ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் !

பங்குனி 01, 20147 / மார்ச்சு 14, 2016 14:00 – 18:00 மணி போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை! செனீவா தொடக்கமும் இல்லை முள்ளிவாய்க்கால் முடிவும் இல்லை! ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழின அழிப்புக்கு –  படுகொலைக்கு நீதி கேட்டு  செனீவா,  ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் அணி திரள்வோம்! காலத்தின் தேவை கருதி கை கோத்து நீதி கேட்போம்! வாரீர்! வாரீர்! செனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகில் 14/03/2016 நேரம் 14:00 – 18:00 மணி  ஈகைப்போராளி…

“வேரோடும் விழுது” கவி ஏடு வெளியீடு – கவிமகன்.இ

மாசி 08, 2047 / பிப்.20, 2016 பிற்பகல் 2.30 கரவெட்டி கிழக்கு   கவிமகனின்  “வேரோடும் விழுது” கவி ஏடு வெளியீடு வரும் சனிக்கிழமை 20.02.2016 அன்று கரவெட்டி கிழக்கு அரசு தமிழ்க் கலைவன் பாடசாலையில் மாலை 2,30 மணியளவில் முருகுவெளியீட்டகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் கலந்து எனது கவிதை புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் வண்ணம் அன்புரிமையோடு கேட்டு நிற்கிறேன். வாருங்கள் வந்து நிகழ்வை சிறப்பியுங்கள். நன்றியுடனும் நட்புடனும்  இரத்தினம்…

வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! – ப.கண்ணன்சேகர்

  வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! காற்றில் மிதக்கும்  ஒலியாக கருத்தாய் மலர்ந்து பெட்டியிலே களிக்க விருந்தென வந்திடும்! வந்திடும் நிகழ்ச்சி சுவையாக வையம் முழுக்க உலவிடவே வண்ண சித்திரம் ஒலித்திடும் ! ஒலித்திடும் வானொலி செய்தியினில் உலக நிலவரம் உள்ளடக்கி ஊரும் பேரும் தந்திடும்! தந்திடும் தகவல் நலமென்றே தவறாது மக்கள் கேட்டிடும் தன்னிக ரில்லா ஊடகம்! ஊடக வரிசையில் வானொலிதான் உயர்ந்தே நிற்கும் எப்போதும் உயர்வான் கற்று பாமரன்ய்ம்! பாமரனும் பயிலும் பள்ளியென பாதைப் போட்ட வானொலியே படிக்க சொல்லும் வீடுதோறும்!…

தாயே! வேறு கடவுளும் உண்டோ?- கவி இளவல் தமிழ்

வலி பொறுத்தவள் ! பேரருட் கருணையின் திரு உருவாகி வலி பொறுத்தெம்மை பிறப்பளித் தீன்று மேதினி மீதினில் நனி உயிராக்கி நன்மையும் தீமையும் வகுத்துரைத்தெமக்குக் களிப்புறச் சிந்தையில் கனித்தமிழ் ஏற்றி இச்சகத்தினில் புகழுறத் தனித்துவம் தந்து சபைகளும் போற்றும் நல் சான்றோனாக்கி காசினி மீதினில் கவியென்றென்னை தனியொரு ஆளாய் நிறுவிய தாயே நின் கால்புரள் புழுதிக்கு ஈடென்றாகிட இக்கடல் சூழ் உலகிலோர் கடவுளும் உண்டோ ? கவி இளவல் தமிழ்

விலைபோகும் கல்விநிலை மாற வேண்டும்! – ஞானச்செல்வன்

என்ன வேண்டும்? விண்கலத்தைத் திங்களுக்கே அனுப்பி னாலும் வினயமுடன் பக்குவமும் வாழ்வில் வேண்டும்! மண்கலந்து மக்கிப்போய் மடிந்த போதும் மனிதத்தை நிலைநாட்டிச் செல்ல வேண்டும்! கண்கலங்கி நிற்பார்மேல் கருணை இன்றேல் கதிநமக்கும் இல்லையென்று நம்ப வேண்டும்! எண்ணமெல்லாம் காமத்தில் மூழ்கிக் கெட்டால் இடரெல்லாம் வருமென்றே அறியவேண்டும்! கொலைகளவு கற்பழிப்பு தொலைய வேண்டும் கொடுமைகளே இல்லாத உலகம் வேண்டும்! மலைமலையாய்ப் பணம்குவித்து வைப்ப தாலே மானமது கெட்டொழியும் உணர வேண்டும்! விலைபோகும் கல்விநிலை மாற வேண்டும்! வெறியூட்டும் மதுவிற்கா அரசு வேண்டும்! கலைகளொடு கலந்தகளை பறித்தல்…

சிங்கப்பூரில் அண்ணா வாசகர் அறிவகம் தொடக்கம்

உலகத் தமிழருக்கு உறவாக விளங்கியவர், பேரறிஞர் அண்ணா அவர்கள். அவர்களின் நிணைவாக ‘அண்ணா வாசகர் அறிவகம்’  தை 24, 2047 / 7.2.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30மணியளவில் , தமிழர்பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழக பணிமனையில் #02-19 , சிராங்கூன் தேக்கா குட்டி இந்தியா வணிக வளாகத்தில் தோற்றுவிக்கப்பட்டது.   அறிஞர் அண்ணாவின், இலக்கியப் பங்களிப்பில் ஆர்வம் கொண்டுள்ள நண்பர்களால் உருவானதுதான்  ‘அண்ணா வாசகர் அறிவகம்’.  கவிதை, கதை, கட்டுரை வழியாக, கன்னித் தமிழின் சுவையைப் பரப்புதல், பேசுதல், படைத்தல் என்பதே இதன் நோக்கமாகும்….

தமிழன்னையே! பொறுத்தருள்! – கவிக்கோ ஞானச்செல்வன்

வாழிதமிழ் அன்னை வாழி! உளத்தினில் இனிப்பவள் உயிரினுள் தழைப்பவள் உழைப்பினில் சிரித்து நிற்பாள்! உலகினர் மகிழவே உயர்தனிச் செம்மொழி உருவுடன் இலங்கு கின்றாள்! வளத்தினில் நிகரிலள் வாழ்வினைத் தருபவள் வடிவினில் கன்னி யாவாள் வற்றாத நூற்கடல் வளர்புகழ் கொண்டனள் வாழிதமிழ் அன்னை வாழி! களத்தினில் வெற்றியே கண்டனள் தமிழர்தம் கருத்தினுள் நிறைவு பெற்றாள்! கனவுகள் ஆயிரம் கற்பனைப் பாயிரம் காணவே அருளு கின்றாள்! குளத்தினில் தாமரை கோடுயர் இமாலயம் குன்றாத புகழில் வானம்! குலவுதமிழ் அன்னையே குறைகளைப் பொறுத்தருள் கூட்டுவாய் வாழி நாளும்! [1980…

மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா

   புரட்டாசி 22, 1968 / 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள், மன்னார்குடி அருகில் இருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த  நெடுவாக்கோட்டை எனும் ஊரில் வேளாண்பெருமக்கள் அய்யாசாமி–இராசம்மாள் இணையருக்கு, முனைவர். அ. தட்சிணாமூர்த்தி கடைசி மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்டதந்தை, கடும் இன்னல்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப்பழுக்க நெடுந்தொலைவு பள்ளிக்கு நடந்துசென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பயின்று, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின்மேல் உண்டான அளவிலா அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார்….

கி.சிரீதரன் சொற்பொழிவு : இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு

தமிழ் மரபு அறக்கட்டளை சொற்பொழிவு : கி.சிரீதரன் தலைப்பு :  இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு தை 23, 2047 / பிப். 06, 2016  ஆர்.கே.   மரபு மையம்Arkay Convention Center), 146/3, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004 தலைப்பு பற்றி: ஒரு நாட்டின் தொன்மைச் சிறப்புமிக்க வரலாற்றை அறிய உதவும் சான்றுகளில்  முதன்மையானவை தொல்லியல் ஆய்வுகள். தொல்லியல் என்னும் பெரும் பிரிவில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், பண்டைய காசுகள், அகழாய்வு, சிற்பம்/ஓவியம்/திருமேனி அடங்கிய நுண்கலைகள், கட்டடக்கலை போன்றவை…

பிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ? – செந்தமிழினி பிரபாகரன்

உருச் சிதைந்த சிந்தனையில் தாய் மொழி தகர்த்து பிற மொழியால் முலாமிடும் செருக்கெடுத்த தருக்கருக்கு ஏதடா முகம்? முகமிழந்த முண்டங்கள் முகவரியும் தொலைத்த பின்னால் எதற்கடா வாழ்வு? ஏதடா வனப்பு? பிறப்பதில் பெறுவதல்ல இன அடையாளம்! பேறாய் பெற்ற தாய் மொழியே எம் முக அடையாளம்! மூத்த மொழி சரிந்து போக சொத்தை தமிழனாய் பார்த்திருப்பாயோ? தமிழன்னைக்கோர் துயர் என்றால் உனக்கென்று நினையாயோ? நேற்று வந்த மொழியெல்லாம் சேற்று வெள்ளமாய் அள்ளி செல்ல காற்றடித்தால் தொலைந்து போகும் துரும்போடா தமிழா நீ? பண்டைத் தமிழர்…

ஊர்ச்சந்தை, சென்னை

தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 09.00 சென்னை மல்லர் கம்பம் எனும் மரபு வீர விளையாட்டு காண வாரீர்! சென்னையில் ஊர்ச் சந்தை – 2! செம்மையின் ஊர்ச் சந்தை மீண்டும் சென்னையில் நிகழவுள்ளது. முதல் சந்தை கடந்த சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சந்தை பிப்பிரவரி 7 ஆம் நாள் கூடுகிறது. இந்த நிகழ்வு ‘செம்மைச் சமூகம்’ எனும் அமைப்பினால் நடத்தப்படுகிறது. மரபுக்குத் திரும்பும் விருப்பம் கொண்டோரின் கூடல்தான் செம்மைச் சமூகம் ஆகும். ஊர்ச் சந்தை…