குவிகம் இலக்கிய வாசல், குறும்புதினப் போட்டி முடிவு அறிவிப்பு
குவிகம் குறும்புதினப் போட்டியில் வெளியீட்டிற்குத் தேந்தெடுக்கப்பட்ட குறும் பதினங்களிலிருந்து அரவிந்து சுவாமிநாதன் அவர்கள் அறிவிப்பார் நிகழ்வில் இணைய நுழைவெண் Zoom Meeting ID: 6191579931 – கடவுக்குறி passcode ilakkiyam அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 84
(குறிஞ்சி மலர் 83 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 29 தொடர்ச்சி மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்….
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 77
(குறிஞ்சி மலர் 76 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 27 தொடர்ச்சி “ஏண்டா, முருகானந்தம்! இன்றே உன் வீட்டுக்கு நான் வந்தாக வேண்டுமா, அப்படி என்ன அவசரமப்பா?” என்று கேட்டான் அரவிந்தன். முருகானந்தம் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லத் தயங்கினாற்போல் நின்றான். அரவிந்தனுக்குப் புரிந்து விட்டது. “ஓகோ? உன் திருமண ஏற்பாட்டைப் பற்றி உங்கள் வீட்டில் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லிச் சம்மதம் பெற வேண்டுமென்கிறாயா? இதை என்னிடம் சொல்லுவதற்கு வெட்கமென்ன வேண்டியிருக்கிறது? நான் வருகிறேனப்பா. இப்போதே வேண்டுமானால் புறப்படு” என்று விவரம் புரிந்து கொண்டதும் முகமலர்ச்சியோடு வருவதற்கு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 69
(குறிஞ்சி மலர் 68 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 25 பொன்காட்டும் நிறம்காட்டிப்பூக்காட்டும் விழிகாட்டிப்பண்காட்டும் மொழிகாட்டிப்பையவே நடைகாட்டிமின்காட்டும் இடைகாட்டிமுகில்காட்டும் குழல்காட்டிநன்பாட்டுப் பொருள் நயம்போல்நகைக்கின்றாய் நகைக்கின்றாய்பண்பாட்டுப் பெருமையெலாம்பயன்காட்டி நகைக்கின்றாய். — அரவிந்தன் கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோயில் மலைதான். குறிஞ்சியாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட்டு துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 64 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 23 தொடர்ச்சி ‘பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பருமாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துகளுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா‘ என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பருமாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த…
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 5
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 4 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி, மனைவியால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, “அப்பா ! புத்தியில்லாமல் ஏதோ செய்துவிட் டேன், பொறுத்துக் கொள்ளுங்கள் ‘ என்று கெஞ்ச வேண்டும், “சீ நீசா ! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே நரகம் சம்பவிக்கும்” என்று ஏச வேண்டும்; பழனி கதறவேண்டும்; பிறகு அவனை மன்னித்து உள்ளே சேர்த்துக்கொள்ள வேண்டும்; இதுவே செட்டியாரின் நித்தியப்பிரார்த்தனை. எந்தத் தெய்வத்திடம்…
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 4
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 3 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் – 4 அத்தியாயம் 1 தொடர்ச்சி இப்படிப்பட்ட கேள்விகள்; அவற்றுக்கு எவ்வளவு சாந்தமான முறையிலே பதில் கூறினாலும், கலவரம், கல்லடி, இவைதான் பழனி பெற்றுவந்த பரிசுகள். பல இலட்சத்தைக் கால் தூசுக்குச் சமானமாகக் கருதித் தன் கொள்கைக்காக, காதலுக்காக, தியாகம் செய்த அந்தத் தீரன், சீர்த்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊரூராகச் சென்று, சொற்பொழிவு செய்வதை மேற்கொண்டான், ஒரு வேலைக்கும் போகாமல், அவனுக்கு “மகாசனங்கள்” தந்த பரிசுகள் இவை. காதலின் மேம்பாட்டை உணர் மறுத்துக்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 41
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 40 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறித்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள். அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 40
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 39 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் ‘தமிழ்’ என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் இருந்தன. அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஓர் உறவு. அந்த உறவுதான் மற்ற…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்! உரிமை கேட்டால்புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்! இதைத்தன்கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி. – பாரதிதாசன் மனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 51
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 50. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 21 தொடர்ச்சி “உனக்கும் அப்படித்தான். இனிமேல் படிப்பதாக இருந்தால் நீ சொல்வது சரி. படிப்பு இனிமேல் இல்லை என்று முடிவாகிவிட்ட பிறகு, திருமணம் செய்துகொள்வது நல்லது. பணக்காரக் குடும்பத்தினர் உன்னைத் தேடி வருவார்கள். விருப்பமாக இருந்தால் சொல். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. அவர்களுக்குச் சமமாகப் பணம் இல்லாவிட்டால், நம்மை மதிக்கமாட்டார்களே என்று அம்மாவும் அப்பாவும் அஞ்சுகிறார்கள். ஆகவே பொருளாதாரக் கவலை தான் இதற்கும் காரணம். அத்தை மகள், அக்கா மகள்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 50
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 49. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 21 பி.ஏ. தேர்வு நன்றாகவே எழுதி முடித்தேன். நல்ல வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மாலன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசவில்லை. மூன்றாம் பகுதியைப் பற்றிக் கவலைப்பட்டான். “நீ எப்போதும் இப்படித்தான். உனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. உள்ளதைச் சொல்ல மாட்டாய்” என்றேன். “உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?” என்றான். “உழைப்பில் நம்பிக்கை உண்டு. அறத்தில் நம்பிக்கை உண்டு.” “கூடிய வரையில் உழைக்கிறோம். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம்…