இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி ஆரியம் ஆங்காங்குச் செல்வாக்குப் பெற்றது. அதன் வழியில் பிற மொழிகள் எல்லாம் இயங்கத் தொடங்கின. பழந்தமிழைக் கண்டு தன் எழுத்துகளை அமைத்துக்கொண்ட ஆரியத்தின் புது அமைப்பு முறையைப் பின்பற்றித் தம் எழுத்து முறைகளை அமைத்துக் கொண்டன. ஆரிய மொழிச் சொற்களை மிகுதியாகக் கடன் பெற்று ஆரிய மொழியின் துணையின்றித் தாம் வாழ முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டன. ஆதலின் தம் தாயாம் தமிழிலிருந்து புதல்விகளாம் பிற திராவிட மொழிகள் வேறுபட்டன போல்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி இவ்வாறே படர்க்கை ஒன்றன்பால், பலவின்பால், தன்மை, முன்னிலை விகுதிகளும் தமிழ்க் குடும்ப மொழிகள் அனைத்திலும் ஒரே வகையாக அமைந்துள்ளமையைக் காணலாம். விரிக்கின் பெருகுமாகையால் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதை விடுத்து இனி எண்ணுப் பெயர்களை நோக்குவோம். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஒன்று ஒன்னு ஒந்து ஒகட்டி இரண்டு ரண்டு எரடு இரடு மூன்று …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி வேற்றுமை திராவிட மொழிகளில் எல்லாம் வேற்றுமைகள் எட்டெனவே கொள்ளப்பட்டுள்ளன. வேற்றுமைகளை அறிவிக்கும் உருபுகள் பெயர்க்குப் பின்னால் பெயருடன் சேர்ந்து வருகின்றன. இவ் வுருபுகள் தொடக்கத்தில் பின் இணைத் துணைப் பெயர்ச் சொற்களாக இருந்து நாளடைவில் தனித்தியங்கும் இயல்பு கெட்டு இடைச்சொற்கள் நிலையை அடைந்து விட்டன என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றார். இந் நிலை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் அவை வேற்றுமையுணர்த்தும் உருபுகளாகவே கருதப்பட்டு இடைச்சொற்களாகவே…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் பல்லுயிரும் பலவுலகும் படைத் தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும் உன் உதரத்து உதித்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. எனும் தமிழ்த்தாய் வாழ்த்தில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்மொழி பல மொழிகட்குத் தாயாயுள்ள செய்தியை இனிமையுற எடுத்து மொழிந்துள்ளார்கள். இன்று திராவிட மொழிகள்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை. ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்- கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள் -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி சொல் பழம்பொருள் புதுப்பொருள் அகம் உள்,மனம் கருவம் அகலம் மார்பு இடத்தின் பரப்பு அவல் பள்ளம் தின்னும் அவல் இயம்புதல் ஒலித்தல் சொல்லுதல் கண்ணி அடையாள மாலை வலை கருவி தொகுதி ஆயுதம் கிழவன் உரியவன் முதியவன் கோடை மேல்காற்று வெயிற்காலம் சாறு திருவிழா …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் காரணங்களாக இருக்கலாம். கடி என்னும் கிளவி தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு பொருள்களை உணர்த்தும் நிலையை அடைந்துள்ளது. கடியென் கிளவி …
இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 75, திருவாரூர்
வைகாசி 11, 2047 / மே 24, 2016 மாலை6.30 – 9.00 சிறப்புரை : பெ.மணியரசன் – முடியவில்லை மொழிப்போர்
நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்
நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்று எனத் தொடுத்தல், மற்று ஒன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன்இன்மை, எவை இவை ஈர் ஐங் குற்றம் நூற்கே குன்றக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களில் குறைவுபடச் சொல்லுதலும் , மிகைபடக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களினும் அதிகப்படச் சொல்லுதலும் , கூறியது கூறல் –…
ஆர்வத்துடன் கற்க! – பவணந்தி முனிவர்
ஆர்வத்துடன் கற்க! கோடல் மரபே கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவர் குறிப்பிற் சார்ந்து இருஎன இருந்து சொல்எனச் சொல்லி பருகுவன் அன்ன ஆர்வத்தனாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவிவாயாக நெஞ்சு களனாக கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர் பவணந்தி முனிவர் : நன்னூல்: 40 காண்டிகையுரை கோடல் மரபு கூறுங்காலை – பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது , பொழுதொடு சென்று – தகும் காலத்திலே போய்…
இசைவேள்வி 2016, பிரான்சு
வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!
வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே! ஒரு சொல் அதன் பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுவன வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை உருபுகளை நேரடியாகப் பயன்படுத்தும் பொழுதும் மறைமுகமாகப் பயன்படுத்தும் பொழுதும் வல்லின எழுத்துகள் மிகுந்து வருவது தமிழின் சிறப்பாகும். அவ்வாறு மிகுந்து வராவிடில் பொருளே மாறுபடும். எனினும் சிலர், அவ்வாறு எழுதத் தேவையில்லை; இயல்பாக எழுதலாம் எனத் தவறாகக் கூறி வருகின்றனர். “இலக்கணம் இல்லாச் செய்தி கரையற்ற ஆறு ஆகும்” என அறிஞர்கள் கூறுவதிலிருந்தே இலக்கணத்தின் சிறப்பை உணரலாம். இலக்கணத்தின் ஒரு கூறுதான்…