இந்தியப் பொறியியல் பணிக்கு (I.E.S.) விண்ணப்பிக்கலாம்.
இந்திய ஆட்சிப்பணி போன்று சிறப்பான பணி இந்தியப் பொறியியல் பணி. இவ்வாண்டில் இப் பணியில் 763 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மத்தியத் தேர்வாணையம்(யு.பி.எசு.சி.) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நவம்பர் 25ஆம் நாளுக்குள் ம.ப.தே.ஆ. இணையதளத்தில் (www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, பாடத்திட்டம் முதலான அனைத்து விவரங்களையும் இந்த இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம். இப்போது பொறியியல்(பி.இ., பி.டெக்.) இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதனை எழுதலாம்.
இப்பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடக்கத்திலேயே மாதச்சம்பளம் உரூ.60 ஆயிரம்கிட்டும். முதன்மைத்தேர்வு மட்டும்தான் உண்டு.
. முதல் பகுதியில் பொது அறிவு, பொது ஆங்கிலம் (ஒரு பிரிவு), தொடர்பான பொறியியல் பாடம் (2 பிரிவு) தொடர்பாகத் தெரிவு முறையில் (objective) கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண் வீதம் 3 பிரிவுகளுக்கும் மொத்தம் 600 மதிப்பெண். 2ஆவது பகுதியில் விரிவாக விடையளிக்க வேண்டும். தொடர்புடைய பொறியியல் பாடத்தில் இருந்து 2 தாள்கள். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண். ஒட்டுமொத்தமாக 1000 மதிப்பெண். அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 200 மதிப்பெண். பொதுவாக வடநாட்டுப்பல்கலைக்கழகப் பாடமுறையைச் சார்ந்து வினாக்கள் அமைவதால், அவற்றை அறிந்து கொண்டால் சிறப்பாக எழுதலாம்.
தேர்வு எழுதுநருக்கு வாழ்த்துகள்.
Leave a Reply