புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.21 -1.7.25
(இராவண காவியம்: 1.7.16 -1.7.20. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷெ வேறு வண்ணம் 21. யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடு மாடரங்கும் போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொ தியான தமிழ்நூலும் வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட பாழுங் கடலே. நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ. 22. வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச் சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்துவரும் …
புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை: தங்கத்தில் பதித்த முத்து
புதிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி குறுங்காவியத் தழுவல் அணிந்துரை இனவுணர்வுக்கும், மொழியுணர்வுக்கும், தமிழ்ப் பண்பாட்டு உணர்வுக்கும் குடியாட்சியுணர்வுக்கும் மொத்தத் தொகுப்பாக முகிழ்த்த காவியம் பாவேந்தரின் புரட்சிக் கவி’. அந்தப் புதுவைப் பாட்டுக்கு புதுமை சேர்க்கப் புறப்பட்ட காப்பியம் புலவர் பன்னீர் செல்வத்தின் புரட்சிக்கவி நாடகக் காப்பியம்’. நகலுக்கு நகைகளைப் பூட்டி அசலுக்கே அழகு சேர்க்கிறார் பன்னீர். பக்கந்தோறும் பன்னீர் தெளித்து நூலுக்கு மணம் தருகிறார். முன்னர் மொழி பொன்னே என்ற கோட்பாட்டில் பாவேந்தரின் வரிகளை அப்படியே கையாள்கிறார். மூலத்திற்கு மூலமே நிகர்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.16 -1.7.20
(இராவண காவியம்: 1.7.11 -1.7.15 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார்வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க்கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப்பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் தினிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யளவ ளாவப் பொருகடல் நினைத்த தம்மா. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.6 -1.7.10.
(இராவண காவியம்: 1.7.1-1.7.5. தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 6. பொருவள மின்றியே புகல டைந்தெனப் பெருவள மிக்கதன் பெயரின் மேம்படும் ஒருவள நாட்டினை யுண்டு வந்திடத் திருவுளங் கொண்டதத் தீய வாழியும். 7. அவ்வள நாட்டினும் அரிய தாகவே குவ்வளத் தமிழர்கள் கொண்டு போற்றிடும் இவ்வுல கத்திலா வினிமை மிக்கிடும் செவ்விய தமிழுணத் தேர்ந்த வக்கடல். 8. இனிமையி னுருவினள் இயற்கை வாழ்வினள் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.1-1.7.5.
(இராவண காவியம்: 1.6.41- 1.6.43 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 1. இங்ஙனம் பல்சிறப் பியைந்து பல்வள முங்கியே செந்தமிழ் மொழியை யோம்பியே தங்களுக் கரசர்கள் தாங்க ளாகவே மங்கலம் பொருந்திட வாழ்ந்து வந்தனர். 2. இவ்வகை வாழ்கையி லினிது போற்றிடும் செவ்வியர் பொருளினைத் தீயர் நன்றென வவ்வுத லுலகியல் வழக்கம் போலவே கவ்வைநீர் வேலையுங் கருத்துட் கொண்டதால். 3. அல்லது வழியிற்கேட் பாரற்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.41- 1.6.43
(இராவண காவியம்: 1.6.36- 1.6.40 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 41. தகையுற வத்தமிழ்ச் சங்கந் தங்கினோர் வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத் தொகையுறச் செய்துநூல் தொகுத்து மோதியும் திகழுற வாய்ந்தநேர் செய்து வந்தனர். 42. முத்தமி ழாய்தர முறையி னாக்கிய அத்தமிழ்ச் சங்கமவ் வண்ணல் பின்னரும் வைத்ததம் முன்னவர் வழியைப் பின்றொடர்ந் தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே. 43. அந்நிலை யிருந்தநம் அருமைத்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6. 13 – 1.6. 17
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 13. ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை யெனத்தகு சிறுமுகை மணம்போற் பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும் பழமையென் றளவிடு மகவுந் தாங்கிய தாவிற் கன்னியா யிளமை ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை நீங்கிய விளமைச் சிறியவ ருலக நெறியிலா ரொத்துளே மெனலே. 14. வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை வழங்கிய…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3-1.6.7
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 3. இனியசெந் தேனு மினியவான் பாலு மினியதீஞ் சுவைநிறைந் தியலும் கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங் கனிவரு முதலவின் பருப்பும் இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற் கினிமைநம் பாலிலை யென்று கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக் கைசெயுங் கனிதமிழ் மொழியே. 4. உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக் குழறியுங் குழறியு…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் தாய்மொழிப் படலம் 21. காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல் ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக் காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர். 22. அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப் புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார் திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர். 23. ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16- 20
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15 தொடர்ச்சி) 16. இல்லாமை வறுமையவர்க் கியலாமை தீச்செயலே சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே செல்லாமை தீநெறியே தீண்டாமை பிறர்பொருளே கல்லாமை களவிவறே கருதாமை யறங்கடையே. 17. பொன்மான மானாலும் பொருண்மான மானாலும் மன்மான நிலைதீர்ந்து மதிமான மானாலும் கன்மான வயலார்முன் கையேந்திப் பல்லிளியார் தன்மான மாறாத தகுமானத் தனித்தமிழர். 18. சிறந்தானும் பெருமையினிற் றீர்ந்தானு முரிமையெலாந் துறந்தானும் பொருவுநிலைத் துறைபோந்து முறைவாழ்ந்தார் இறந்தேனும் பொதுவாழ்வுக் கியன்றனசெய் குவதல்லான் மறந்தேனும் பிறன்கேடு சூழாத மணித்தமிழர்….
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10 தொடர்ச்சி) 11. தன்னலமென் னும்பொருளைத் தான்காணா ராய்ச்செய்யும் இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமா நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால் பன்னலமும் பொருந்தியதன் பயன்றுய்க்கும் பழந்தமிழர். 12. முட்டாற்றுப் படவெவரு முயலாமை யெனுங்குறையை விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் படவாழ்ந்தார் நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்வளர்க்குங் கொட்டாட்டுப் பாட்டுடைய குலமோங்குங் குணநாடர். 13. அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக் கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய் அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார் எவ்வளவு மிறைமுறையி னியனெறிமா றாத்தமிழர். …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.1-5 தொடர்ச்சி) 6. இன்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும் பொன்னேபோ லருள்பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார் கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர் பொன்னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்நாடர். 7. நலக்குறையே வலக்குறையா நற்குணநற் செய்கைதமக் கிலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கணமா யெனைத்தொன்றும் சொலக்குறையா மனைவாழ்க்கைத் துறைநின்று முறைவாழ்ந்தார் இலைக்குறையென் றெனைவளமு மினிதமைந்த வியனாடர். 8. பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும் திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும் வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார் கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடார். …