தமிழ்நாடும் மொழியும் 8 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 7 தொடர்ச்சி) கடைச்சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் கடைச்சங்கக் காலமாகும். இக்காலமே தமிழ் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலமாகும். இனி இக்காலத் தமிழகத்தின் கலை, கல்வி, பண்பாடு, வாணிக வளம், மொழியின் செழுமை ஆகியவற்றைப் பார்ப்போம். மேற்கூறியவற்றை நாம் அறிய உதவுவன சங்கத் தொகை நூல்களும், கி. பி. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த என்போரின் குறிப்புகளும், பெரிப்புளூசின் ஆசிரியர் குறிப்புகளுமாம். தமிழ் வேந்தர்கள் சங்கக் காலத்தில் தமிழகம் முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர் முதலியோரால் ஆளப்பட்டது. குறுநில மன்னர் ஏறத்தாழ…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ்   தொல்காப்பியர் காலம் ஆரியர்கள் தென்னாட்டில் குடியேறிய காலம். அக்காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்பர். அக்கால நிலையைத் தெளிவாக அறிவிப்பது தொல்காப்பியமே. தொல்காப்பியர் அவர்க்கு முன்பிருந்தோர் இயற்றிய நூல்களையும், அவர் காலத்து நூல்களையும் அவர் கால வழக்கினையும் நன்கு ஆராய்ந்து மொழியிலக்கணமும் இலக்கிய இலக்கணமுமாகப் பயன்படத் தம் நூலை ஆக்கித் தந்துள்ளார். அத் தொல்காப்பியத்துள் பயின்றுள்ள பல சொற்கள் இன்றும் தமிழை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொல்காப்பியச் சொற்களுக்கு உரிய அகராதியை ஒருமுறை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ் தொடர்ச்சி   ஆங்கில மொழியில் பிரித்தானியச் சொற்கள் எந்த அளவு கலந்துள்ளனவோ அந்த அளவு திராவிட  (தமிழ்)ச் சொற்கள் சமசுக்கிருதத்தில் கலந்துள்ளன. ஆனால் இவ்வுண்மை நெடுங்காலமாக  உணரப்பட்டிலது. (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பக்கம் 714)   மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் இந் நாட்டு மொழிகளைக் கற்று ஆராய்ந்து ஆரிய மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்து எடுத்து அறிவித்துள்ளனர். அதன் பின்னர்தான் ஆரியம் கடன் கொடுக்குமேயன்றிக் கொள்ளாது என்ற கொள்கை…

தமிழ்நாடும் மொழியும் 6 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 5 தொடர்ச்சி) 4. சங்கக் காலம் முன்னுரை தமிழக வரலாறு என்றவுடனே அறிஞர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் உடனே நெஞ்சத்தில் தோன்றுவது முச்சங்கங்களேயாம். பண்டைக்காலத் தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கை ஆகியவற்றைத் தெள்ளத் தெளிய நாம் அறிய வேண்டுமானால், முச்சங்க வரலாறு, அச்சங்கப் புலவர்கள் யாத்த சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை நாம் நன்கு அறிதல் வேண்டும். முச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் கணக்கிலடங்கா. அவற்றுள்ளே முதற் சங்க நூல்கள் எனப்படுபவை இன்று பெயரளவிலேதான் காட்சி அளிக்கின்றன, இடைச் சங்க நூல்களிலே இன்றும் எஞ்சி…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3.பழந்தமிழ் தொடர்ச்சி             4.         அம் மொழியின் எழுத்து ஓவிய ஒலியெழுத்தாகும். ஓவியமாக நின்று உருவப்பொருளையும் ஒலியடையாளமாக நின்று அருவப் பொருளையும் அவ் வெழுத்து அறிவித்தது.             5.         எழுத்தடையாளங்கள் அசைகளை அறிவியாது முழுச் சொற்களையே அறிவித்தன.   உலக மொழிகள் அனைத்தும் முதலில் ஓவிய எழுத்துகளைக் கொண்டிருந்தன;பின்னர் அவற்றினின்றும் ஒலி எழுத்துகள் தோன்றின. ஆங்கில அ, ஆ என்பன ஓவிய எழுத்துகளிலிருந்து தோன்றியனவே. தமிழ் எழுத்துகளும் அவ்வாறு தோன்றியிருக்க வேண்டும்….

தமிழ்நாடும் மொழியும் 5 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 4 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் புதிய கற்காலம் தொடர்ச்சி பழைய கற்கால மனிதன் நாடோடியாக அலைந்தான். ஆனால் காலப்போக்கில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்க்கக் கற்றுக் கொண்டான். மேலும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்ந்தான். நிலத்தைப் பயன்படுத்தவும் கற்றுக் கொண்டான். எனவே ஓரளவு நிலைத்த வாழ்க்கையே புதிய கற்காலத்துக்கு அடிப்படையாகும். பழைய கற்கால மனிதன் குகைகளில் வாழ்ந்தான். புதிய கற்கால மனிதனோ புல்லும் ஓலையும் கொண்டு வேய்ந்த குடிசைகளிலே வாழ்ந்தான். நாற்புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்ந்து பானையைக் கவிழ்த்த குடிசைகள்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3.பழந்தமிழ்  மொழிகளின் தொன்மையை யறிவதற்கு அவற்றின் எழுத்துச் சான்றுகளும் (கல்வெட்டுகள், செப்பேடுகள்) இலக்கியங்களும் பெரிதும் துணை புரிகின்றன.   எகித்து நாட்டில் கி.மு. 6000 ஆண்டிலிருந்தே கல்வெட்டுகள் தோன்றியுள்ளன. கி.மு. 3700 முதல் கி.மு. 200 வரை எழுத்தாவணங்கள் தொடர்ந்து வந்துள்ளன.   அசீரிய  பாபிலோனியா நாட்டில் இலக்கியப் பொற்காலம் கி. மு. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.   பெரிசிய நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இலக்கியத் தோற்றம் எழுந்துள்ளது.   பரதக் கண்டத்தில் ஆரிய…

தமிழ்நாடும் மொழியும் 4 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 3 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் பழைய கற்காலம் நினைப்பிற்கெட்டா நெடுங்காலத்துக்கு முன்னர்க் கதிரவனிடமிருந்து ஒரு சிறு பகுதி தெறித்து விழுந்தது. விழுந்த பகுதி படிப்படியாகக் குளிர்ந்தது. பிறகு அதிலே நீரில் வாழ்வன தோன்றின. பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழவல்ல உயிர்கள் தோன்றின. இவ்வாறு பல்வேறு வகையான உயிர்கள் தோன்றித் தோன்றி இறுதியிலே மனிதன் தோன்றினான் என அறிஞர் பலர் நமது தோற்றம் குறித்துக் கூறியுள்ளனர். தோன்றிய மனிதன் முதலிலே விலங்குகள் போல வாழ்ந்தான். வாழ்க்கையிலே சிறிது சிறிதாக முன்னேறினான். விலங்குகள் போல…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி    தமிழ்க் குடும்ப மொழிகளுள் திணை எனும் பாகுபாடு உண்டு.  ஏனைய குடும்ப மொழிகளுள் இத் திணைப் பாகுபாடு காண்டல் அரிது.   இந்தோஐரோப்பிய மொழிகள் சொற்களின் இயல்புக் கேற்பப் பால் கூறும் முறையைக் கொண்டுள்ளது. பொருள் உயர்திணை ஆண்பாலைச் சார்ந்ததாய் இருக்கலாம். ஆனால் சொல் அஃறிணை ஒன்றன்பாலாய்க் கூறப்படும்.   இந்தோஐரோப்பிய மொழிகளுள் சிலவற்றுள் எல்லாம் உயர் திணையே; ஆண்பால் அல்லது பெண்பால் என்ற பகுப்புத்தான் உண்டு.  …

தமிழ்நாடும் மொழியும் 3 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 2 தொடர்ச்சி) 2. தமிழகம் முத்தமிழ் வளர்த்த மூவேந்தரின் முக்குடைக் கீழ் விளங்கிய நந்தம் செந்தமிழ் நாட்டின் எல்லை, அங்கு விண்ணையும் முட்டிக் கொண்டு நிற்கும் மாமலைகள், அவற்றிலிருந்து நெளிந்து ஓடும் தெண்ணீராறுகள், அவை பாயும் நிலப்பரப்பு, நிலப்பிரிவுகள் ஆகியவற்றை ஈண்டு பார்ப்போம். எல்லை தொல்காப்பியம் முதல் பாரதியார் நூல்கள் வரை இடைப்பட்ட அத்தனை இலக்கியங்களிலும் தமிழகத்தின் எல்லைகள் நன்கு பேசப்பட்டுள்ளன. தண்டமிழ் வழங்கும் தமிழகத்தின் எல்லை இன்று போலன்றிப் பண்டு பரந்து கிடந்தது. சியார்சு எலியட்டு என்பவரின் ஆராய்ச்சியின்படி மிக…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி   இத்தாலிய மொழி, மலேயா மொழி, வங்காள மொழி, போர்ச்சுகீச மொழி, அராபி மொழி ஆயவை பேசுவோர் தொகை ஐந்து கோடிக்கும் ஏழு கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகும்.   இவற்றில் சில உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தாம் வழங்குமிடமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலம் ஐந்தில் ஒரு பகுதியையும், உருசியம் ஆறில் ஒரு பகுதியையும் ஆட்சி புரிகின்றன. சப்பான் மொழியும் இத்தாலிய மொழியும் சிறு நிலப்பரப்புள் வழங்குகின்றன. ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகமெங்கும்…

தமிழ்நாடும் மொழியும் 2 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 1 தொடர்ச்சி) 1. தமிழ் நாடு 1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி தொடர்ச்சி வரலாற்றுப் பகுதிகள் ஒரு நாட்டின் வரலாறே அந் நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எந்த நாட்டு மக்களும் தனித்து வாழ்தல் இயலாது. பிற நாட்டினரின் படையெடுப்பு நிகழ்ந்து அயலார் கையகப்பட்டு ஒரு நாடு தவிக்குமேயாயின் அது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். வென்றவர் தம் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் என்பன தோற்றவரிடையே கலத்தல் இயல்பு. இதன் காரணமாய் ஒவ்வொரு…