மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு-பொது வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ்ச் செயல்பட்டு வரும் இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் (Bureau of Indian Standard) ஒழிவிடமாக உள்ள  “ஆ” நிலை அறிவியலாளர் (“B” Grade Scientists)பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியத் தரவரையறு நிறுவனம்

பணி: பொறியாளர்

மொத்த  ஒழிவிடங்கள்: 115

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:  இயந்திரவியல் – 31,  மின்னியல் – 31,  பொதுப்பொயியியல்(Civil) – 24,மாழைப்பொறியியல் (Metallurgical) – 09,  வேதியல் – 08,  கணிணியறிவியல் – 10,  நெசவியல் – 02.

கல்வித்தகுதி:  தொடர்புடைய துறையில் 60 % மதிப்பெண்களுடன்   பொறி.இ. அல்லதுபொறி.தொ.நு.இ, (B.E. or B.Tech.)

சம்பளம்: மாதம் ரூ.52,280/-

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கும் பிற பி.வ.பிரிவினருக்கும் உரூ.750. (இதனை  இணையவழி செலுத்த வேண்டும்.)

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், முன்னாள்  படைத்துறையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு: தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் அனைவருக்கும்  சனவரி 19, 2014 அன்று,  இந்தியாவில் 45 நகரங்களில்  இணையஇணைப்பு  மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னையில் நடைபெறும்.

இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.12.2013

முழுமையான விவரங்கள் அறிய உரிய (www.bis.org.in) இணையத்தளத்தைப் பார்க்கவும்.