வெருளி நோய்கள் 1241 -1245 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1237 -1240 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1241 -1245 தாள் பிடிப்பி (paper clip) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாள் பிடிப்பி வெருளி.இதனை முதலில் செம் நிறுவனத்திற்காக (Gem Company) உருவாக்கியதால் இதனைச் செம் பிடிப்பி என்று பொதுவாகச் சொல்வர். இதனை மடக்கூசி என்றும் சொல்வர். ஊசி என்பது துளைப்பது. இது துளைப்பதல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட தாள்களை இறுகப் பிடிப்பது. எனவே, தாள்பிடிப்பி என்பது பொருத்தமாக இருக்கும்.00 தாள் பை குறித்த வரம்பற்ற பேரச்சம் தாள் பை வெருளி.தாள் பை…

வெருளி நோய்கள் 1237 -1240 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1233 -1236 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1237 -1240 தார்பக்கு/இசுடார்பக்கு காழநீர் நிறுவனம்(coffee company) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தார்பக்கு வெருளி.தார்பக்கு/இசுடார்பக்கு, வாசிங்டனில் 1971 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் . இன்றைக்கு உலகத்தில் 30,000 இற்கு மேற்பட்ட இடங்களில் இதன் காழநீர் மனைகள் உள்ளன.00 தாவீது இரீடு கதைப்பாத்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாவீது இரீடு வெருளி.தாவீது இரீடு பழுப்பு நிறமுள்ள எறும்புத்தின்னி; உணவாக்குக் கலைஞர்.00 தாழ் கூரை குறித்த வரம்பற்ற பேரச்சம் தாழ் கூரை வெருளி.cellar என்னும் இலத்தீன்…

வெருளி நோய்கள் 1233 -1236 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1229 -1232 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1233 -1236 தாயின் உடன்பிறந்தாள்/பெரியன்னை, சித்தி மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் தாய் உடன்பிறந்தாள் வெருளி.தமிழ் மரபிற்கிணங்கத் தாயின் தமக்கையைப் பெரியம்மா அல்லது பெரியன்னை என்கிறோம். தாயின் தங்கையைச் சித்தி அல்லது சிற்றன்னை என்கிறோம். சிலர் சின்னம்மா என்று சொன்னாலும் வழக்கத்தில் சின்னம்மா என்பது தந்தையின் இரண்டாம் மனைவியைக் குறிப்பதாக உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் aunt என ஒரே சொல்தான். auntie, aunty எனவும் பேச்சு வழக்கில் குறிப்பிடுவர். தந்தையின் உடன்பிறந்தாளுக்கும் அதே…

வெருளி நோய்கள் 1229 -1232 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1225 -1228 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1229 -1232 1229.தாய்மாமா வெருளி- Avunculusphobia/Gufuphobia தாய்மாமா குறித்த அளவுகடந்த பேரச்சம் தாய்மாமா வெருளி.தந்தை மைத்துனர் வெருளி/அம்மான் வெருளி – Gufuphobia; தாய்மாமா வெருளி – Avunculusphobia என்று இருவகையாகக் குறிக்கப் பெறுகிறது. தந்தை மைத்துனர் என்றால் தாயின் உடன் பிறந்தவர். அப்படியானால், தாய்மாமா. எனவே, இரண்டையும் தாய்மாமா வெருளி என்றே சொல்லலாம்.தங்கை அல்லது தமக்கை மக்களுக்குத் தாய்மாமன்மார் சீர் செய்வதைத் தங்கள் கடமையாகவும் பெருமையாகவும் கருதுவர்.00 தாய்வழி அத்தை தொடர்பான அளவு…

குறட் கடலிற் சில துளிகள் 42 : இனத்தூய்மை கொள்வோம்- இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு!- தொடர்ச்சி) மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௫ – 455) மனம் தூய்மை யாதலும், செயல் தூய்மை யாதலும் தான் சேரும் இனத்தின் தூய்மையால் உருவாகும். பதவுரை:  மனந்தூய்மை-மனநலன், உள்ளத் தூய்மை; செய்வினை தூய்மை-செயல் நயம்; இரண்டும்-இரண்டும்; இனம் – சேர்க்கை; தூய்மை-நன்றாதல்; தூ-பற்றுக்கோடு; ஆ-ஆகும்படி; வரும்-உண்டாம். மனத்தூய்மை என்பது மனத்தில் மாசு இன்றி இருத்தல். அஃதாவது தனக்குத் தீமை தரும் என்று கருதும்…

வெருளி நோய்கள் 1225-1228 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1221-1224 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1225-1228 தாத்தா, பாட்டி தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தாத்தா, பாட்டி வெருளி.தாத்தா பாட்டிகளின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 தாமி திபில்(Tommytibble) என்னும் அசைவூட்டப் படப்பாத்திரத்தின் மீதான அளவுகடந்த பேரச்சம் தாமி திபில் வெருளி.தாமி திபில்(Tommy Tibble) திம்மி திபில்(Timmy Tibble) ஆகிய இரட்டையர்களுள் தாமி திபில் ஒருவர். இவர்கள் திபில்கள் இரட்டையர்கள் அல்லது திபில்கள என அழைக்கப்படுகின்றனர்.00 தாம் பூனை, செறி சுண்டெலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாம் செறி வெருளி.தாம்,…

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3  கல்விக்கடமை : இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 – தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும்  நிறைவுரை 3 : கல்விக்கடமை  கல்விக்கடமை முழுவதும் அரசின் பொறுப்பு என்றானால் கல்வி நிலையம் யார் நடத்தினாலும்  வணிகமாய் இல்லாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்தான் இருக்கும். இருப்பினும் இன்றைய சூழலில் மக்களின் நாட்டம் தனியார் கல்வி நிலையங்கள் மீதே உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மிகப்பெரிய கட்டடங்களுடனும் ஏந்துகளுடனும் இருப்பதைப் பார்த்து அரண்டு போகக்கூடாது. இவ்வசதிகள் கல்வி நிலையம்…

வெருளி நோய்கள் 1216 -1220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1211-1215 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1216 -1220 பிறரால் தனித்து விடப்பட்டதாகக் கருதும் அளவுகடந்த பேரச்சம் தனியை வெருளி(Ermitophobia).பிறரிடமிருந்து ஒதுக்கப்பட்டு வாழ்வதால் உதவுவார் இல்லை என அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர்..இவ்வாறு பலவகையாகத் தனிமை தொடர்பான வெருளிகள் சொல்லப்பட்டாலும் அடிப்படையில் யாவும் ஒன்றே. திருமண வாழ்க்கையின்றித் தனித்து இருப்பதும் குடும்ப வாழ்க்கைக்குப் பின்னரும் பிறருடன் ஒன்றாமல் ஒன்றியாய் இருப்பதும் சிலர் இயல்பு. தனிமையில் இருக்கும் பொழுது துன்புறுத்தும் சிந்தனைகள் குவிந்து வாட்டும். தனித்த சூழல் கவலைகளைப் பெருக்கும். செயல்பாட்டுத் தடைகளும் ஏற்படும்….

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09 ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை   தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, ஒன்றிய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம்போட்டு மீட்டு வரும் ஒன்றிய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன்…

வெருளி நோய்கள் 1211-1215 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1206-1210 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1211-1215 1211. தற்பால் உறவர் வெருளி-Lesbophobia / Homophobia தற்பாலுறவு குறித்த பேரச்சம் தற்பாலுறவு வெகுளி.(தன்+பால்+ உறவு+வெருளி) தற்பால் உறவு கொள்பவர் தற்பால் உறவர்.இதனை, ஓரினச் சேர்க்கை என்றே அனைவரும் குறிக்கின்றனர். மனித இனம் மனித இனத்துடன்தான் உறவு கொள்ள வேண்டும். ஆணினம், பெண்ணினம் என்பது தவறு. பகுத்தலைக் குறிக்கும் பால் என்பதன் அடிப்படையில்தான், ஆண்பால் முதலான ஐந்து பால்பாகுபாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, பால் என்பது பாலினத்தைக் குறிக்கும். எனவே பால் அடிப்படையில் குறிப்பதே…

வெருளி நோய்கள் 1206-1210 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1201-1205 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1206-1210 தள்ளுவண்டி/பிள்ளைகளை உலாத்துவதற்கு அழைத்துச்செல்லும் உலாவண்டி(stroller) குறித்த வரம்பற்ற பேரச்சம் தள்ளுவண்டி வெருளி.உலா வண்டி என்றால் சுற்றுலாவிற்குச்ச செல்வதற்குரிய மகிழுந்து எனத் தவறாகக் கருதலாம் என்பதால் அதனைக் குறிக்கவில்லை. அதுபோல் தள்ளுவண்டி என்றால் சுமைகளைத் தள்ளிச் செல்ல உதவும் வண்டி என்று கருதக்கூடாது.00 தற்காப்புக்கலை(karate)பற்றிய தேவையற்ற அளவுக்டந்த பேரச்சம் தற்காப்புக்கலை வெருளி.தற்காப்புக் கலையில் ஈடுபடுவோர் தங்களின் கவனக் குறைவாலோ போதிய தேர்ச்சியின்மையாலோ தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனப் பேரச்சம் கொள்கின்றனர். தற்காப்புக்கலையில் ஈடுபடுபவர்களைப் பார்ப்பவர்களும் தேவையின்றிப்…

வெருளி நோய்கள் 1201-1205 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1196-1200 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1201-1205 தள விளக்குகள் மீதான தேவையற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சம் குறித்து இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. விளக்குகள் மீது வெருளி உள்ளவர்களுக்குத் தள வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00

1 2 521