(இராவண காவியம்: 1.2.61-65 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம் 

2. தமிழகப் படலம்

 

வேறு

  1. பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை

முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல

வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர்

கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா.

 

  1. பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை

ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர

மாணிழைப் பரத்திபாட மகன்றில்கேட் டுவக்கும்பாக்கம்

காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங்காட்டும்.

68.வருமலை யள விக் கானல் மணலிடை யுலவிக் காற்றிற்

சுரிகுழ லுலர்த்துத் தும்பி தொடர்மரை முகத்தர்தோற்றம்

இருபெரு விசும்பிற் செல்லு பிளமைகீர் மதியந் தன்னைக்

கருமுகில் தொடர்ந்து செல்லுங் காட்சிபோற்றோன்றுமாதோ.

 

69.திரைதரு பொருளு முப்புச் செறிவிலைப் பொருளு மல்கக்

கரைவரு கப்பல் நோக்கிக் கானலம் புன் னை சாய்ந்து

நரையிதழ்ப் பரத்தி யேங்கு நாள் வெயில் காலை யுப்பின்

பெருவ ளக் குவிய லீட்டும் பெருமணல் நெய்தலோங்கும்.

 

திணைமயக்கம்

 

70.ஆய்ச்சியர் கடைந்த மோரு மளையொடு தயிரும் பாலும்

காய்ச்சிய நெய்யும் விற்றுக் கரும்பினைக் கசக்கப்பண்ணும்

வாய்ச்சியர் தந்த நெல்லும் வழியிடை யுப்புங் கொண்டு

போய்ச்சுவை படச்சோ றாக்கிப் புசிப்பர்தங் கிளைகளோடே.

 

குறிப்புகள்

  1. முசிதல்-அறுதல். முசிபடுதல் கெடுதல். வசிபட – இருப்பிடம் கெட, துவர்-பவளம். நீர் – தன்மை. 67. பாணி, சீர், தூக்கு-தாளவகை. பாணி- எடுப்பு. சீர்- முடிப்பு. தூக்கு- நிகழ்ச்சி. திவவு-வார்க் கட்டு. 68. அளவு தல்-நீராடல். 69. மல்க- நிறைய. நரை இதழ்-(பிரிவால்) வெளுத்த இதழ்.

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை