நவம்பர் 20, 2013 முதல் 04-12-2013 வரை இணையத்தில் இதற்கென விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் அச்சுப் பதிவை 09-12-2013க்குள் அனுப்ப வேண்டும். அகவை வரம்பு 31-10-2013 அன்று பட்டதாரிகள் 24. முதுநிலைப் பட்டதாரிகள் 26. பொறியியல் உட்பட ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் உரூ.300.

http://career.tmb.in/ என்ற முகவரியில் இயங்கும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். பின்னர், அதனை அச்செடுத்து, அகவை, கல்வித் தகுதிக்கான சான்றிட்ட படிகள், கட்டணத்திற்கான  வரைவோலை(டி.டி.) இணைத்துப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பொதுமேலாளர்,

மனிதவள   மேம்பாட்டுத்துறை,

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வ-து.,

எண் 57, விக்டோரியா விரிவாக்கச் சாலை, தூத்துக்குடி 628002

 இணையப் பதிவு  தொடக்க நாள் 20.11.2013

          இணையப் பதிவு இறுதி நாள் 04.12.2013

விண்ணப்பம் பெற இறுதி நாள் 09-12-2013