திருக்குறள் பன்னாட்டு மாநாடு 2016, செருமனி
சித்திரை 24, 2047 / மே 07, 2016 செருமனி – எசன் மாநகரில் இடம்பெறும் . பேராளர் கட்டணம் 100 (இ) யூரோக்கள் .(தங்குமிடம் உணவு உட்பட). . போக்குவரத்து, தங்குமிடத்திலிருந்து மாநாட்டு மண்டபம் வரை கட்டணமில்லை. தொடர்புகளுக்கு : நயினை விசயன் 00492013307524 , 0176 55 77 87 52
வெளிச்சம் தொலைக்காட்சியின் தொடக்க விழா
வெளிச்சம் தொலைக்காட்சியின் தொடக்க விழா சித்திரை 01, 2047 / ஏப்பிரல் 14, 2016 காலை 10.00 அண்ணா நகர், சென்னை 600 040
‘இலக்கியவீதி’யின் ‘மறுவாசிப்பில் கிருத்திகா’ – கடலோடி நரசய்யா
அன்புடையீர்! வணக்கம். நலனே விளைய வேண்டுகிறோம். ‘இலக்கியவீதி‘யின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், (பங்குனி 30, 2047 / 12.04.2016 செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ) ‘மறுவாசிப்பில் கிருத்திகா‘ நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். என்றென்றும் அன்புடன்- இலக்கியவீதி இனியவன்.
அறிஞர் அம்பேத்கார் பிறந்தநாள் எழுச்சிக் கூட்டம், திருவொற்றியூர்
சித்திரை 01, 2047 / ஏப்பிரல் 14, 2016 மாலை 5.00
முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்புக் கொடுந்துயரநாள்
தமிழின அழிப்பு நாளின் ௭(7)ஆம் ஆண்டு நினைவு நாள்! – பிரித்தானியாவில் அணி திரளுங்கள்! தமிழின அழிப்பு நாளின் ௭(7)வது ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. இம்முறை, பிரித்தானியத் தலைமையமைச்சரின் (பிரதமரின்) வீடான எண்: 10, இடவுனிங்கு வீதியில் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது. தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாட்டை பிரித்தானியாவிடமும் பன்னாட்டு அரசுகளிடமும் தெரிவித்து, அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம் மாலை ஐந்து…
சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு, கோயம்புத்தூர்
சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 காலை 10.00 முதல் இரவு 9.00 வரை கோயம்புத்தூர் சுடர் ஏற்றம் படத்திறப்பு பறைஇசை கருத்தரங்கம் சாதி மறுப்பு மக்கள்கூட்டியக்கம்
எழில் இலக்கியப் பேரவை
பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2016 மாலை 4.00 ஆவடி எழில் இலக்கியப் பேரவை பாவேந்தர் பிறந்தநாள் 36ஆம் திங்கள் சிறப்புக் கருத்தரங்கம் குறள் அமுதக் கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழா
பிரதிலிபி – அகம் : கருத்தரங்கு – பரிசளிப்பு
பிரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு ‘ஞயம்பட வரை’ போட்டியின் பரிசளிப்பு விழா பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (டிசுகவரி புக் பேலசு) , சென்னை
அமுதசுரபி ஆண்டு விழா
அமுதசுரபி ஆண்டு விழா பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 09, 2016 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் : தவுட்டன் உணவகம்( Doveton Cafe), 5- புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சென்னை நூல்கள் வெளியீடு செப்பேடு பாவலர் கருமலைத்தமிழாழன் மரபுக் கவிதை நூல். அன்புள்ளமே முனைவர் கோமதி கேசவன் புதுக்கவிதை நூல். நம் அமுதசுரபி மாத இதழ் அமுதசுரபி கவிதைகள் முகப்புத்தகத்தில் தேர்ந்தெடுத்த 100 கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. கவிதை அரங்கம், கலந்துரையாடல்,…
சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வெளியீட்டு விழா
சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வெளியீட்டு விழா பங்குனி 31, 2047/ ஏப்பிரல் 13, 2016 மாலை 5.00 உரோசா முத்தையா மன்றம், தரமணி, சென்னை பாரதி புத்தகாலயம்
கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம், போர்ட்பிளேயர், அந்தமான்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2015 அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம் நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின் அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது. கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கிற்குத் தாங்கள் வருகை…
சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல்-தனிப்பாடல் : காளமேகம்
பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016 மாலை 6.30, சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகின்றோம். சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ; வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதீய வித்யாபவன்
