கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 99 : மாளிகையில் இசை முழக்கம்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு-தொடர்ச்சி) பூங்கொடி மாளிகையில் இசை முழக்கம் பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும், 80 தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும், தெரிதரு யாழில் விரிதரும் இசையும், முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும், காய்வேங் குழலின் கனிந்தநல் லிசையும், ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும், 85 கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம் மடாமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது; ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர் செவியகம் பாய்ந்து…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் வியப்பு கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட் டுள்ளமும் உடலும் புழுங்கின னாகிக் கள்ளுண் டான்போற் கலங்கினன் செல்வோன், `காவயிம் வல்லான் கற்பனை தூண்டும் ஓவியம் என்ன உருவம் உடையள், 45 பாலும் பழமும் பஞ்சணை மலரும் நாலும் விழையும் நல்லிளம் பருவம், வேலும் வாளும் மானும் விழியள், காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள் வாமக் காளையர் வழிபடு தெய்வம், 50…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம் – தொடர்ச்சி) பூங்கொடி இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை கோமகன் வஞ்சினம் கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக் கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப் பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி 5 மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்; தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக் கொள்ளா தொழியேன்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும்வழி -தொடர்ச்சி) பூங்கொடி எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன், அருளறம் பூண்டது குறளகம், ஆதலின் 290 தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்; ஒருதலைக் காமம் நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும் பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி ஆடவர் திரியின் யானென் செய்வல்? ————————————————————— முரணினர் – மாறுபட்டனர், உரி – தோல்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும் வழி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியை அடையும்வழி `வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள் பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி நின்றனள்; நீயும் சென்றவட் குறுகி ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில் 235 ————————————————————— எய்யாது – சளைக்காமல், ஒய் – விரைவுக்குறிப்பு. ஒல்கா – அடங்காத, கனல – எரிக்க. ++++++++++++++++++++++++++++++++++++++++ குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு, பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி நழுவா வகையில் நயந்துரை…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்-தொடர்ச்சி) பூங்கொடி வஞ்சியின் எழுச்சியுரை கருதிய காதற் களந்தனில் நீதான் ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! 180 காதல் எளிதெனக் கருதினை போலும் சாதல் எய்தினும் சலியா துழைப்பின் விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி; நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின் 185 ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ? நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம் எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது? மறுத்தும் வெறுத்தும்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்
( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை கோமகன் நிகழ்ந்தன கூறல் இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன் வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென 135 வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக் கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம் 140 மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்
( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா? -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் வஞ்சினம் பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்; இவள்நலம் விழையும் இளவல் கோமகன் தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு 95 குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை; பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்’றெனத் 100 —————————————————————…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா?
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை-தாெடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை பருவம் பாழ்படுவதா? சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி 55 கருதின ளாகிக் கழிவது முறையோ? தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும் மூடரும் உளரோ? முக்கனி யாகிய தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும், கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் 60 அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில் நைந்து சிதைவதில்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு-தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் ஏக்கம் பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும் தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக் கொஞ்சும் இளமை கொன்னே கழிய அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப் 5 பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்; எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும் செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள் என்னே இவள்மனம் இருந்த வாறே! பின்னே வாழ்விற் பேதுறு வாளே 10…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்- தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலியின் அழைப்பு பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை ————————————————————— தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான். ++++++++++++++++++++++++++++++++++++ ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல் பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட 270 நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன் அரிவைநீ அருளுடன்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : நிலவுக் காட்சி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 86 : தேனருவி-தொடர்ச்சி) பூங்கொடி நிலவுக் காட்சி தொகைப்படு விண்மீன் மினுக்கிட வானில் வெண்மதி வட்டம் விட்டொளி கான்று 185 தண்புனல் கானம் தளிர்கொடியாவும் வெள்ளிய ஒளிமயம் விளைத்தது கண்டோம்; அள்ளிய விழியால் ஆர வுண்டனம் உள்ளந் துள்ளிய உவகைப் பாங்கினைத் தெள்ளிதின் இயம்பத் தெரிகிலேன் தோழி! 190 பாட்டின் மகிழ்ச்சி உள்ளெழும் உணர்ச்சி உந்தி எழலால் ————————————————————— வாலை – இளமை, நறவம் – தேன், மாந்திடும் –…