மண் பறித்த மானம்! -இளையவன் செயா
விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக் கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு நேத்தாசியைப்பெற்று வளர்த்த வங்கமண் இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும் பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக் கழையாக நினைத்தொடித்த கவிஞர் பிழையில்லா இரவீ ந்திரநாத் தாகூர் பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை வேட்கையால் வீறுகொண்டு கெடுதலையே செய்யும் கேடர்களை வெற்றிகொள்ள வீரமுழக்கமிட்ட வீரர்கள் வற்றிப் போகாதமண் வங்கமண் !…
வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்
வாழ்க்கை என்பது போராட்டம் – எனில் போரில் கலந்து வென்றிடுவோம் வாழ்க்கை என்பது விளையாட்டு – ஆயின் ஆடி வாகை சூடிடுவோம் வாழ்க்கை என்பது பயணம் – ஆனால் இனிதே இலக்கை அடைந்திடுவோம் வாழ்க்கை என்பது கேளிக்கை – என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம் வாழ்க்கை என்பது கணக்கு – எனவே போட்டுப் பார்த்துத் தேர்ந்திடுவோம் வாழ்க்கை என்பது வரலாறு – அதனால் செம்மைச் செயலைப் பதித்திடுவோம் வாழநாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம் எத்தனைத் தடைகள் வந்தாலும் அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம் மெல்ல…
பழி வராமல் படி – பாவலர் வையவன்
ஆய்ந்து படி அன்னைத்தமிழ் ஆய்ந்து படி அதனையும் ஆழ்ந்து படி பார்மொழியாம் தமிழ் படி பழகுதமிழ் நீ படி யார்மொழியின் நூலெனினும் பசுந்தமிழில் பாயும்படி புதைபடும் தமிழ்மடி பொலிவினைக் காணும்படி புதுப்புது நூல்கள் படி புரட்சிவர நீயும் படி புகுந்திள நெஞ்சினிலே புதுஒளி பாயும்படி புனைந்துள நூலெதையும் புரியும்படி தேடிப் படி பகுத்திடும் நால்வருணம் பாரினில் ஏன்இப்படி? பகுத்தறி வாளர்களின் பலவிதநூல் வாங்கிப் படி கலைகளில் தமிழ் படி கல்வியிலும் தமிழ் படி அலைபடும் ஆலயத்தில் ஆட்சியினில் தமிழைப் படி திருமணம் தமிழ் படி…
கொரண்டிப் பூ!
இளையவன் – செயா மதுரை பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878 தி.ஆ. 2045 சுறவம் ( தை ) 16 29–01–2014 ஆழி நீர்ப்பரப்பில் ஆடுகின்ற நிழலாய் ஊழிப் பெருவாழ் விலுழன்று உதட்டாலே வாழி வாழியெனும் வாழ்த்துக்கு வயமாகித் தாழியள வாய்த்தாங்கும் துன்பச் சுமைதனை மறப்பதற் கோர்நாள் மல்லைநகர் சென்றிந்தேன் பிறப்பதன் பெரும்பயனை பிற்றைநாள் மக்களுக்கு உரைப்பது போன்றுருவச் சிலைகள் என்னுளத்துச் சிறுகு மறக்கப் பெருந்துணை ஆயிற்றே! மல்லை நகரின் மாண்புறு துறைஅன்று சொல்ல ரியபொருட் களைச்சேர்த் தனுப்பி இல்லை எமக்கீடென எழிலுட …
உரிமை ! – ஈரோடு இறைவன்
விலங்கு வாழ்கிறது காட்டில் விடுதலையோடு! மீன் தண்ணீரில் வாழ்கிறது விடுதலையோடு ! புழு மண்ணில் வாழ்கிறது விடுதலையோடு ! தமிழா நீ வாழ்கிறாயா விடுதலையோடு !
செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி – திருச்செங்கோடு என்.கே.பி.வேல்
1. செந்தமிழுக் குயிரீந்த சின்னச்சாமி! தென்னகத்து வரலாற்றின் சின்னமாம் நீ! வெந் தணலில் நொந்துயிரை இந்திக் காக விட்டவனே! மொழிக்காதல் கற்றவன் நீ! தந்தைதாய் மனைமக்கள் சொந்தம் நீத்தாய்! தண்டமிழின் உயிர்ப்பண்பாம் மானம் காத்தாய்! அந்தோநான் என்னென்பேன் அரிய தியாகம் யாருனைப்போல் தாய்மொழிக்காகச் செய்தா ரிங்கே? 2. தொடுத்தபுகழ்க காஞ்சிமா நகரில் தோன்றித் தொல்லாண்மைத் திராவிடரின் சோர்வைப் போக்கி அடுக்குமொழி மேடைகளில் அழகாய்ப் பேசி அனைவருமே தமிழ் சுவைக்க எளிய தாக்கிக் கொடுத்தபெரும் தமி அறிஞர் அண்ணா இந்தி குறித்தெடுத்த போராட்டக் களத்தில் உன்னைக்…
தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்!
– தமிழ்ப் புரவலர் தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அ) நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர் நேர்மைத் திறமுடையாய்! – தமிழர் கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே குளித்த தமிழ் மறவா! ஆ) ‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர் அன்புமக்க ளாகார்!’’ என்றே நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா! நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்) இ) வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த வாழ்வை நெருப்பில் இட்டாய்! செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா! திருக்குறட் கோமகனே! (நெஞ்சத்) உ) பஞ்செனத் தீயில் இட்டாய் !…
நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன்
– புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா….! தீப்பந்தம் ஆனாய் – நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை – குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை – உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு – தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு!…
செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்
இன்தமிழ் நாட்டில் இந்தியை எதிர்த்துச் செந்தமிழ் காகச் செந்தீ மூழ்கிய சின்னச்சாமியைப் போற்றுதும் நாளும்! தமிழ்மொழி காக்கத் தம்முயிர் ஈயும் உரவோர் உண்மையை உணர்ந்து ஒழிமின் மறந்தும் தமிழை மாய்க்கும் புன்செயல். எரியில் மூழ்கி எம்தமிழ் காக்க வேண்டும் சூழ்நிலை விரிதல் நன்றோ? இந்தியின் முதன்மை எம்தமிழ் அழிக்கும் அழிசெயல் என்பதை அறியார் யாரே? நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும் வல்வினை ஒழிமின்! வண்டமிழ் போற்றுமின்! தீந்தமிழ் மறவன் சாமியை நினைத்து ஆம்நற் றொண்டு ஆற்றுமின் தமிழ்க்கே –…
மனக்கதவும் திறவாதோ!
-மதுரை க. பாண்டியன் படர்ந்திட்ட கொடியதனின் பரிதவிப்பைப் போக்குவதற்கே, பாரியெனும் மன்னவனும் தன்தேரைத் தந்திட்டான்! இடர்பட்ட புலவர்தன் வறுமைதனை யொழிப்பதற்கே, இனிமையுறக் குமணனுமே தன்தலையைக் கொடுத்திட்டான்! விடமறுத்த வல்லூற்றின் வன்பிடியை விடுப்பதற்கே. வழங்கிட்டான் தன் தசையை சிபியென்பான் புறவிற்காக! நடனமிடும் மயிலதனின் நலிவுதனை நீக்குதற்கே நல்கிட்டான் சால்வையென நவின்றதுவே வரலாறும்! இந்நாளில் அதுபோல இன் தமிழ்க்காய்த் தன்னுடலை இன்பமோடு எரிதணலில் இட்டுவிட்ட ஏந்தலுமே, இந்நாட்டில் இருக்கின்றான்! இன்னுருவாய் வாழ்கின்றான்! இகமுழுது போற்றுசின்னச் சாமியெனும் பேராளன்! மந்தமதி கொண்டோரின் அந்தகா ராமெடுக்க மண்ணகத்தில் மகிமையுற மாண்டவழி…
சந்தனத் தமிழன்
– கவிஞர் முருகு சுந்தரம் அமிழ்தமாம் தமிழைக் காக்க ஆருயிர் நெருப்பில் தந்த தமிழவேள் சின்னசாமி தமிழர்க்குப் பெரிய சாமி! உமியினைப் போன்று மக்கள் உலகினில் பலபேர் வாழ இமயத்தைச் சிறிய தாக்கி இவன் புகழ் எழுப்பி விட்டான்! மக்களும் மறவன்; ஆட்டு மந்தையில் பிறந்த வேங்கை. தக்கைகள் நடுவே மின்னும் தனித்தவோர் தங்கக் கூர்வாள்; சக்கைபோல் தமிழ ருக்குள் சந்தனத் தமிழன்; அஞ்சிப் பக்கத்தில் பதுங்கி டாமல் பாய்கின்ற சிங்கக் குட்டி. கொழுந்துவிட் டெரியும் தீயில் குந்திய அப்பா அன்று செழுந்தமிழ்த்…
செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி
– கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை…