துயின்மை

துயின்மை

kalaicho,_thelivoam01 34 : துயின்மை-hibernation

இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் (பெரும்பாணாற்றுப்படை : 440)
இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து (முல்லைப் பாட்டு : 80)
கம்புட் சேவல் இன்றுயில் இரிய (மதுரைக்காஞ்சி : 254)
வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் (குறிஞ்சிப்பாட்டு: 242)
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் (நற்றிணை : 87.2)

இவைபோல் சங்க இலக்கியங்களில் 62 இடங்களில் துயில் என்னும் சொல்லும் 31 இடங்களில் துயில் என்பதன் அடிப்படையிலான சொல்லும் பயின்றுள்ளன. அவற்றுள் ஒன்று துயின்று என வரும் பின்வரும் அடியாகும்.

நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று (புறநானூறு 159.4)

துயிலின் அடிப்படையில் துயின்று வந்துள்ளது போல் ‘துயின்மை’ என நாம் புதுச்சொல் உருவாக்கலாம்.
சில உயிரினங்கள் குளிர் காலத்தில் இயங்காமல் தூக்க நிலையிலேயே இருக்கும். இந்நிலையைத் துயின்மை என்பது சரியாக இருக்கும்.

துயின்மை-hibernation
துயிற்சி-hibernate

– இலக்குவனார் திருவள்ளுவன்