வெருளி நோய்கள் 1221-1224 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1216-1220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1221-1224 சில சூழல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமை குறித்த பேரச்சம் தாங்காமை வெருளி.உயர்வளிமண்டல ஈரப்பதத்தைச் சில தாவரங்களால் தாங்கிக் கொள்ள இயலாது. அதுபோல் சில சூழல்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.இதற்குச் சரியான சொல் பொறாமை(Intolerance) என்பதுதான். ஆனால், பொறாமை என்பதை அழுக்காறு என்னும் பொருளில்தான் பார்ப்போம். (அழுக்காறும் பொறாமையின் வெளிப்பாடுதான்.) பொறுக்காமை என்பதும் சரியான சொல்லே. ஆனால் பொறுக்குதல் என்பதன் எதிர்ச்சொல்லாகக் கருதக் கூடாது. எனவே, பொருள் குழப்பம வரக்கூடாது என்பதற்காகத் தாங்க இயலாமையைக்…
கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 30 **** “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7 தலைவி கூற்று திணை: நெய்தல் கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள். பொருள்: தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித்…
ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! – – இலக்குவனார்திருவள்ளுவன்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 29 ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! காவல், குழவி கொள் பவரின், ஓம்புமதி! காத்தற்குரிய நாட்டைக், குழந்தையைத் தாய் காப்பதுபோல் காத்திடுவாயாக! – நரிவெரூஉத்தலையார் புறநானூறு 5, அடிகள் 6-7 திணை: பாடாண் திணை துறை:செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம். சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட பொழுது, நரிவெரூஉத் தலையார் பாடியது. முழுப்பாடல்: எருமை அன்ன கருங்கல் இடை தோறு, ஆனிற் பரக்கும் யானைய, முன்பின், கானக…
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சங்கத்தமிழ் விருதுகளுக்கான தகுதியானவர்களைத் தெரிவு செய்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:- அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது 60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை பராசக்தி என்னும் பெயரில் அளித்தமைக்காக எ.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 : நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே! ”நன்றல் காலையும் நட்பிற் கோடார்” கல்லாடனார், அகநானூறு 113. 1. தலைவி கூற்று திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொல்லியது பொருள் விளக்கம்: நன்று அல் காலையும் நட்பின் கோடார். நன்றல்காலை – நன்றல்லாத பொழுது = கேடுவந்த பொழுது = துயருற்ற பொழுது; நட்பின் கோடார் = நட்பிலிருந்து கோணாதவர்கள் = நட்பை விட்டு…
பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 ****** பிறர் நலத்திற்காக வாழ்க! பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட்பிணிப் போகிய நற்றிணை 186 : 8-9 பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சத்துடன் பொருளாசையைப் போக்கிய தலைவன். முழுப் பாடல்: கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கிஇரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டுபெருங்கை யானை பிடியெதிர் ஓடும்கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடைவேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5பாண்யாழ்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25: செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! “மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ” தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டு, தளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புறநானூறு 190 ஆவது பாடல் பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி நெல் விளைச்சலின் பொழுது கதிர்களைக்…
செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே!- பரணர்: இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25 செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே! ”செய்யா கூறிக் கிளத்தல், எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.” செய்யா=செய்யாதவற்றை, கிளத்தல்=பேசுதல், எய்யாதாகின்று=அறியாததாக ஆயிற்று, செய்யாததைச் செய்ததாகப் பாராட்டிக் கூறுதல் என் நா அறியாததாகும். அஃதாவது பொய்யாகப் புகழ்தல் புலவருக்கு வழக்கமில்லை என்கிறார். நாமும் இதைப் பின்பற்றி ஒருவர் செய்யாததைச் செய்ததாகக் கூறிப் பாராட்டக் கூடாது. *** கண்டீரக் கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். நள்ளியிடம் சென்று புலவர்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23 சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! ““- – என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப;சாலார் சாலார் பாலர் ஆகுபவே.” புறநானூறு 218 : 5 – 7 பாடியவர்: கண்ணகனார், நத்தத்தனார் எனவும் சொல்வர்.திணை: பொதுவியல். துறை: கையறு நிலை.குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்ததனைக் கண்டு பாடியது. சான்றோர், சான்றோர் பக்கமே சேர்வர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர்.இவை பாடலின்…
இலக்குவனார் சங்கத் தமிழ் விருது – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
இலக்குவனார் சங்கத் தமிழ் விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் சங்கத்தமிழை இணையத்தளங்கள், வலைப்பூக்கள், கட்டுரைகள், நூற்கள், சொற்பொழிவுகள், போட்டிகள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பும் சங்கத் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் சங்கத் தமிழ் விருது வழங்கப் பெறும். இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல், தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன வேண்டுகிறோம். சங்கத்தமிழ்ச் செயற்பாட்டாளர்களை…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – இலக்குவனார்திருவள்ளுவன்
(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! “…பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…” – கபிலர், நற்றிணை 32: 7 – 9 பதவுரை: நாடி = ஆராய்ந்து; நட்பின் = நட்பு கொள்வது ; நட்டு = நட்புகொண்டு; நாடார் = ஆராயார்; ஒட்டியோர்…
பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : இலக்குவனார் திருவள்ளுவன்
(காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 21 வாழ்க்கைக்கான பொருளைத் தேடு. அதே நேரம் வாழ்க்கையின் பொருளை இழக்காதே! புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல் அன்பு அன்று –பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை-பாலைக்கலி 1 “புன்கண் கொண்டு இனையவும்” என்பதன் பொருள் “துன்பமான கண் அல்லது துயரத்துடன் கூடிய கண்களுடன் வருந்துதல் “ அகறல் = அகலுதல் = பிரிதல் அத்தகைய சூழலில் பொருள் திரட்ட அன்புத்…
