(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

6. தாய்மொழிப் படலம்

  1. தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தா
    ராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்
    சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தே
    தாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார்.

கழகம் – மேற்படி வேறு வண்ணம்

     32.      பல்வளப் புடையதென் பாலி நாட்டிடைக்
             கல்வளப் பஃறுளி யாற்றின் கண்ணமர்
             நல்வளப் புடையதொன் னகர மேவிய
             சொல்வளப் படுதமிழ் சுவைத்த பாண்டியன்.

 33.      புலக்கணி னுணர்தமிழ்ப் புலவ ராக்கிய
          இலக்கிய விலக்கண வெண்ணில் நூல்களை
          நலக்குறு புலவர்தங் குழுவி னாப்பணோர்
          அலக்குறு பொருணல மாய வெண்ணினான்.

 34.      எண்ணிய படியுள வெழுச்சி மீதுற
          அண்ணிய பொதுமைநோக் கறிஞர் தங்களை
          நண்ணியே யமர்வுற நகரிற் கூட்டியே
          கண்ணிய மொடுதமிழ்க் கழகங் கண்டனன்.

 35.      கண்டவக் கழகமுன் கருத்தை யேற்றியே
          வண்டமிழ் நூல்களை வரைய றுத்திடத்
          தண்டமி ழகத்திடைத் தமிழின் வாழ்வுறும்
          ஒண்டமிழ்ப் புலவரை யொருங்கு கூட்டினன்.

+++++

  1. சேய்க்குணம் – தாயைப் பேணுங் குணம். 32. கல் – மலை. 33. புலக்கண்
  • அறிவுக்கண். அலகு உறு – அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம்
  • +++++

இராவண காவியம் – புலவர் குழந்தை

(தொடரும்)