சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!   இலங்கையில் அரசியல் சட்டத் திருத்தம், தமிழருக்கு உரிமை, ஆட்சி உரிமைப் பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பரப்புரையினைப்  பொய்யாக்கியது 6 அகவைத் தமிழ்ச் சிறுவன் படுகொலை.  தர்சன் எனும் சிறுவனைப் பாலியலாகச் சீரழித்து, பெரிய ஒரு கல்லை அவன் உடலில் கட்டிக் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்திருக்கிறது இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சிங்களப் படை.   தமிழனுக்குக் குரல் கொடுப்பதாக வேடம் போடும் இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஐ.நா அவையின் சிறுவர்களுக்கான…

ஊர்ச்சந்தை, சென்னை

தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 09.00 சென்னை மல்லர் கம்பம் எனும் மரபு வீர விளையாட்டு காண வாரீர்! சென்னையில் ஊர்ச் சந்தை – 2! செம்மையின் ஊர்ச் சந்தை மீண்டும் சென்னையில் நிகழவுள்ளது. முதல் சந்தை கடந்த சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சந்தை பிப்பிரவரி 7 ஆம் நாள் கூடுகிறது. இந்த நிகழ்வு ‘செம்மைச் சமூகம்’ எனும் அமைப்பினால் நடத்தப்படுகிறது. மரபுக்குத் திரும்பும் விருப்பம் கொண்டோரின் கூடல்தான் செம்மைச் சமூகம் ஆகும். ஊர்ச் சந்தை…

மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! – செந்தமிழன் மணியரசன்

மாசி 02, 2047 / பிப்.14, 2016 காலை 10.00 சென்னை மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்!  வேளாண்மை, வீடு கட்டுதல், மருத்துவம் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை மரபுவழியில் மேற்கொள்ளத் தேவையான பயிற்சிகளைத் தொடங்குகிறோம். இம்மூன்று துறைகளுக்குமான பாடத் திட்டம் இதுதான். மரபு வேளாண்மை: பாடம் 1 • இயற்கையியல் எனும் அடித்தளத்தை அறிந்துகொள்ளுதல்: புவியின் உயிர் வகைகள் – தாவரங்களின் இயல்புகள் – மனிதர்களும் தாவரங்களும் – காடுகளும் மனித வாழ்வும் – தாவரங்களும் கூட்டு உயிரிகளின் இயல்புகளும் பாடம் 2 • ஐம்பூதக்…

சங்கம் 4 : வெள்ளப்பேரிடர்தடுப்பு உரையரங்கம்

  அறிவு மறுமலர்ச்சியே சமூக – அரசியல் மாற்றத்திற்கான விசை, தமிழர் அறிவு மறுமலர்ச்சிப் பேரியக்கம் தை 20, 2047 முதல் தை 24, 2047 வரை  பிப்பிரவரி 03, 2016 முதல் பிப்.07 2016 வரை  இராசரத்தினம் கலையரங்கம், சென்னை

நிறை இலக்கிய வட்டத்தின் ஐந்தாம் ஆண்டு கம்பர் விழா

 கவிமாமணி இளையவன் ஐதராபாதில் பல ஆண்டுகளாக ‘நிறை இலக்கிய வட்டம்’ நடத்தி வருகிறார்.  இளையவன் கையால் தொடப்பட்டு வளரும் இளம் கவிஞர்கள், பேச்சாளர்கள் மிகப்பலர். இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் இருக்கிறேன்.  என்னுடைய 17ஆவது வயதில் பாரதி கலைக்கழகத்தில் நான் கவிதை படிக்கக் காரணமாக இருந்தவர் கவிமாமணி இளையவன்.  இம்முறை வரும் ஃபிப்ரவரி 7ம் தேதி ஐந்தாவது ஆண்டு கம்பர் விழாவை நிறை அமைப்பு நடத்துகிறது. முழுநாள் விழா.  அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.   நாளின் இறுதி நிகழ்ச்சியாகப் பட்டிமண்டபமொன்று நடைபெறுகிறது. ‘கம்ப காவிய மேன்மைக்குப்…

இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன்

அன்புடையீர் வணக்கம்.. இலக்கியவீதியின்,  இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில், இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தை 19, 2047 / 02-02-2016 அன்று  மறுவாசிப்பில் விக்கிரமன் உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்!     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச்சூழல் – நினைவூட்டல்

 சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச் சூழல் – நினைவூட்டல் 15  ஆண்டிற்கு முன் வீட்டுக்கு முன் இரண்டு பெரிய வேப்ப மரமும், பெரிய வட்டக் கிணறும், மல்லிகைப் பூந்தோட்டமும்,  இருக்கும்; மழை பெய்தால்  இரவு முழுவதும் தண்ணீர் வாய்க்காலில் ஓடும்  ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கும் தங்களுடைய ஊரைப்பற்றின பழைய  நினைவு இருக்கும். ஆனால், இப்பொழுது, இந்த இடம் அவ்வளவு பசுமையாக இருந்தது என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. குறைந்தஅளவு பசுமையைக் கண்ணில் பார்ப்பதற்கும் துய்ப்பதற்கும் இருக்கிற கடைசிக் கட்ட வாய்ப்பு…

அலைபேசிக்கணிமை 2016 – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு

அன்புள்ள உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தை 22 & 23, 2047 / பிப் 5 & 6, 2016  ஆகிய  இருநாளும் உத்தமம் இந்தியக்கிளையின் சார்பாக செல்பேசிக் கணிமை 2016. – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு – கருத்துரை வழங்கும் நிகழ்வு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து உத்தமம் உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.   செல்பேசிக் கணிமை 2016 குறுஞ்செயலி மாநாடு நிச்சயமாக அனைத்துப் பேராசிரியர்கள் – தமிழ்க் கணியன்கள்(மென்பொருள்) உருவாக்குநர்களுக்குப் பேரளவில் உதவியாக இருக்கும்.  தமிழில் கணியன்கள்(மென்பொருள்கள்) உருவாக்கினால் நிதி…