தலைப்பு-ஆரியத்தை உயர்த்துவதும்தமிழைத்தாழ்த்துவதும்வழக்கம்-சி.இலக்குவனார் : thalaippu_aariyathaiuyarthuvadhuvazhakkam_S.Ilakkuvanar

ஆரியத்தை உயர்த்துவதும் உண்மையான உயர்வுடைய தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது

  தூயதமிழ்ச் சொற்களை ஆரிய மொழிச் சொற்கள் எனத் திரித்துக் கூறுவதும், தமிழர்க்கே உரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆரியர்க்குரியன என அறங்கோடி அறைவதும் இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றமை மிக மிக வருந்துவதற்குரியது. உண்மைக்குப் புறம்பான புனைந்துரை எழுதி ஆரியரே மேலோராய்த் தமிழர்க்கு நாகரிகம் கற்பித்தனர் எனக் கூறுவோரை உயர்ந்த வரலாற்று ஆசிரியர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றிஆராய்நது தமிழர் நாகரிகச் சிறப்பை உரைப்போரைக் குறுகிய நோக்கமுடைய குறுமதியாளர் எனக் குற்றம் கூறி இகழ்வதும் இத் தமிழ் நாட்டில் பெரு வழக்காய் விட்டது.

பேராசிரியர் சி.இலக்குவனார்

குறள்நெறி (மலர்1 இதழ்18): ஆவணி 17,1995: 1.9.64