சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 : இலக்குவனார் திருவள்ளுவ

(சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 246. abstain. V   தவிர்; விலக்கு விலகியிரு; தவிர்த்திரு (வி)   விலகி யிருத்தல் ; தவிர்த்திருத்தல் (பெ)   வாக்களித்தல் போன்ற எதிலும் பங்கேற்றுக் கொள்வதிலிருந்து விலகி யிருத்தல். 247. Abstaine  விட்டொழிப்பவர்   ஒரு பழக்கத்தை விட்டொழிப்பவர். பொதுவாக போதை பொருள்களை உட்கொள்வதைக் கைவிடுவதைக் குறிப்பிடுகிறது.   உணவைவிட்டொழிப்பவரைக் குறிக்குமிடத்தில் (உண்ணா)நோன்பு எனப் பொருளாகிறது. 248. Abstaining from carrying out…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடி நாவலர் ஆறுதல் உரை எறிபெருங் கல்லால் இடர்பெரி துற்றேன்,எனினும் பின்னர் என்னுரை விழைவோர் 25நனிபெரு கினரால் நயந்திவண் இருந்தேன்’ நாவலர் ஆறுதல் உரை `அன்னாய்! உலகில் அறிவொளி பரப்பமுன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே;தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின் 30எல்லையில் இன்பம்; எடுத்தது முடியும்;வெற்றி வெற்றி விளைவது கண்டோம்;உற்றநின் துயரால் உளமது கலங்கேல்ஆற்றுக தொண்டே ஆற்றுக தொண்டே; நாவலர் தலைமேற் கல் கல்லார் நல்வழி நில்லார் புல்லார்,குழப்பம்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 41-60 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 241. Absorb ஈர்த்துக்கொள்   உட்கொள் உறிஞ்சு ஏற்றுக்கொள்   திரவம், வெப்பம் போன்றவற்றைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ளுதல் 242. Absorbed in the post பணி ஈர்ப்பு   பணியிடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார். 243. Absorber ஈர்த்துக் கொள்பவர்     பொதுவாக உறிஞ்சியைக் குறிக்கிறது. எனினும் ஒருவரை ஈர்த்துக் கொள்பவரையும் குறிக்கிறது. 244. absorption ஈர்த்துக்கொளல்   ஒன்றை ஈர்த்துக் கொள்ளல்   பொதுவாக வழக்கில் நீர்…

உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர் – தொடர்ச்சி என் சரித்திரம்அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில்சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத்தம்பிரான்முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெறஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம்பிற்பகலிலும் முன் இரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக்காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தரகாண்டத்தையும் நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம்ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போதுகண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாததேசிகரென்பவரும் உடனிருந்து…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 10 : உக்கிர பாண்டியன் – தொடர்ச்சி) தமிழர் வீரம்அத்தியாயம் 8பெண்ணை நாட்டுப் பெருவீரர் மலையமான் நாடுதமிழ் நாட்டில் பெண்ணையாறு பாயும் நன்னாடு முன்னாளில் வண்மைக்கும் திண்மைக்கும் உறைவிடமாக விளங்கிற்று; அந் நாட்டின் ஒரு பாகத்தை நெடுங்காலம் மலையமான் என்னும் பட்டப் பெயருடைய சிற்றரசர் ஆண்டு வந்தனர். அதனால் அது மலையமான் நாடு என்றும், மலாடு என்றும் பெயர் பெற்றது. பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள திருக்கோவலூர் அதன் தலைநகரம்1. வலிமை சான்ற முள்ளூர்க் கானம் அதன் கோட்டை. காரியும்…

வள்ளுவர் சொல்லமுதம் 15: அ. க. நவநீத கிருட்டிணன்: பொருளும் அருளும்

(வள்ளுவர் சொல்லமுதம் 14: அ. க. நவநீத கிருட்டிணன்: நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அத்தியாயம் 10 பொருளும் அருளும் உலகில் மக்கள் எய்தும் உறுதிப் பொருள்கள் மூன்று. அவை அறம், பொருள், இன்பம் என்பன இம் மூன்றனுள் பொருளே அறத்தைப் புரிதற்கும் இன்பத்தை பெறுதற்கும் இன்றியமையாது வேண்டப்படும். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது நம் பொய்யில் புலவரது பொன்னான மொழி. வடுவிலா வையத்து மன்னிய மூன்றுள்நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்று நாலடியார் நவிலும். சீரிய வழியில் தேடிய…

சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 236. Absolutely முற்றிலும்   தனித்த நிறைவாக ஐயத்திற்கிடமின்றி ஆம்.(உடன்பாட்டைக் குறிக்கையில் ஆம், சரி என்ற பொருளில் வரும்.) 237. Absolutely unavoidable முற்றிலும் தவிர்க்க இயலாதது   செய்தலோ செய்யாமையோ ஒதுக்கித் தள்ள வழியின்றி இன்றியமையாது நிகழ்த்தும் சூழலே முற்றிலும் தவிர்க்க இயலாதது ஆகிறது. 238. Absolve   விடுவி   நீக்கு   பழியினின்று நீக்கு குற்றச்சாட்டினின்று விடுவி கடமை அல்லது…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்) பூங்கொடி நாவலர் வருகை அந்நகர் மக்கள் அறியா மையிருள்வெந்நிட அறிவொளி விரித்தெழு செஞ்சுடர்ப்பரிதி என்னப் பாவை விளங்க,உரிமை வேட்கையும், உன்னும் பண்பும்,உன்னிய தஞ்சா துரைக்கும் உரனும், 5முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும்விரித்துறை திறனும், வியனுறு குறள்நூல்உலகெலாம் பரவ உழைக்கும் செயலும்,உடையார் அறிவுப் படையார் ஒருவர்நடையால் உயர்ந்த நாவலர் அந்நகர் 10வருமவர் பூங்கொடி வந்துள தறிந்துபெரும்பே ராசான் அருங்குண அறிஞர்திருமா மகளைத் தேடி வந்தனர்; பூங்கொடி நிகழ்ந்தன கூறல் மன்னிய குறள்நூல் மாசறத் தெறிந்தேன்;குறளகம்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம் சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 21-40 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

சட்டச் சொற்கள் விளக்கம் 231-235 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 231. absolute right முழு உரிமை   முழு உரிமைகளை எக்காரணங் கொண்டும் மட்டுப்படுத்த முடியாது.   எந்தச்சூழலும் முழுமையான உரிமைகளின் தகுதியையோ வரம்பையோநியாயப்படுத்த முடியாது.   அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போதும் முழுமையான உரிமைகளை இடைநிறுத்தவோ கட்டுப்டுத்தவோ முடியாது. 232. absolute title   முழுமை உரிமைமூலம் முழுவுரிமை மூலம்‌ முழு உரிமை ஆவணம் முழு உரிமை யாவணம்   முழுமையான நிறைவான உரிமையுடைமை….

உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-50மகா வைத்தியநாதையர் ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போகமற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்கடிதங்களையும் எழுதுவேன். தேசிகர் பாடம் சொல்லுதல் அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்பாடம் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்கவிருப்பம் உண்டு. அதனையும், திருக்கோவையார் இலக்கண விளக்கம் என்னும்நூல்களையும் யாருக்கேனும் பாடம் சொல்லுவார். தேசிகர் இலக்கணச்செய்திகளை வரையறையாகச் சொல்வதும்,…