வெருளி நோய்கள் 742-745: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 741: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 742-745 கருத்தடை உறை குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் காப்புறை வெருளி.காண்டம்(condom) என்னும் சொல் மதிப்பு என்னும் பொருளுடைய காண்டசு(condus) என்பதிலிருந்து வந்தது என்பர் சிலர். சார்லசு இரண்டாம் அரசர் மன்றத்தில் பணியாற்றிய, இதனைக்கண்டு பிடித்த திரு.காண்டம் என்பவரின் பெயரையே சூட்டியுள்ளதாகச் சிலர் கூறுவர்.உறை என்பதே காப்பிற்குத்தானே. எனவே, கருத்தடைக்கான காப்பு உறை என்பதையே சுருக்கமாக உறை எனக் குறிப்பிட்டு உறை வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். உறை வெருளி என்பது மடலுறை வெருளி(Fakelophobia) என்னும் பொருளையும்…

வெருளி நோய்கள் 741: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 739-740: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 741 741. காத்திருப்பு வெருளி-Macrophobia நீண்ட காலக் காத்திருப்பின் மீதான இயல்பு மீறிய தேவையில்லாப் பேரச்சமே காத்திருப்பு வெருளி. பால் வாங்குவதற்கு, உணவுப்பொருள் வாங்குவதற்கு, பணம் எடுப்பதற்கு, பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு, பேருந்திற்கு, தொடரிக்கு எனப் பல நேரங்கள் நாம் வாழ்வில் நம் முறை வருவதற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது;  மருத்துவரை அல்லது வழக்குரைஞரை அல்லது பிறரைச் சந்திக்கச் செல்லும் பொழுது நம் வரிசை வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற காத்திருப்பு மனக்கவலையையும் பேரச்சத்தையும் உருவாக்குகிறது….

தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 11 முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர் “தொல்காப்பிய மொத்த நூற்பாக்கள் 1571 ஆகின்றன. இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல் அதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும்.” என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார்(தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15). இதனையே வரலாற்று நூலாகவும் கருத வேண்டும் என அவர்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25: செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! “மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ” தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டு, தளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புறநானூறு 190 ஆவது பாடல் பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி நெல் விளைச்சலின் பொழுது கதிர்களைக்…

வெருளி நோய்கள் 739-740: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 734-738: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 739-740 காதல் திரைப்படம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதல் திரைப்பட வெருளி.காதல் வெருளி உள்ளவர்களுக்குக் காதல் திரைப்பட வெருளி வர வாய்ப்புள்ளது. காதல் காட்சிகள் பார்க்கக்கூடிய வகையில் இல்லை என்று காதல் திரைப்படங்கள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 காதல் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சமே காதல் வெருளி.காதல் என்பது வாழ்க்கையின் வெறுக்கத்தக்க செயல் என எண்ணுவோர், பழமை வாதிகள், சாதி ஆணவக் குடும்பத்தில் சிக்கியுள்ளவர்கள், காதல் ஏமாற்றமான வாழ்க்கையே தரும் என…

கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்

(க௪.  தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல்  பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன்…

வெருளி நோய்கள் 734-738: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 729-733: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 734-738 காணாட்டம்(video game) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணாட்டவெருளிludus electronicus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவான Ludectro என்பதற்குக் காணாட்டம் எனப் பொருள்.00 காதல் களியாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதலாட்ட வெருளி.காதலினால் தீண்டல், நெருங்கிப் பழகுதல் முதலியன உறவிற்கோ, கற்பழிப்பிற்கோ, கருவுண்டாலுக்கோ இழுத்துச் செல்லும் என்ற கவலையால் வரும் பேரச்சமே இது. காதல் வெருளி உள்ளவர்களுக்கும் காதலாட்ட வெருளி வரும்.மென்மை என்னும் பொருளிலான malயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து இலத்தீன் சொல்லான…

வெருளி நோய்கள் 729-733: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய் 724-728: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 729-733 729. காசாளர் வெருளி – Tamiaphobia காசாளர் (cashier) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசாளர் வெருளி. கிரேக்க மொழியில் tamஅas என்றால் காசாளர் என்று பொருள். 00 730. காசு வெருளி – Cuprolaminophobia காசு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசு வெருளி. காசுகள் மாழையில் செய்யப்படுவதால் மாழை வெருளி(Metallophobia)க்கும் இவர்கள் ஆளாவர். காசுகள் பணமதிப்பின் ஒரு பகுதி என்பதால் பண வெருளி(Chrometophobia/Chrematophobia)க்கும் ஆளாவர். Cuprum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் செம்பு( )…

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010) ? தமிழைப்போல் வேறு சில மொழிகளையும் செம்மொழிப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது அல்லவா? # ஏதோ ஒரு கட்டாயச் சூழலில் தமிழுக்கான செம்மொழி ஏற்பை இந்திய அரசு வழங்கிவிட்டதே தவிர அதற்கு முழு உடன்பாடு இல்லை என்பதுபோல் நடந்து கொள்கிறது. இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியினரும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தத்தம் மொழிக்குச் செம்மொழி ஏற்பு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆழமும் அகலமும் நுண்மையும்…

வெருளி நோய்கள் 724-728: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 723: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 724-728 கன்னெய்(gasoline/ petrol) பற்றிய அளவு கடந்த பேரச்சம் கன்னெய் வெருளி.கல்+நெய் = கன்னெய்.கன்னெய்யில் எரிநறா(எத்தனால்) அல்லது வேறு எதுவும் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தாலும் கன்னெய்மீது பேரச்சம் வருவதுண்டு. வளி நிலைய வெருளி(Aerostatiophobia) உள்ளவர்களுக்கும் கன்னெய் வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி அறிவியல் 2/5

குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! –jதொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 35 துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.  (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௯ – 449) முதல் இல்லாதவர்க்கு ஆதாய ஊதியம்(இலாபம்) இல்லை; அதுபோலத் தம்மைத் தாங்கியுதவும் துணை இல்லாதவர்க்கு நிலைத்திருக்கும் தன்மை இல்லை. பதவுரை: முதல்=முதற்பொருள், முன்பணம், அஃதாவது மூலதனம்; இலார்க்கு=இல்லாதவர்க்கு; ஊதியம்=வருவாய், இலாபம், பேறு, ஆக்கம்; இல்லை=இல்லை; மதலை-முட்டுத்தூண், பாரந்தாங்கும் தூண், உத்தரம், வன்மையுடையது; ஆம்-ஆகும்;…

வெருளி நோய்கள் 723 கனவு வெருளி: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 719 -722 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 723 723. கனவு வெருளி-Oneirophobia கனவு தொடர்பான பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கனவு வெருளி. கனவு பற்றிய இயல்புக்கு மீறிய பேரச்சமே கனவு வெருளி. உறங்கினால் தீய கனவுகள், பேய்க்கனவுகள் வரும், மார்பில் பேய் அமர்ந்துஅழுத்தி மூச்சுத்திணற வைக்கும் என்பன போனற் அச்சங்களால் தூங்குவதற்குக்கூட அச்சம் கொள்வர்.நல்ல எண்ணங்களை மனத்தில் கொண்டு படுக்கச் சென்றால் கனவு வெருளி வர வாய்ப்பில்லை. அச்சம் தரும் கதைகளையும் செய்திகளையும் படித்தலும் கேட்டலும் ஒரு முறை கெட்டக் கனவு…

1 2 510