(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப். 06, 2015 தொடர்ச்சி)

 thedupori-thalaippu

7

11.] நம்பி அகப்பொருள் விளக்கம்

11.1 முகப்பிலோ, மூலப் பாடலிலோ, மூலமும் உரையும் இணைந்த பகுதியிலோ தேடுதல் பொறி இல்லை.

11.2.உரைப்பகுதி முகப்புப் பக்கத்தில் மட்டும் தேடுதல் குறிக்கப்பெற்று, அதனைச் சொடுக்கினால், பக்கம் தேடல், சொல் தேடல் வருகின்றன(படவுரு 38)

படவுரு 38

படவுரு 38

11.3. ஒருவரின் (திரு கா.இர. கோவிந்தராச முதலியார்) உரைதான் உள்ளது. எனினும் வழக்கம்போல் உரைப் பகுதியைத் தேர்வு செய்தால் மட்டுமே உரை காண இயலும் (படவுரு 39).

படவுரு 39

படவுரு 39

ஒருவர் உரைக்குத் தெரிவும் தேவையில்லை; உரை என ஒருமையில் குறிக்காமல் உரைகள் எனப் பன்மைத்தலைப்பும் தேவையில்லை. ஒவ்வொரு நூற்பாவின் இறுதியிலும் உரையைச் சொடுக்கினால் தேடுபொறிகளுடன் உரை வரும் வகையில் அமைக்க வேண்டும்.

12.] இறையனார் அகப்பொருள்

முகப்புப் பக்கத்தில் மட்டும் தேடுதல் குறிக்கப்பெற்று, அதனைச் சொடுக்கினால், பக்கம் தேடல், சொல் தேடல் வருகின்றன.

அருஞ்சொற்பொருள் அகரவரிசைப் பக்கங்களில் சொல் தேடுதலுக்கான வாய்ப்பு வழங்கப்பெறவில்லை.

13.] தொன்னூல் விளக்கம், 14.] இலக்கணவிளக்கம் 15.] தமிழ்நெறி விளக்கம், 16.] சிதம்பரப்பாட்டியல், 17.] பன்னிரு பாட்டியல், 18.] வீரசோழியம், 19.] இலக்கணக் கொத்து, 20.] முத்து வீரியம், 21.] சுவாமிநாதம், 22.] நேமிநாதம், 23.] மாறன் அலங்காரம், 24.] நவநீதப் பாட்டியல் & 25.]தமிழ் நூல்

மூலப்பகுதிகளில் பக்க எண் தேடுதல் மட்டுமே உள்ளது. பொருளடக்க / அட்டவணைப் பக்கத்தில் மட்டும் தேடுதல் குறிக்கப் பெற்று, அதனைச் சொடுக்கினால், ‘பக்கம் தேடல்’, ‘பாடல் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன.

26.] அறுவகை இலக்கணம்

பிற நூல்கள் போல் இதிலும் மூலப்பக்கங்களில் சொல் தேடுதல் வாய்ப்பு இல்லை. பொருளடக்கத் தேடுதல் தலைப்பு மூலம்,

பக்கம் தேடல்,

நூற்பா எண் தேடல்,

சொல் தேடல்

ஆகியவற்றை அடையலாம்.

27.] மாறனலங்காரம்

மூலமும் உரையும் இணைந்த பகுதியே உள்ளது. இதிலும் சொல் தேடுதல் பொறி இல்லை. ஆனால், பொருளடக்கத் தேடுதல் தலைப்பின் மூலம் ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

28-37.] பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு நூல் முகப்புப் பக்கம் இடப் பகுதியில் தேடுதல் விவரம் இல்லை. இதன் அடிப்படையில் நூல்களைத் தெரிவு செய்து பார்த்தாலும் தேடுதல் பகுதி காணப்படாது.

ஆனால், வேறு வகையில் ‘தொடக்கம்’ பகுதிக்குச் சென்று பத்துப்பாட்டு இலக்கியங்களைக் கண்டால் தேடுதல் பகுதியில் ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ உள்ளன.

இவ்வாறு பத்துப்பாட்டு நூல்களில் நன்முறையில் தேடுதல் பொறி அமைக்கவில்லை.

(தொடரும்)

-இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar_thiruvalluvan_kuralkuuttam03