சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு
சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத்
தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு
செகந்திராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்-நடுவண் தொடர்வண்டித்துறையில் காலியாக உள்ள குழு – இ, குழு – ஈ (Group – C & Group – D) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
[விளம்பர எண்: SCR/R-HQ/128/S&G/2015-16]
மொத்தக் காலியிடங்கள்: 14
பணி: குழு – இ (Group-C) பணியிடங்கள் (சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள்) (Scouts & Guides).
காலியிடங்கள்: 02.
அகவை வரம்பு: 18 – 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மேனிலைப்பள்ளி இறுதி வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: குழு – ஈ (Group -D) பணியிடங்கள் (சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள்) (Scouts & Guides).
காலியிடங்கள்: 12.
அகவை வரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி அல்லது தொழிற்பயிற்சிக் கழகத் (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சாரணர் இயக்கத்தில் பங்களிப்பு, அருவினைகள் (சாதனைகள்) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: உரூ.100/-[ இதனை FA & CAO, South Central Railway, Secundarabad என்ற பெயருக்கு இந்தியப்பணக்கட்டளையாக (IPO)வாகச் செலுத்த வேண்டும்.] பட்டியல் பிரிவினர், பட்டியல் பழங்குடியினர் (SC, ST) ஆகியோருக்குக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
என்கிற இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்ப் படிகளில் தற்சான்று (self-attestation) செய்து வழக்கமான அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 13.3.2016 .
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்!
Leave a Reply