(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)

rasam

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின

முதல் கையேடு – 7

(புத்தக வெளியீட்டு முயற்சி-2) 

சிக்கல்  2

பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது!

 ஒருவருடைய கையேட்டுப் படியை ஓர் அச்சகத்தின் பக்கங்களுக்குள் கொண்டுவருவது எளிதான செயல் இல்லை! இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் என்னைக் கிண்டல் செய்து குற்றம் சொன்னார்கள்! மக்களின் இந்த மாதிரிக் கிண்டலில் என்ன புதுமை? சில மக்கள் பிறரைக் குற்றம் சொல்லியும் கிண்டலடித்துமே பொழுதைப் போக்குகிறவர்கள் ஆச்சே!

  சில பக்கங்களைப் பாருங்கள்:

kaiyedu01 kaiyedu02

இப்படியே, பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்த்ததோடு மட்டுமில்லாமல், புத்தக வடிவில் உருவாக்கும் முயற்சியும் தொடர்ந்தது.

சிக்கல்  3

புத்தகம் என்றால் … பக்கங்களை  உருவாக்கினால் மட்டும் போதாது. அதற்கு உரிய பொருளடக்கம் (Table of Contents), அடிக்குறிப்பு (foot notes), சொற்களைத் தேடும் குறிப்பு (Index) … இன்ன பிற வேண்டும்.  அவற்றை ஒரு “புத்தக” வடிவில் கோக்க வேண்டும். அதற்கு  உரிய மென்பொருள் (word processing software) தேவை.

 முனைவர் இராசம் இராமமூர்த்தி

http://mytamil-rasikai.blogspot.in/2013/04/7-2.html

(தொடரும்)