(இராவண காவியம்: 1.7.16 -1.7.20. தொடர்ச்சி)

இராவண காவியம்

  1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்
ஷெ வேறு வண்ணம்

    21.     யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடு மாடரங்கும்              
  போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொ தியான தமிழ்நூலும்
  வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட
பாழுங் கடலே. நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ.
          22.     வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச்
  சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்துவரும்
               நேரார் காலைக் கும்பிட்டு நேரா நின்று நேரொன்றும்
               பாரார் போலப் பாழ்ங்கடலே பகையாய் நின்று புகையாயே.
          23.    பாட்டைக் கேட்டங் கேதேனும் பரிசுகொ டாதோ டமையாதவ்  
வேட்டைத் தீயிற் போட்டோட்டு மிழிஞர் போல வெறிகடலே
  மூட்டை மூட்டை யாப்பாட்டை முதுகிற் கொண்டு மமையாதந்
               நாட்டைக் கொண்டா யினியெங்கள் நண்ணார் குழுவை நண்ணாயே.  
        24.     கட்டாய் நின்று தமிழ்நாட்டைக் காத்து வந்தே கைக்கொண்டு
விட்டா யோவாப் பாழ்ங்கடலே மெய்காப் பாள ராயிருந்து
               பட்டா வுருவித் தலைவெட்டும் பகைவர் முன்னம் பல்லிளிக்கும்
ஒட்டார் போலப் பகைவாழ்வி னுவறா நின்று சுவறாயே.
25.     மண்ணா வலினால் புகலென்றே மாற்றார் காலிற் போய்வீழ்ந்து
கண்ணா லறியா வுளவெல்லாங் காட்டிக் கொடுத்தே
               கருதாரால் உண்ணா வுறவை யொழித்தந்தோ வுலகா ளுரிமை பெற்றவிழி
               நண்ணார் போலப் பாழ்ங்கடலே நலியா நின்று தொலையாயே  

(தொடரும்) இராவண காவியம் – புலவர் குழந்தை

குறிப்பு:

21. போழ் – செப்புத் தகடு. 22. நேராநின்று – நேர்ந்து. நேர் –

நேர்மை. 24. உவறுதல் – பெருகுதல். சுவறுதல் – வற்றுதல்.

(தொடரும்)
இராவண காவியம் – புலவர் குழந்தை