தமிழ் மாத இதழ்
“நமது மண்வாசம்” தமிழ் மாத இதழ் மதுரையிலிருந்து வெளிவருகிறது. ஆசிரியர். ப.திருமலை வரலாறு,கலந்துரையாடல், மருத்துவம், தியாகம், நூல்ஆய்வு, விருந்தினர்,கல்வி, பெண்கள், நகைச்சுவை, ஆளுமை, அரசியல், கலை, வேளாண்மை, தண்ணீர், சட்டம், நெய்தல், நாடும்நடப்பும், கவிதை ஆகியவை இதழில் இடம்பெற்றுள்ளன. தனிஇதழ் விலை. உரூ.20/- ஆண்டுக்கட்டணம்.உரூ.200/- முகவரி: நமது மண்வாசம் பட்டறிவு பதிப்பகம் 1-ஏ,வைத்தியநாதபுரம் கிழக்கு கென்னத்து குறுக்குத்தெரு மதுரை 625 016. தொலைபேசி.91 452 2302566 தொலைப்பதிவு +91 452 2602247 தமிழ்வானம் சுரேசு
பூவுலகு நெடுஞ்செழியன் நினைவேந்தல்
மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.00 சென்னை 4 காணொளி நேர்காணல் தமிழகத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுதியவருள் முதன்மையானவராக அடையாளங்காணப்படுபவர் தோழர் நெடுஞ்செழியன். தாராளமய உலகமயப் பொருளாதார மாற்றங்கள், சூழலிய நிலைமைகளில் ஏற்படுத்திய எதிர்விளைவுகளை இடதுசாரிப் பின்புலத்தில் திறனாய்ந்தவகையிலும், சூழலியல் சிக்கல்களை சித்தாந்தப் பின்புலத்தில் அணுகியவகையிலும் இன்றளவிலும் அவரது சிந்தனைகள் மீள் வாசிப்பு கோருபவகையாகவே உள்ளன. அவ்வகையில் பசுமை இலக்கியத்திலும் சூழலியல் அமைப்புகளுக்கும் தோழரின் சிந்தாந்த/நடைமுறை பங்களிப்புகளை நினைவுகூர்வது அவரது நினைவு நாளில் அவருக்குச்…