கலைச்சொல் தெளிவோம்! 3.] உணவும் சாப்பாடும் – இலக்குவனார் திருவள்ளுவன்
உணவு- meal(ஆட்.,கால்.), food(வேளா.,சூழ.,), diet(பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். (இ)டயட்(டு) – diet என்பதைத் திட்ட உணவு(ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத் தக்கனவும் தள்ளத்தக்கனவும்…
கலைச்சொல் தெளிவோம்! 2.] பொரித்தலும் வறுத்தலும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(குஞ்சு)பொரித்தல்-hatch/hatching(வேளா., பயி., மனை., கால்.); fry/frying (கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று அடைகாத்துக் குஞ்சுபொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறுவகைக்குக் குறிப்பிடுகின்றனர். சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்தகறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு (நற்றிணை367.3) [கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக்கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத்திரளை] பசுங்கண்கருனைச்சூட்டொடுமாந்தி…
கலைச்சொல் தெளிவோம்! 1.] கொழுப்பு வகைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
கொழுப்பு(2), நிணம்(24) சொற்களுடன் இறைச்சிக்கொழுப்பைக் குறிக்கும் பிறதொடர்களும் சங்கஇலக்கியங்களில் உள்ளன. இப்பொழுது பின்வருமாறு கொழுப்பின் வகைகள் குறிக்கப்படுகின்றன. கொழுப்பு – lipid (வேளா., பயி., சூழி.,மீனி.,மனை.,கால். ) ; fat (வேளா., மனை.,மரு.); adipose ( பயி.,); cholesterol ( மரு.); கொழுப்புஅமிலங்கள்–triglycerides (மனை.); உயர்மாவுச்சத்து – triglycerides ( மரு.). இப்பொழுதுநாம்அமிலம்என்றுசொல்வதைச்சங்கஇலக்கியங்கள்காடி(6) என்றேகுறிப்பிடுகின்றன. ஆதலின் சங்கச் சொற்கள் அடிப்படையில் கொழுப்பு வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். நிணம் – cholesterol கொழுப்பு – fat கொழுமை – adipose கொழுமைமெய்ம்மி – adipose tissue கொழுமியம் – lipid…
சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர் பேசி – 93827 19282 (முன் இதழ்த் தொடர்ச்சி) பாதரசம் – இதளியம், இதள் பாதாம் – கற்பழவிதை பாயசம் – பாற்கன்னல் பார்லி – பளிச்சரி, வாற்கோதுமை பாரதம் – இதளியம், இதள் பாரிசாதம் – பவழமல்லிகை பால்கோவா – திரட்டுப்பால் பாசாணம் – கல், நஞ்சு பிசுதா – பசத்தம் பித்தபாண்டு – இளைப்பு, மஞ்சநோய் பித்தளை – …